பக்கம் எண் :

உலூகன் தூது சருக்கம் 3

வெங்கோமான்கண்டீர்"என்னும் பெரிய திருமொழியையும், "பாருக்கரந்தை
தவிர்ப்பதற்காகப் பழிப்பில்பெருஞ் சீருற்றசெங்கட் கரும்பன்றியாகித்
திருக்குளம்பின் மேருக் கணகணமாத் தலைநாளில்விநோதிப்பரே" என்னுந்
திருவரங்கத்துமாலையையும், "குரமத்யகதோ யஸ்யமேரு: கணகணாயதே"
என்னும் வடநூல் மேற்கோளையுங் காண்க.  தேவர் மனிதர் விலங்கு முதலிய
பிராணிகளாலும், ஐம்பெரும் பூதங்களாலும், ஆயுதங்களாலும் தனக்கு
மரணமில்லாதபடி அளவற்ற வரங்களைப்பெற்றுத் தேவர் முதலிய
யாவர்க்குங்கொடுமையியற்றித் தன்னையேகடவுளாக வணங்கச்செய்த
(இரணியாக்கனது உடன்பிறந்தவனான) இரணியன் தன்புத்திரனும்
மகாவிஷ்ணுபக்தனுமான பிரகலாதாழ்வான் தன்பெயர்சொல்லிக் கல்விகற்காமல்
நாராயணநாமஞ் சொல்லி வரவே அவனைக்கொல்லுதற்கு என்ன
உபாயஞ்செய்தும் அவன் பகவானருளால் இறந்திலனாக இரணியன் மகனை
நோக்கி, 'நீ சொல்லும் நாராயணனென்பான் எங்கு உளன்? காட்டாய்' என்ன,
அப்பிள்ளை "சாணினுமுளனோர் தண்மையணு வினைச்சதகூறிட்ட
கோணினுமுளன் மாமேருக்குன்றிலுமுளன் இந்நின்ற தூணிலுமுளன் நீ சொன்ன
சொல்லிலுமுளன் இத்தன்மை, காணுதிவிரைவின் என்று சொல்ல உடனே
இரணியன் நன்றென்று சினந்து தூணைப்புடைக்க, அதில் நின்றும் பகவான்
நரசிங்கவுருவமாய்த் தோன்றித், திருக்கைந் நகங்களால் அவன் மார்பைப்
பிளந்து அழித்திட்டார். மகாபலியென்னும் அசுரராசன் தன்வல்லமையால்
இந்திரன் முதலிய யாவரையுஞ்சயித்து மூவுலகங்களையும் தன்வசப்படுத்தி
அரசாண்டு செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்த தேவர்கள்
திருமாலைசரணமடைந்துவேண்ட, அவர் குள்ள வடிவமான
வாமனாவதாரமெடுத்துக் காசியப முனிவருக்கு அதிதி தேவியினிடந் தோன்றிப்
பிராமணப் பிரமசாரியாகி வேள்வியியற்றி யாவர்க்கும்வேண்டிய அனைத்தையுங்
கொடுத்துவந்த  அப்பலியினிடஞ் சென்று, தவஞ் செய்தற்குத் தன் காலடியால்
மூவடி மண்வேண்டி அது கொடுத்தற் கிசைந்து அவன் தத்தஞ்செய்த நீரைக்
கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாக ஆகாயத்தை அளாவி வளர்ந்து
ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் அளந்து மற்றோரடியால்
அவனையும் பாதாளத்தி லழுத்தி அடக்கினார்.  உலகத்திலே எவரும்
அழிப்பாரில்லாமையால் கொழுத்துத்திரிந்து கொடுமையியற்றிவந்த
க்ஷத்திரியவம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்யும்பொருட்டு நாராயணமூர்த்தி
ஜமதக்நிமுனிவரது மனைவியான ரேணுகையிடம் ராமனாய் திருவவதரித்து, பரசு
என்னுங் கோடாலிப்படையையே ஆயுதமாககொண்டு தமதுதந்தையின்
ஓமதேனுவைக்கவர்ந்து அவனை கொன்றிட்டது காரணமாகக்
கார்த்தவீரியார்ச்சுனனையும் அவன் குமாரர்களையுங் கொன்று அழித்து,
அதனாலேயே க்ஷத்திரியவமிசம் முழுவதன்மேலுங் கோபாவேசங்கொண்டு,
உலகத்திலுள்ள அரசர்கள் பலரையும் இருபத்தொருதலைமுறை பொருது
ஒழித்திட்ட ஒருகாலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன் முதலிய
ராக்ஷசர்களின் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச் சரண