பக்கம் எண் :

294பாரதம்உத்தியோக பருவம்

டியைவிசேஷித்துக் கூறினது, அவன் மகாபலபராக்கிரமசாலியான
வீடுமனைவிண்ணுலகேற்றும் ஆற்றலுடையவனாதலின்; காசிராசனது பெண்கள்
மூவரைத் தன் தம்பியான விசித்திரவீரியனுக்கு மணம் புரிவிக்கும் பொருட்டுச்
சுயம்வரத்தில் வீடுமன் வலியத் தேரேற்றிக் கொண்டுசெல்லுகையில், அரசர்கள்
பலர்வந்து பொருதுதோல்வியடைய, அவர்களுள் சிறிது போரில் முன்னிட்ட
சாலுவனிடத்து அம்பை யென்பவள் மனத்தைச் செலுத்தி வீடுமனிடத்தினின்று
நீங்கிச் சென்று சேர, அவன் 'பகைவன்கவர்ந்துபோன உன்னையான்
தொடேன்' என்று மணம் மறுத்துவிட்டதனால், அவள் பின்பு வீடுமனை
மணஞ்செய்யும் பொருட்டுப் பலவாறுமுயன்றும் பயன்படாமையால்,
வனஞ்சென்று தவஞ்செய்து அவ்வீடுமனைக் கொல்லும் பொருட்டுச் சிகண்டி
யென்னும் அலிவடிவாகத் துருபதனிடத்துப் பிறந்தனள் என்பது வரலாறு.

    மூன்றாமடியிற் குறித்தவர் இருவரும் - துருபதனுக்கு உறவினரான
பாஞ்சாலராசர். ஸம்சப்தகர்போலப் போர் தொடங்கு முன்னமே பலவகைச்
சபதஞ்செய்து பின் அவ்வாறே நடத்திக் காட்டும் வீரனிவ னென்பார்,
'ஒட்டிப்போர்பொரு முத்தமோசா' என்றார்.  வேல் - மற்றை
ஆயுதங்களுக்கும்உபலக்ஷணம்; காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட
முக்கட்கடவுட்குச்சூலவேல் படையாதலாலும், அமரரை யோம்ப அசுரரை
யழிக்கும் முருகமூர்த்திக்கு வேல் படையாதலாலும், சான்றோர்
வேற்படையையே சிறப்பப்பெரும்பான்மை கூறுதல்பற்றி, இங்கே
வேலைக்கூறி, மற்றைய படைகளையெல்லாம் 'மொழிந்த பொருளோடொன்ற
அவ்வயின் மொழியாததனையும்முட்டின்று முடித்தல்' என்னும் உத்தியாற்
பெறவைத்தார்.  யுதாமந்யு - போரிற்கோபமுடையா னென்று பொருள்.
போதகம் - பத்து வருஷத்துயானைக்கன்று; "படைதனக்கி
யானைவனப்பாகும்," யானையுடைய படைகாண்டல் முன்னினிதே" என
நால்வகைச் சேனையுள்ளும் யானை சிறப்பித்துக்கூறப்படுதலால்,
மதத்தாற்கதஞ் சிறந்து தானும் போர்செய்யும் யானையைமுதலில் வைத்துக்
கூறினார்.  இது - தமிழர் வழக்கு: வடநூலார்'ரதகஜதுரகபதாதி' என
முறைப்படுத்திக் கூறுவர்.  பரி - (பாரங்களைப்)பரிப்பது [சுமப்பது] எனக்
காரணப்பெயர்.  பாண்டவர்க்குப் பெண்கொடுத்தநெருங்கிய உறவு முறையாராதலால், பாஞ்சாலர் வருகையை முதலிற்கூறினார்.   (327)

4.

விராடபூபனுஞ்சதானிகநிருபனும்விறற்சிவேதனுமாதி
வராககேதுவுமுத்தரகுமரனுமச்சநாட்டவர்வந்தார்
பராவுபேருடைச்சேரசெம்பியருடன்பாண்டியன்முதலோருங்
குராநறும்பொழிற்கேகயத்தலைவருங்குந்திபோசரும்வந்தார்.

     (இ -ள்.) மச்சநாட்டவர் - மத்ஸ்யதேசத்தவராகிய, விராடபூபனும் -
விராடமகாராசனும், சதானிகநிருபனும் - சதாநீக னென்னும் அரசனும், விறல்
சிவேதனும் - வெற்றியையுடைய சுவேதனென்பவனும், ஆதி வராக கேதுவும்-
தலைமைபெற்ற வராககேது வென்பவனும், உத்தரகுமாரனும், வந்தார்-; பராவு
பேர்