செய்தகாமமும் விறலும், எய்தக் கூறுமியல்பிற் றென்ப" எனவும், "குரவை யென்ப தெழுவர் மங்கையர், செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து, அந்நிலை கொட்பநின் றாடலாகும்" எனவுஞ் சொன்னாராதலின்' என்பது, சிலப்பதிகாரத்து அடியார்க்கு நல்லாருரை. கன்று - பசுவின் இளமைப் பெயர்;"யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையு மானோடைந்துங் கன்றெனற்குரிய" என்பது, தொல்காப்பியத்து மரபியல். அடியார்களை அருளுடன் நோக்கி நோக்கிக் கண்கள் சிவந்திட்டனபோலு மென்பார், 'செங்கண்மால்' என்றார். மால் = பெருமை; அல்லது மாயை; அல்லது, அடியவர்களிடத்து மிகுந்த விருப்பம்; அதனையுடையவனுக்குப் பண்பாகுபெயர். தானொருவன் கடவுளையறிந்து அன்புகூர்ந்து வணங்கி அப்பயனைத் தான் மாத்திரமே யடைதலினும் சிருஷ்டி தொடங்கித் தன் கோத்திரத்தாரையுந் தன்னொடு கூட்டி வணங்கி அவர்க்கும் அப்பயனை அடைவித்தலே சிறந்ததெனக் கருதி, அவர்களை உளப்படுத்திய தன்மைப்பன்மையால் 'எங்கள்கோ' என்றார். ஈற்றேகாரத்தைப் பிரிநிலையாக்கிமால் என்பதனோடு கூட்டின், "மறந்தும் புறந்தொழாமாந்தர்" என்றபடிதேவதாந்தரங்களைத் தமக்குநாயகனாகக் கொள்ளாதவர் இவ்வாசிரியரெனவிளங்கும். (354) 2.-கண்ணன் சதுரத்தசியைஅமாவாசையாக மாற்றுதல். கொடுத்தனன்பலிக்குத்தன்னைக்குமரனென்றறிந்துகுன்ற மெடுத்தவன்றிதிபன்னான்கினிடையுவாவின்றாகென்று தொடுத்தநூன்முனிவரோடுஞ்சொல்லினன்சுடர்கடம்மி லடுத்ததிங்கென்னையென்னவன்றதுவாயதன்றே. |
(இ -ள்.) 'குமரன் - (அருச்சுனனது) குமாரனான இராவான், தன்னை பலிக்கு கொடுத்தனன் - தன்னைப் பலியிடும்படி (துரியோதனனுக்குக்) கொடுத்திட்டான்,' என்று-, குன்றம் எடுத்தவன் - கண்ணன், அறிந்து-,-திதி பன்னான்கின் இடை - (அமாவாசைக்கு முந்தின தினமான) சதுர்த்தசி திதியினன்றைக்கே, இன்று உவா ஆக என்று - இன்றையதினம் அமாவாசையாகக்கடவதென்று, தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் - (ஒன்றோடொன்று சொற்கள்) தொடரப்பெற்ற சாஸ்திரங்களை வல்ல முனிவர்களுடனே கூறியருளினான்; (சொன்னவளவிலே), சுடர்கள் தம்மில் இங்கு அடுத்தது என்னை என்ன - சூரிய சந்திரர் தங்களுக்குள் இப்பொழுது நேர்ந்தது என்ன வென்று ஆராய்ச்சிசெய்ய, அன்று அது ஆயது - அப்பொழுது அமாவாசையாயிற்று; (எ - று.)-அன்றே - ஈற்றசை. துரியோதனனுக்குச் சகதேவன் நாள்வைத்துக் கொடுத்ததையும் அவனுக்குஇராவான் களப்பலிக்கு உடன்பட்டதையும் கண்ணபிரான் அறிந்து, அந்தநாளைமாற்றவும், இராவானைத் தமக்காக்கிக் கொள்ளவுங் கருதி, முந்தினநாளாகியசதுர்த்தசி யன்றைக்கே அமாவாசையை வரும்படி தமது திவ்யசக்தியால்செய்து, முனிவர்கள் முதலிய பலரை நோக்கி இன்றைக்கே அமாவாசையென்றுகூற, யாவருங் கண்ணன் கட்டளைப்படியே அதனைக் கொண்டாடினர்; |