பக்கம் எண் :

310பாரதம்உத்தியோக பருவம்

(எ - று.)- அன்றே - ஈற்றசை;தேற்றமுமாம்: அப்பொழுதே யென்றுங்
கொள்ளலாம். 

    சதமகற்குவமைசாலும் என்பதற்கு - இந்திரனினுஞ் சிறந்தவென்று
பொருள் : உபமேயத்தினும் உபமானஞ் சிறந்திருக்க வேண்டுமென்பது,
அலங்கார நூலார் கொள்கை.  எனை - எத்தனை யென்பதன் மரூஉ.
சதமகனென்னும் சொல்லுக்கு - பூமியைக் காப்பவனென்றும் பொருள்.
இவ்வுலகத்தில் நூறு அசுவமேதயாகங்களைச் செய்தவன் மறுமையில்
தேவேந்திர பதவி பெறுகின்றன னென்பது, நூற்கொள்கை.  தரணி -
(எல்லாப்பொருள்களையுந்) தரிப்பது.  சூழ்ந்து - சூழ; எச்சத்திரிபு.
'நதியினம்','எதிருற' என்றும் பாடம்.                     (347)

24.-துரியோதனன் வீடுமனைச்சேனாதிபதியாக்குதல்.

பரசுடையிராமன்பாதபங்கயஞ்சென்னியேந்தி
வரிசிலைவேதங்கற்றுமற்றவன்றனையும்வென்ற
குரிசிலைக்கங்கைதந்தகுருகுலக்கோமான்றன்னை
அரசன்வெஞ்சேனைக்கெல்லாமதிபதியாக்கினானே.

     (இ - ள்.) பரசு உடை இராமன் -கோடாலிப்படையையுடைய பார்க்கவ
ராமனது, பாத பங்கயம் - திருவடித்தாமரைமலர்களை, சென்னி ஏந்தி -
(தனது)முடியின்மேற் கொண்டு, வரி சிலை வேதம் கற்று - கட்டமைந்த
வில்வித்தையை (அவனிடத்து)க் கற்று, மற்று - பின்பு, அவன் தனையும்
வென்ற - அப்பரசுராமனையே சயித்த, குரிசிலை - பெருமையிற் சிறந்தவனும்,
கங்கை தந்த - கங்காநதி பெற்ற, குரு குலம் கோமான் தன்னை -
குருவமிசத்துக்குத் தலைவனுமான வீடுமனை, அரசன் - துரியோதனராசன்,
வெம் சேனைக்கு எல்லாம் அதிபதி ஆக்கினான் - உக்கிரமான சேனைக
ளெல்லாவற்றிற்குந் தலைவனாக்கினான்; (எ - று.)

    உலகத்திலே எவரும் அழிப்பவரில்லாமையாற் கொழுத்துத் திரிந்து
கொடுமையியற்றிவந்த க்ஷத்திரிய வம்சங்கள் பலவற்றைப் பற்றற
நாசஞ்செய்யும்பொருட்டு, நாராயணமூர்த்தி, ஜமதக்நி முனிவரது மனைவியான
ரேணுகையினிடம் ராமனாய்த்திருவவதரித்து, பரசு என்னுங் கோடாலிப்
படையையே ஆயுதமாகக் கொண்டு, தமது தந்தையின் ஓமதேனுவைக்
கவர்ந்துஅவரைக் கொன்றிட்டது காரணமாகக் கார்த்தவீரியார்ச்சுனனையும்
அவனதுகுமாரர்களையுங் கொன்று அழித்து அதனாலேயே க்ஷத்திரிய வம்சம்
முழுவதன் மேலுங் கோபாவேசங்கொண்டு, உலகத்திலுள்ள அரசர் பலரையும்
இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டார்.  இவர், திருமாலின்
ஆறாவது திருவவதாரம்:  (ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்; மற்றையோர் -
அசுவத்தாமா, பலி, வியாசன், அநுமான், விபீஷணன், கிருபன் என இவர்.)
இவரிடம் வீடுமன் வில்வித்தை கற்றுத் தேர்ந்ததை "பூந்துழாய் மாலைப்
போர்மழுப் படையோன் பொன்னடி பொலிவுற வணங்கி, யேந்துநீள் சிலையும்
பலகணை மறையு