முள்ளகுதிரைகளையுடைய திரௌபதியின் மக்கள் ஐந்து பேரும், சூழ்படையுடன்வந்தார் - (தந்தம்மைச்) சூழ்ந்துள்ள சேனைகளுடனே வந்தார்கள்; (எ - று.) கடோத்கச னென்னுங் குமாரன் தனது தாதையான வீமனையும் மற்றை அவனுடன்பிறந்தவரையும் விட்டுப் பிரிந்து செல்லுகையில் அன்போடு வணங்கிஅவர்கள் தன்னை வேண்டியகாலத்து நினைக்கும் படியாகவும், அங்ஙனம்நினைத்த மாத்திரத்தில் தான் வந்து உதவுவதாகவும் வாக்குத்தத்தஞ்செய்துபோய் அங்ஙனமே செய்து வந்தனன் என்பது - கீழ்ப்பருவங்களின் வரலாறு. அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை சென்ற பொழுது, அவனுக்கு உலூபியேன்னும் நாககன்னிகையினிடம் பிறந்தவன் இராவானும், கண்ணனது தங்கையானசுபத்திரையினிடம் அர்ச்சுனனுக்குப் பிறந்தவன் அபிமந்யுவும் என அறிக. விந்தன் முதலிய ஐவரும் - பஞ்பாண்டவர்க்கு முறையே திரௌபதியினிடம்பிறந்தவர்; உப்பாண்டவரெனப்படுவர். விந்தனென்பது -பிரதிவிந்த்யனென்றும், சோமனென்பது - ஸு தசோமனென்றும்வடமொழியில் வழங்கும். அருச்சுனன் மகனுக்குச் சுருதகருமாவென்றும்,நகுலன் மகனுக்குச் சதானீகனென்றும், சகதேவன் மகனுக்குச்சுருதசேனனென்றும் பெயர் வியாசபாரதத்திற் காண்கிறது; அருச்சுனன்மகனுக்குச் சுருதகீர்த்தி யென்ற பெயரும் உண்டு. பாண்டவர்களுள்மூத்தவனாய் அரசுக்கு உரிய தருமபுத்திரனது மகனாதலின் விந்தனை'விரிக்கும் வெண்குடை' என விசேடித்தும், குந்தி பௌத்திரர் போலவேமாத்திரி பௌத்திரரும் பலபராக்கிரமங்களிற் சிறந்தவரென்பார் 'போரிற்செருக்கு நெஞ்சுடைப் புண்டலன் செயசெனன்' என்றுங் கூறினார். துரௌபதர்- த்ரௌபதேயர். 'செயவிறற் சேனனும் தெவ்வோட என்றும் பாடம். (329) 6. | சீனர்சாவகர்மத்திரர்மாளவர்தெலுங்கர்வெங்கலிங்கேசர் சோனகாதிபர்கன்னடர்மாகதர்துலுக்கர்குச்சரரொட்டர் ஆனவெம்படையாதியாய்நடப்பனவையிரண்டெண்பூமித் தானைமன்னரும்வந்தனரிந்தமண்டலத்திலார்வாராதார். |
(இ -ள்.) சீனர் - சீனதேசத்தரசரும், சாவகர் -, மத்திரர்-,மாளவர்-, தெலுங்கர்-, (என்னும் இவ்வரசர்களும்), வெம் கலிங்கஈசர் - (போரிற்) கொடியகலிங்கதேசத்தரசரும், சோனக அதிபர் - சோனக தேசத்தரசரும், கன்னடர் -கர்னாடகதேசத்தரசரும், மாகதர் - மகததேசத் தரசரும், துலுக்கர்- துருஷ்கதேசத்தரசரும், குச்சரர் - கூர்ச்சரதேசத்தரசரும், ஒட்டர் - ஒட்ரதேசத்தரசரும்,ஆதி ஆய் ஆன - முதலாக உள்ள, வெம் படை நடப்பன தானை - கொடியஆயுதங்களோடு செல்வனவான சேனைகளையுடைய, ஐயிரண்டு எண் பூமிமன்னர்உம் - ஐம்பத்தாறுதேசத்து அரசர்களும், வந்தனர்-; இந்த மண்டலத்தில்ஆர் வாராதார் - இந்தப் பூமண்டலத்தில் வாராதவர் யாவர்? [எவருமில்லை,எல்லோரும் வந்தனர்]; (எ - று.) தெலுங்கம் - த்ரிலிங்கதேச மெனப்படும். ஐயிரண்டு - ஐந்தும் இரண்டும்; ஏழு; ஐயிரண்டு எட்டு - ஏழாகிய எட்டு; ஐம்பத்தாறாம். |