உடை -(யாவராலும்) புகழப்படும் பெயரையுடைய, சேர செம்பியருடன்- சேரசோழ மன்னவருடனே, பாண்டியன் முதலோரும்-பாண்டியராசன் முதலானவர்களும், குரா நறுபொழில் - குரவ மலர்களின் பரிமளத் தையுடைய சோலைகளையுடைய, கேகயம் - கேகய நாட்டின், தலைவரும் - அரசர்களும், குந்திபோசரும் - குந்திபோச தேசத்து அரசர்களும், வந்தார்-; (எ - று.) விராடபூபன், சதாநீகந்ருபன், ஆதிவராககேது, உத்தரகுமாரன் - இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள். பூபன் - பூமியைக் காப்பவன், சதாநீகன் - நூறு [மிகப்பல] பெருஞ்சேனையை யுடையான்; சத அநீகம் அன் எனப் பிரியும். நிருபன் - மனிதர்களைக் காப்பவன். சதாநீகனும், வராககேதுவும் - விராடனுடைய உறவினர். சுவேதன் - விராடனது மூத்த குமாரன்: இளையவன் - உத்தரன். மேல் பாண்டவர்க்கு முதற்சேனாதிபதியாதற்கேற்ற சிறப்புத்தோன்ற, 'விறற்சிவேதன்' என விசேடித்தது. வராககேது -பன்றியின்வடிவ மெழுதப்பெற்ற கொடியை யுடையவன். அநீகம், குமாரன்என்பன - இங்குக் குறுகின. குமாரன் என்பதற்கு மன்மதனையும் குற்சிதரூபமுடையவனாக்கவல்ல கட்டழ குடையா னென்று பொருள்; கு - குத்ஸிதம்,மாரன் - மன்மதன், நீர்வள மிகுதியால் எங்கும் மீன்கள் மலிந்திருத்தல்பற்றி,மத்ஸ்யதேசமெனப் பெயர்போலும். தமிழ்நாட்டு மூவேந்த ராதலின், சேரசோழ பாண்டியரை 'பராவுபேருடை' எனச் சிறப்பித்துக் கூறினார். செம்பியன்சைப்யனென்னும் வடசொல்லின் சிதைவுபோலும்; சிபி சக்கரவர்த்தியின் மரபிற்பிறந்தவனென்று பொருள். ஒரு [சூரிய] குலத்தவராதலின், சோழனைச்செம்பியனென்பது, மேற் பதினேழாம் போர்ச்சருக்கத்தில்"விறலுடைப்புலிக்கொடிவீரன் மெய்யெலாம், புறாவினுக் கரிந்தநாட்போலமேல்விடுந், திறலுடைய வாளியாற் சிவப்பித்தானரோ" எனச் சோழனிடத்துச்சிபியின் தன்மையை ஏற்றிக் கூறிவாறுங் காண்க. குரா - ஓர்மரம்.குந்திபோசர் - பாண்டவர் தாயாகிய குந்தியின் சுவீகாரத் தந்தைமரபினர். (328) 5. | அரக்கிதந்தருள் கடோற்கசக்காளையு மபிமனோடிராவானும், விரிக்கும் வெண்குடை விந்தனுஞ் சோமனும்வீரகீர்த்தியும் போரிற், செருக்குநெஞ்சுடைப்புண்டலன்செயசெனன்செருவிடைத் தெவ்வோடத், துரக்கும்வெம்பரித் துரௌபதரைவருஞ்சூழ்படையுடன்வந்தார், |
(இ -ள்.) அரக்கி - (இடிம்பியென்னும்) இராக்கதப்பெண், தந்து அருள் -பெற்றுவளர்த்த, கடோற்கசன் காளையும் - கடோத்கசனென்னும் வீரனும்,அபிமனோடு - அபிமந்யுவும், இராவானும் - இராவா னென்பவனும், விரிக்கும்வெள் குடை - விரித்துப்பிடிக்கும் வெண் கொற்றக்குடையையுடைய, விந்தனும்-, சோமனும்-, வீர கீர்த்தியும்-, போரில் - யுத்தத்தில், செருக்கு - மிகக்களிப்புக்கொள்ளும், நெஞ்சு உடை - மனத்தையுடைய, புண்டலன் - புண்டலனும்,செயசெனன் - ஜெயசேனனும், (ஆகிய), செரு இடை தெவ் ஓட துரக்கும்வெம்பரி துரௌபதர் ஐவரும் - போரில் பகைவர்கள் (முன் நிற்கமாட்டாமல்)தோற்றோடும்படி துரத்தும் உக்கிர வேக |