பக்கம் எண் :

330பாரதம்உத்தியோக பருவம்

சேஷனதுஅம்சமுங் கலந்திருந்தது.  வசுதேவனுடைய பத்தினிகளுள்
தேவகியின் கருப்பத்தில் ஆறுமாசமும், ரோகிணியின் கருப்பத்தில்
ஆறுமாசமும் இருந்து பிறந்தவன், இவன்.  இவனிடந் துரியோதனன்
கதாயுதப்பயிற்சியை விசேஷமாகக் கற்றுக் கொண்டதுபற்றி, இவனுக்குத்
துரியோதனனிடம் பக்ஷபாதமுண்டு: தனது தங்கையான சுபத்திரையைத்
துரியோதனனுக்குந் தனது மகளான வற்சலையைத் துரியோதனனது
மகனானலக்ஷணகுமாரனுக்கும் மணஞ்செய்விக்கக் கருதியிருந்த எண்ணம்
நிறைவேறாதபடி, கிருஷ்ணன்சுபத்திரையை அருச்சுனனுக்கும் வற்சலையை
அருச்சுன குமாரனான அபிமந்யுவுக்குந் தந்திரமாக மணஞ் செய்துவைத்தும்,
இவனுக்குப் பழைய அபிமானந் துரியோதனனிடத்தில் நீங்காதிருந்தது;
அங்ஙனமிருந்தும் பாண்டவசகாயனான கண்ணனுக்கு மாறாகத் தான் எதிர்ப்
பக்கத்திலிருந்து போர்செய்தல் தகாதென்றும் துரியோதன னழிதலைத் தான்
அருகிலிருந்து கண்ணாற்பார்க்க மனமில்லாமலும் புறப்பட்டுத் தீர்த்தயாத்திரை
போய்விட்டனன் இவனென்க.  "உலக, நின்னதெனல் பொய்ம்மையல வங்கவ
ரடங்கவுயிர் நீங்குவது திண்ணமினியான், பன்னரவகேதனன் விளிந்திடுத
லென்வழி படாதகல்வ னீர்படியவே" என்றார் நல்லாப்பிள்ளை பாரதத்தில்.

    "நயனங்கள் முதலான வைம்புலனு மனமும்போ னகரியெய்திப்,
பயன்விஞ்சு தொழிலினராய்ப் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை"
எனக்கீழ் இராசசூயச்சருக்கத்திலும் பஞ்சபாண்டவர்க்குப்
பஞ்சேந்திரியங்களும்,கண்ணனுக்கு மனமும் உவமை கூறப்பட்டவாறு காண்க.
பஞ்சஇந்திரியங்களைக்கொண்டு தொழில் நடத்துவது மனமேயாதல்போல,
பஞ்சபாண்டவர்களைக்கொண்டு தொழில்நடத்துபவன் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியே
யாதலால், இவ்வுவமை ஏற்கும்.  ஐம்புலன்கள் ஐவர்க்கும், நெஞ்சம் மாலுக்கும்
உவமையாக முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்.
ஐம்பொறிகள் - மெய் வாய் கண் மூக்கு செவி என்பன: அவற்றின் புலன்கள்-
முறையே ஸ்பர்சம் ரஸம் ரூபம் கந்தம் சப்தம் என்பன; ஊறு சுவை ஒளி
நாற்றம் ஓசை எனப்படும்,  ஒருங்கு - இடைச்சொல்.  'முன்ன' எனப் பிரித்து
உரைத்தல் மோனைத் தொடைக்குப் பொருந்தாதாம்.  'பின் மதித்த போர்' எனஎடுத்து, தனக்குப்பின் பிறந்த [தம்பியான] கண்ணன் நடத்தக்கருதின
போரென்று உரைப்பாருமுளர்; அவ்வுரைக்கு, பின் - காலவாகுபெயராம்.
கடும்புனல் என்பதில், கடுமை யென்னும் பண்புப்பெயர் விகாரப்பட்ட
தென்றாவது, கடியென்னும் உரிச்சொல் ஈறுதிரிந்த தென்றாவது கொள்க.
இங்கே 'நதிகள்' என்றது, மற்றைப் புண்ணிய தீர்த்தங்களுக்கும் உபலக்ஷணம்.
நண்பொடு - பக்ஷபாதமில்லாமல் நடுவுநிலைமையாகவேயென்றபடி.  (336)

5.-பலராமனும் விதுரனும்பலதேயங்களில்
தீர்த்தயாத்திரைக்குச் செல்லுதல்.

போனவெம்பலபத்திரன்பொருபூசலிற்புகுதேனெனா
மானவெஞ்சிலைமுன்னிறுத்தவிதுரனோடுமகிழ்ந்துபோய்க்
கானகங்களில்வரையில்வாழ்முனிகணம்விரைந்தெதிர்கொள்ளவே
நானமெங்கணுமாடுவானிருநாலுதிக்கினுநண்ணினான்.