பக்கம் எண் :

312பாரதம்உத்தியோக பருவம்

ஆறாவது

முகூர்த்தங் கேள்விச்சருக்கம்.

     [துரியோதனன் தனக்குவெற்றியுண்டாகுமாறு போர்க்களத்துக்கு
உரியதெய்வத்துக்குப் பலிசெலுத்துவதற்கு] நல்லதொரு வேளையைக் குறித்துத்
தரும்படி (பாண்டவருள் இளையவனான சகதேவனைக்) கேட்ட செய்தியைக்
கூறும் பாகம்.  முகூர்த்தம் - பொழுதென்று பொருள்; இரண்டு நாழிகை
[நாற்பத்தெட்டு நிமிஷங்] கொண்ட காலத்துக்கு முகூர்த்தமென்று பெயர்.
கேள்வி - கேட்டல்; தொழிற்பெயர்; வி - விகுதி.

1 - கடவுள் வணக்கம்.

கயம்படுமனத்தனாயகண்ணிலாவரசன்மைந்தன்
வயம்படநினைந்துகங்குல்வகுத்ததோர்சூழ்ச்சிதன்னாற்
பயம்படுமல்லரோடுபாதலமடியநீண்ட
சயம்படுகமலத்தாளென்றலைமிசையகல்கிலாவே.

     (இ - ள்.) கயம்படு மனத்தன் ஆய -கீழ்மை பொருந்தின
மனத்தையுடையவனான, கண் இலா அரசன் மைந்தன் - பிறவிக்குருடனான
திருதராட்டிர மகாராசனது குமாரனான துரியோதனன், வயம் பட நினைந்து -
(தனக்கு) வெற்றியுண்டாகுமாறு ஆலோசித்து, கங்குல் வகுத்தது - இராத்திரி
காலத்திலே அமைத்து வைத்ததான, ஓர் சூழ்ச்சிதன்னால் - ஒரு
தந்திரத்தினால், பயம்பு அடு மல்லரோடு பாதலம் மடிய நீண்ட -
பெருங்குழியிலே பொருந்தின மல்லர்களுடனே பாதாளலோகத்தவரும்
அழியும்படி நெடிதாக வளர்ந்த, சயம் படு கமலம் தாள் - வெற்றி பொருந்திய
செந்தாமரை மலர் போன்ற (ஸ்ரீ கண்ணபிரானது) திருவடிகள், என் தலைமிசை
- அகல் கிலா - எனது சிரத்தின்மேல் (எப்போதும்) நீங்கமாட்டா; (எ - று.)-
ஏ - தேற்றம்; ஈற்றசையுமாம்.

     "கோளில் பொறியிற் குணமிலவேயெண்குணத்தான், தாளை
வணங்காத்தலை" என்றபடி, எம்பெருமான் திருவடிகளை வணங்குபவரே
தலைபடைத்தபயன் பெறுபவராதலால், இவ்வாறு கூறினார்.  தா ளென்
தலைமிசை யகல்கிலா- எப்பொழுதுந் திருவடிகள் அடியேனது
முடியின்மீதுபடும்படி சாஷ்டாங்கமாகவிழுந்து நமஸ்கரிப்பேன் என்றதாம்.
விசித்திரவீரியன் மனைவியருள்ஒருத்தியான அம்பிகை கணவனை
யிழந்தபின் சந்ததி விருத்தியின் பொருட்டுமாமியார் கட்டளைப்படி
மைத்துனனான வியாசமா முனிவனோடு சேருகையில்கூச்சத்தாற் கண்
விழியாதிருந்ததனால், அவளிடம் திருதராட்டிரன் பிறவிக்குருடனாகப்
பிறந்தான்.  'கயம்படுமனத்தனாய' என்ற அடைமொழி -கண்ணிலா
வரசனுக்கும், அவன் மைந்தனுக்கும் இயையும்.   'கண்ணிலாவரசன்
மைந்தன்' என்ற சொற்போக்கு தந்தை ஊனக்கண் குருடன், மைந்தன்
ஞானக்கண் குருடன் என்ற