வீடுமனுக்கு உட்பட்டுத் துரோணன் கிருபன் பகதத்தன்முதலாக உதவிச் சேனைத்தலைவரும் உளராதலால், வீடுமனை 'சேனை முதல் நாதன்' என்றது. திலகம் நெற்றிக்கு அழகு செய்தல்போல, இவன் அரசர்க்கெல்லாம் அழகு செய்து சிறந்து விளங்குபவனென்பார், 'இராசதிலகன்' என்றார். "ஒத்தவில் வேல் வாள் யானை யுயர்பரி தேரொடாறே" என்ற நிகண்டையுங் காண்க. வயவர், வய அல்லது வயம் - பகுதி: வலிமை அல்லது வெற்றி என்று பொருள், ஏதி - ஆயுதப்பொதுப்பெயர்; வாளை உணர்த்திற்று. நரபாலர் - மனிதரைக் காப்பவர்: வாள் - ஒளியை உணர்த்தும்போது, உரிச்சொல்; வெயில்வாள் - வெயிலாகிய ஒளியென இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (382) 22.- இதுமுதல் நான்குகவிகளால், முறையே துரியோதனனது சதுரங்க சேனையை வருணிக்கின்றார்: அவற்றுள் இது - கஜவருணனை. பொழியுமுகில்பற்றியெழுமிளவெயிலெறித்தனையபுகரனபனைக்கை கொடுகார், கிழியும்வகையெற்றிமிசையொளிருநவரத்நகணகிரணவுடு வைக்கவர்வபோர், விழிவழிநெருப்புருகிவழியநுதலிற்றிலகம்வெயில் வழியமுற்றுநிலவே, வழியுமதியத்தின்வகிர்நிகர்பணைமருப்பினிடைமகரி கைதரித்தமதமா. |
(இ -ள்.) (அச்சேனையில்), மதம் மா - மதயானைகள், - பொழியும் முகில் பற்றி எழும் இளவெயில் எறித்து அனைய - மழைபொழிகிற காளமேகத்தைத் தழுவித் தோன்றுகிற இளவெயில் விளங்கினாற்போன்ற, புகரன- செம்புள்ளிகளையுடையன; பனை கை கொடு - பனைமரம் போன்ற (தமது)துதிக்கையால், கார் கிழியும் வகை எற்றி - மேகங்கள் கிழிபடும்படிமோதி,மிசை ஒளிரும் - மேலே (ஆகாயத்திலே) விளங்குகின்ற, நவரத்நகண கிரணஉடுவை - ஒன்பது வகை இரத்தினங்களின் இனங்கள் போன்ற (பல்வேறுநிறத்தனவான) ஒளியையுடைய நட்சத்திரங்களை, கவர்வ - (துதிக்கையாற்)பறிப்பன; போர் - யுத்தஞ்செய்கையில், விழி வழி - கண்களின் வழியாக,நெருப்பு உருகி வழிய - கோபத்தீ வெளிப்பட்டுப் பெருகவும், நுதலில் -நெற்றியிலே, திலகம் - சிந்தூரத்திலகம், வெயில் வழிய - சூரிய காந்தி போன்றகாந்தி வீசவும், முற்றும் நிலவே வழியும் மதியத்தின் வகிர்நிகர் பணைமருப்பினிடை - முழுவதும் நிலாப் பொழிகிற சந்திரனது துண்டங்களைப்போன்ற பருத்த தந்தங்களிலே, மகரிகை தரித்த - கிம்புரியென்னும் பூணை அணிந்துள்ளன; (எ - று.) - இதுமுதல் 29-ஆம் பாடல் வரையிலும் சந்தக்குழிப்புக்கு ஒத்து வருதலால், சந்தவிருத்தமாம். உவமையணியையும்உயர்வுநவிற்சியணியையும் அங்கமாகக் கொண்டு வந்த தன்மைநவிற்சியணி. மேகம் - யானைக்கும், இளவெயில் - செந்நிறப்புள்ளிக்கும் உவமை; கருமை பெருமைகளாலும், ஆரவாரத்தாலும், மதமழை பொழிதலாலும் விரைந்து செல்லுதலாலும், யானைக்கு மேகம் உவமையாம். இளவெயில்-பாலசூரியகிர |