பக்கம் எண் :

318பாரதம்உத்தியோக பருவம்

பக்கத்திலிருந்தவன் போலக் காணப்பட்டதுமாத்திரமேயன்றி, ஏககாலத்தில்
பலவடிவங்கொண்டு அவர்களிடையிடையே நின்று ஒவ்வொருத்தியது
இவ்விருகைகளிலுந் தன்கைகளிரண்டும் பொருந்த ஆடியருளின னென்பதும்;-
கம்ஸனாலேவப்பட்ட கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன்
தன்கீழ் வரும்போது மேல்விழுந்து கொல்வதாக எண்ணி வந்து நிற்க,
அதனையறிந்து கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும்
பொருட்டுக் கன்றின் வடிவங்கொண்டு வந்து தான் மேய்க்குங் கன்றுகளோடு
கலந்திருந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச்
சுழற்றி விளாமரத்தின்மே லெறிய, இருவரும் இறந்து தமது அசுர
வடிவத்துடனே விழுந்திட்டன ரென்பதும்;- யமுநாநதியில் ஓர் மடுவிலிருந்து
கொண்டு அந்நதிமுழுவதையும் தன் விஷாக்கினியினாற் கொதிப்படைந்த
நீருள்ளதாய்ப் பானயோக்கிய மாகாதபடி செய்துவந்த காளியனென்னுந்
துஷ்டநாகத்தைக் கிருஷ்ணபகவான் தண்டிக்க வேண்டுமென்று திருவுள்ளம்
பற்றி, அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்ப மரத்தின் மேலேறி
அம்மடுவிற் குதித்துக் கொடிய அந்நாகத்தின் படங்களின் மேல்ஏறி இரு
காலாலுந் துவைத்து நர்த்தனஞ்செய்து நசுக்கி வலியடக்கி, பின்பு மங்கலிய
பிக்ஷையிடவேண்டுமென்று தன்னை வணங்கிப் பிரார்த்தித்த
நாககன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி உயிரோடு கடலிற் சென்று
வாழுமாறுஅந்தக் காளியனை விட்டருளின னென்பதும்;- ஸ்ரீராமலக்ஷ்மணர்
விசுவாமித்திரமகாமுனிவனது வேள்வியை முடித்த பின்னர்
அம்முனிவனுடனே மிதிலாபட்டணத்துக்குச் சென்று அங்குச்
சனகமகாராசனாற் கந்யாசுல்கமாகவைக்கப்பட்டிருந்ததும், அறுபதினாயிரம்
வீரர் அரிதின் எடுத்துவரற்பாலதுமாகிய சிவதனுசை ஸ்ரீராமமூர்த்தி எடுத்து
வளைத்து நாணேற்றமுயலுகையில், அது முறிபட, பின் சீதாபிராட்டியைத்
திருமணம் புரிந்தனனென்பதும்;- கம்ஸன் கிருஷ்ண பலராமர்களைக் கொல்ல
நிச்சயித்துத்தநுர்யாக மகோத்ஸவ மென்று ஒரு வியாஜம்வைத்து அவர்களை
வரவழைக்க,அங்ஙனமே கண்ணபிரான் நம்பி மூத்தபிரானுடனே
கோகுலத்தினின்றுமதுரைக்கு வந்து வில்லின் சாலையிலெழுந்தருளி, அங்குக்
காவலாளராற்காட்டப்பட்ட வில்லை யெடுத்து வளைத்து நாணேற்றுகையில்,
அவ்வில்ஒடிந்ததென்பதும்; - இதிற் குறித்த கதைகள்.

     ஆயர் - பசுக்களையுடையவ ரெனஇடையர்க்குக் காரணப்பெயர்.
'மாதர் காதல்' என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின்படி விருப்பத்தை
யுணர்த்தும்மாதர் என்னும் உரிச்சொல் - விரும்பப்படுகிற அழகுள்ள
பெண்களுக்குஆகுபெயர்.  குரவையாவது - கைகோத்தாடும் கூத்து:
"குரவைக் கூத்தே கைகோத்தாடல்" என்பது திவாகரம்; பலபேர் வட்டமாய்
நின்று சித்திரமானதாள லயைகளுடன் மெதுவாகவும் உன்னதமாகவுங்
கூத்தாடுதல் இதன்இலக்கணமாம்.  'குரவை யென்பது காமமும் வென்றியும்
பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும்
ஒன்பதின்மரேனும் கைபிணைந்து ஆடுவது; "குரவை யென்பது கூறுங்காலைச்,
செய்தோர்