பக்கம் எண் :

316பாரதம்உத்தியோக பருவம்

பால்சேறலும் - அப்பாண்டவர்களுள் ஒருவனது[அருச்சுனனது] குமாரனான
படம்பொருந்தின தலையையுடைய இராவானிடத்திற் போனவளவிலே,
(அவன்),பணிந்து - வணங்கி, தாதை - (தனக்குத்) தந்தைமுறையான
துரியோதனன்(கூறின), உய்வரு வரம் - (அவன்) பிழைத்தற்குக் காரணமான
வரத்தை, கேட்டு- (இன்னதெனக்) கேட்டறிந்து, (மறுக்காமல்
அவ்வேண்டுகோளுக்குஉடன்பட்டு), 'என்னை நீ பலி ஊட்டுக' என்றான் -
என்னை நீ (கொன்று) பலிகொடுத்திடுவாயாக என்று கூறினான்;
(கூறினவுடனே), எய்வரு சிலையினானும்- (அம்புகளை) எய்து வருகிற
வில்லையுடைய துரியோதனனும், பெற்றனன்என்று மீண்டான் - (இனி யான்
எல்லா வாழ்க்கையையும்)பெற்றவனாவேனென்று (மகிழ்ச்சியோடு தன்
ஊர்க்குத்) திரும்பிவந்தான்; (எ -று.)

    பெரியவன் வார்த்தையை மறுத்தற்கு அஞ்சி அரிய இதற்கு
உடன்பட்டனன் என்பார் 'தாதை யுய்வருவரங் கேட்டு' என்றார்.  தாதை
உய்வுஅருவரம் - தன் தந்தையான அருச்சுனன் பிழைத்தல் கூடாத வரம்
எனினும்ஒக்கும்.  வரம் - வேண்டுவன கொள்ளுதல்.  துரியோதனன் அற்றை
நாளிரவிலேயே இராவானிடஞ் சென்று "இவ்வளவும் யார்பாலுஞ் சென்றொன்
றிரந்தறியே, னெவ்வளவும் வந்தறியே னென்மகனீ - செவ்வி,
வருந்தருவாயாகென்று" வாழ்த்தி வேண்ட, அதுகேட்ட இராவான் 'நீ
வேண்டும்வரம் வேண்டுக, தவறாது தருவேன்' என்ன, இவன் 'உன்னைப்
பலி கொடுக்கவேண்டும்' என்ன, அங்ஙனமே அவன் அவ்வேண்டுகோளை
மறாது 'எங்களில்உங்களைப்போல மறுத்து இரண்டு உரைப்பார் இல்லை
கண்டாய்' என்று கூறிஉடன்பட்டனன் என்பர் பராதவெண்பாவில்.
செம்மையென்னும் பண்புப்பெயர்,ஈறுபோய் ஆதி நீண்டு முன் நின்ற
மகரமெய் யகரமாகத்திரிந்து, 'சேய்' எனநிற்கும்;  இது - முதலில் செம்மை
நிறத்தையுடைய முருகக்கடவுளுக்குப்பண்பாகு பெயராய், பின்பு
(குமாரனென்னும் வடமொழிபோல) அச்சுப்பிரமணிய மூர்த்திபோலப் பல
பராக்கிரமங்களிற் சிறந்த இளவீரனுக்குஉவமையாகுபெயராக வழங்குதலால்,
இருமடியாகுபெயர்; இனி, 'செய்யவன்'என்பது சேய் என விகாரப்பட்டது'
என்பாரு முளர்.  நாககன்னிகைகுமாரனாதலால், 'பைவருமுடியோன்'
எனப்பட்டான்; இனி 'பை' என்பதைப்பசுமை யென்னும்
பண்புப்பெயர்த்திரிபெனக்கொண்டு, (சிறந்தபொன்மயமானதனால்) பசுமையாய்
வருகிற கிரீடத்தையுடையவனென்றுஉரைத்தலுமொன்று.             (353)

முகூர்த்தங்கேள்விச்சருக்கம் முற்றிற்று.

------