வீரர்கள் தமது வீரத்துக்கு ஓர்அறிகுறியாகக் காலில் அணிவதோர் ஆபரணம்; 'வீரத்தின் வீக்கிய, கழலேயாடவர் கான்மிசை யணி வடம்," என்பதனாலும்அறிக. மின் - மின்னல் போல மெல்லியளாய் விளங்கும் பெண்ணுக்குஉவமையாகுபெயர். மின்னுவது, மின் எனக் காரணக்குறி. முரசறைந்துஎன்பதற்கு, தருமன் - ஏவுதற்கருத்தா; முரசறைவித்து என்க. (336) 13.-கவிக்கூற்று. பாண்டுவின்றிருமைந்தர்களைவரும்பார்த்திவருடன்கூடி யீண்டிருந்தனரிவ்வுழிச்செருக்குறித்தெழிலிமேனியனோடுந் தூண்டுவெம்பரித்தேர்த்துரியோதனன்றூதுபோய்ப்பரந்தாமன் மீண்டுவந்தபின்னவ்வுழிப்புரிந்தனவிளம்புகின்றனமன்னோ. |
(இ - ள்.) பாண்டுவின் திருமைந்தர்கள் ஐவரும் - பாண்டு மகாராசனதுசிறந்த குமாரர்களான (தருமன் முதலியோர்) ஐந்து பேரும், பார்த்திவருடன்கூடி - மற்றையரசர்களுடனே சேர்ந்து, செரு குறித்து - போர்செய்யவிருப்பதை வெளிப்படுத்தி, எழிலி மேனியனோடும் - மேகம்போலக் கரியதிருமேனியையுடைய கண்ணபிரானுடனே, இ உழி - இவ்விடத்தில்[உபப்பிலாவியத்தில்], ஈண்டு இருந்தனர் - இவ்வாறு இருந்தார்கள்; (இது நிற்க),அ உழி - அவ்விடத்தில் [அஸ்தினாபுரியில்], தூண்டும் வெம்பரிதேர்துரியோதனன் - செலுத்தப்படுங் கொடியகுதிரைகள் பூட்டுந் தேரையுடையதுரியோதனராசன், பரந்தாமன் தூது போய் மீண்டு வந்த பின் - கண்ணபிரான்தூதுசென்று திரும்பிவந்த பின்பு, புரிந்தன - செய்தகாரியங்களை,விளம்புகின்றனம் - (இனிச்) சொல்லத் தொடங்குகிறோம்; (எ - று.)
அரசாட்சிச்செல்வம் இவர்களை நணுகஇருத்தல்பற்றியும், 'திரு மைந்தர்கள்' என்றார் போலும். மைந்து - வலிமை, இளமை, அழகு; அதனையுடையவர் - மைந்தர். எழிலி - எழுதலையுடையதென மேகத்துக்குஏதுப்பெயர். தேர் - மற்றை அங்கங்களுக்கும் உபலட்சணம். பரந்தாமன் -(எல்லாவுலகத்திலும்) மேலான இடத்தை [பரமபதத்தை] யுடையவன்; சிறந்தசோதிவடிவானவ னென்றும் பொருள் கொள்ளலாம். தாமம் - இடமும்,ஒளியுமாம். துரியோதனன் என்பதற்கு - (பகைவர்க்குக்) கொடியபோரையுடையா னென்று பொருள்; யோதநம் - யுத்தம். (337) வேறு. 14.-தனக்குப் போர்த்துணையாகும்படி துரியோதனன் எல்லாவரசர்க்கும் செய்தி தெரிவித்தல். முந்தரவுயர்த்தோனோலைமுடியுடையரசர்காண்க வெந்திறலைவரோடும்வெஞ்சமர்விளைந்ததம்மா தந்தமகிளைஞரோடுஞ்சாதுரங்கத்தினோடும் வந்தவர் தமக்கேவாழ்வுமுழுதுமென்றெழுதிவிட்டான். |
|