அழகியதுவசங்களுடைய வரிசைகளின் சீலைகளால், பொலம் தரு நிலத்தவர் விழிதுடைப்பன - பொன்மயமான கற்பக விருட்சங்களை யுடைய சுவர்க்கலோகத்திலுள்ள அத்தேவர்களது கண்களைத் துடைப்பன; இப்படி சரதம் - இவ்வாறு செய்தல் உண்மையாம்; (எ - று.) பிறர்க்கு வருத்தமுண்டாகும்படி முன்னே கலகம் விளைத்துப் பின்பு அவரைக் கண்துடைத்துச் சமாதானப்படுத்துபவரது தன்மை தேரினிடத்து ஏற்றிக் கூறப்பட்டதனால், பின்னிரண்டடி - தற்குறிப்பேற்றவணி. "அன்னபோலெனு மவைமுதலாகிய, சொன்னிலை விளக்குந் தோற்றமுடைத்தே"என்றபடி அன்ன, போல, நினைக்கின்றேன், நிச்சயம், உண்மை, துணிவுமுதலிய சொற்களைப் புணர்த்து விளக்குதல் இவ்வணிக்கு ஓரிலக்கணமாதலுமுள்ளதாதலால்,' 'இப்படிசரதம்' என்றார். தேர்க்குதிரை காற்புழுதிகள்வானத்து எழுந்து சென்று தேவர்களது இமையாக் கண்களிற் பதிந்துஅவர்களது கண்களை வருத்து மென்பார், 'குரதுகட்கொடு கலகமிட்டு' என்றும்அங்ஙனந் துகள்பட்டு வருந்துங் கண்களைத் தேர்க்கொடிச்சீலைகள் துடைத்துஅவ்வருத்த மொழிக்குமென்பார், 'அணிகொடிநிரைத்துகில் கொடு பொலந்தருநிலத்தவர் விழி துடைப்பன' என்றுங் கூறினார். முன்னிரண்டடி- உயர்வுநவிற்சி.மணித் திகிரி யென்பதற்கு - இரத்தினங்கள் பதிக்கப்பட்ட சக்கரமென்றும், திகிரியின் முனைபடில் என்பதற்கு - சக்கரங்களின் எதிரிற் பட்டாலென்றும் பொருள் கொள்ளலாம். பெரிய மலைகளையும் பாதாளத்தில் அழுத்த வல்லன என்றது - தேரின் வலிமிகுதியையும், இவுளியின்குரதுகட்கொடு கலகமிட்டு என்றது - குதிரைகளின் வலிமையையும், அணிகொடி நிரைத்துகில் கொடு பொலந்தரு நிலத்தவர் விழிதுடைப்பன என்றது - தேர்களின் உயர்ச்சியையுங் குறிப்பிக்கும். பொன்+ தரு = பொலந்தரு: இது - "பொன்னென் கிளவியீறு கெட முறையின், முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ், செய்யுண் மருங்கிற் றொடரியலான" என்னுந் தொல்காப்பிய விதியாற் புணர்ந்தது. இதனை நன்னூலின்படிபொலம் தரு - எனப்பிரித்து மகர வீற்று விதியாற் புணர்க்க: பிற்காலத்துநிகண்டு திவாகரங்களில் பொலமென்றே ஒரு பெயர் கூறியவாறுங் காண்க. பொன்னுலகமாகிய தேவலோகத்திலுள்ள பொருள்களெல்லாம் பொன்மயமாதலால், பொலந்தரு எனப்பட்டது. இனி 'பொலம்' என்பதை நிலமென்பதனோடு கூட்டலுமாம். சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கல்பகம், அரிசந்தன மெனத் தேவதரு ஐந்தாம்: இவை தன்னிடம் வந்து வேண்டுவார் வேண்டும்பொருளை வேண்டியவாறே விளைப்பன. பொலந்தரு - (வேண்டிய) செல்வத்தை விளைக்குந் தருவுமாம். பொலன் - பொருள். (368) 8.-இது - குதிரை வருணனை. பலவகைப்படுகவனமெய்க்கதிபவனமொப்பனபரவைசூழ் உலகனைத்தையும்வெளியிலுய்த்தலினுரகருக்குமொருதவியா |
|