(இ-ள்.) பிடர் வலி கட கரிகளின் - பிடரியில் வலிமையுள்ள மதத்தையுடைய ஆண் யானைகளாலும், செறி பிடிகளின் - நெருங்கின பெண்யானைகளாலும், புனை முடிகளின் - (அவரவர்) அணிந்துள்ள கிரீடங்களாலும்,படர் நிழல் கவிகையின் - பரந்த நிழலையுடைய குடைகளாலும், மிசை துகள்பரவி மொய்த்து எழு புரவியின் - ஆகாயத்திலே தூளிகள் பரவுவதற்குக்காரணமாய் நெருங்கி வருகிற குதிரைகளாலும், சுடர் விதம் படைகளின் -விளங்குகிற பலவகைப்பட்ட ஆயுதங்களாலும், நிரை படு துகில் உடைகொடிகளின் -வரிசைகளாய் அமைந்த சிலைகளையுடைய துவசங்களாலும். விராய் - கலந்து, புடவி - (சேனைபரவிய) அப்பூமியானது, அடர் பொருப்புஇனம் இடை இடை பயில் அடவி ஒத்தது - நெருங்கிய மலைகளின் கூட்டம்நடு நடுவே பொருந்தப் பெற்ற வனத்தைப்போன்றது; (எ - று.) யானைகள் - மலைபோலுதலாலும், குடை குதிரை கொடிகள் - அடர்ந்த மரங்கள் போலுதலாலும், கிரீடமும் ஆயுதங்களும் பொன் மணிகள்போல விளங்குதலாலும், இங்ஙனம் வருணித்தார். தற்குறிப்பேற்றவுவமையணி. பிடர்- கழுத்தின்பின்புறம். கடமென்னும் யானைக் கன்னத்தின் பெயர் அதனினின்றுவழியும் மதநீருக்கு இடவாகு பெயர்; பின்னர் 'பிடி' என வருதலாலும், 'கடம்' என்ற அடைமொழியாலும், கரி - இங்கே ஆண்யானையாயிற்று. பிடி - யானையின் பெண்மைப்பெயர். முடி - முடியில்தரிப்பது. கவிகை - கவிந்துள்ளது; காரணப்பெயர். 'பரவ' எனவும் பாடம். (375) 15.-இது - பலவகை வாத்தியகோஷ வருணனை. வளைமுழக்கினகிடுகுகொட்டினவயிரொலித்தனமகுடியின் கிளையிமிழ்த்தனமுழவதிர்த்தனகிணையுரற்றினபலவிதத் துளையிசைத்தனமுரசிரைத்தனதுடியரற்றினசெவிடுபட் டுளையவிப்படிபடைபுறப்படவுலகமுற்றதுகலகமே. |
(இ -ள்.) (அந்தச்சேனையில்), வளை - சங்குகள், முழக்கின - ஒலித்தன; கிடுகு - கிடுகென்னும் (ஓர்வகைப்) பறைகள், கொட்டின - அடிக்கப்பட்டன; வயிர் - ஊதுகொம்புகள், ஒலித்தன-; மகுடியின் கிளை - மகுடியென்னும் வாத்தியத்தின் இனங்கள், இமிழ்த்தன - ஒலித்தன; முழவு - மிருதங்கங்கள், அதிர்த்தன - ஒலித்தன; கிணை - கிணையென்னும் பறைகள், உரற்றின - ஒலித்தன; பல விதம் துளை - பலவகையான துளைக்கருவிகள், இசைத்தன - ஒலித்தன; முரசு - பேரிகைகள், இரைத்தன - ஒலித்தன; துடி - உடுக்கைகள், அரற்றின - ஒலித்தன; செவிடு பட்டு உளைய - (இவ்வோசைமிகுதிகளால் கேட்பவர்) காதுகள் செவிடாகி வருந்தும்படி, இப்படி படை புறப்பட - இவ்வாறு (பாண்டவர்) சேனை புறப்பட்டதனால், உலகம் கலகம் உற்றது - உலக முழுவதுங் குழப்பமடைந்தது; (எ - று.) உலகத்திலுள்ளவர் காது செவிடாகிக் கலங்கினர் என்பதாம். வளை - உள் சுழிந்துள்ளது- 'முழக்கின' முதல் 'அரற்றின' ஈறாக உள்ள ஒருபொருள்மேல்நின்ற பலசொற்கள் அடுத்து வந்ததனால், பொருட்பின்வருநிலையணி:"முன்வருஞ் சொல்லும்பொருளும் |