பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 347

ணம். பனைமரம் - துதிக்கைக்குத் திரண்டு உருண்டு நீண்ட வடிவத்தால்
உவமம். 'பணைக்கை' என்ற பாடத்துக்கு - பருத்த கையென்க.  'மிசை'
என்பதை மத்திமதீபமாக, 'எற்றி' என்பதனோடும் இயைக்கலாம்;
"நாணிரைத்தநேக தாரகா கணமா நவமணியுடனவ விதங்கொள்,
"கோணிரைத்து" என இந்நூற் சிறப்புப்பாயிரத்தும் நட்சத்திரங்கள்
நவரத்தினங்களையொக்கு மெனக் கூறியவாறு காண்க.  கோபமிகுதியாற்
கண்மிகச் சிவந்து கொடுமையாகத் தோன்றுதலை 'விழிவழி நெருப்புருகிவழிய'
என்றது. மதியத்தின் வகிர் [பிறைச்சந்திரன்] - தந்தத்துக்கு, வெண்மை
யொளிகளாலும் வளைவாலும் ஒப்பாம், மகரிகை-  யானைக் கொம்பிற்பூண்;
சுறாமீனின் திறந்த வாய்வடிவமாகச் செய்யப் படுவது; மகரமென்பதனடியாகப்
பிறந்த காரணப்பெயர்; மகரம் - சுறாமீ்ன்.  இனி, மருப்பினிடை மகரிகை
தரித்த - இரண்டு தந்தங்களின் நடுவிலே (துதிக்கைமேலே)
மகரிகாபத்திரத்தைத் தரித்தனவென்றும் பொருள் கொள்ளலாம்' அது -
சுறாமீன் வடிவமாக எழுதப்படும் ரேகை, 'பனைக் கைகொடு' என்பதை
'உடுவைக்கவர்வ' என்பதனோடுங் கூட்டுக.                   (383)

23.-இது - அசுவ வருணனை.

யவனசவனத்தினிடைவளர்வனகத்தினொடுமிரவிபுரவிக்குநிகர்வ,
புவனதலமுற்றுமுடன்வளையவொரிமைப்பொழுதில்வருவனபுறப்
                                      புணரியைக்,
கவனமொடெழுப்பிவிடுதுகள் கொடுதுகிர்ப்பவிரைகதிகளின்
                                விதத்தைமொழியிற்,
பவனகதியைத்தொடர்வபரிமளவுயிர்ப்புடையபல
                                 வகைநிறத்தபரிமா.

    (இந்நூலாசிரியர் இங்குத் தேருக்கு முன் குதிரையை நிறுத்தினது,
சேனையின் அங்கங்கள் நான்கனுள் தான் ஒன்றாக இருப்பது மாத்திரமே
யன்றிமற்றோரங்கமாகிய நிலைத்திணைப் பொருளான தேரை நடத்துவதாயு
மிருக்குஞ்சிறப்புப்பற்றி யெனக்காண்க.)   

     (இ -ள்.) பரிமா - குதிரைகள்,- யவனம் சம் வனத்தின் இடைவளர்வன
- யவனதேசத்தி லுண்டான காடுகளின் இடையிலே வளருந்தன்மையன;
கதத்தினொடும் - (போரில்) உக்கிரமான தன்மையோடு (கூடி), இரவி புரவிக்கு
நிகர்வ - சூரியனது தேர்க்குதிரைக்கு ஒப்பாவன: ஓர் இமைபொழுதில் - ஒரு
மாத்திரைப் பொழுதினுள்ளே, புவன தலம் முற்றும் - பூலோகத்தினிடம்
முழுவதும், உடன் வளைய வருவன - விசைவிற் சுற்றிவருந் தன்மையன:
கவனமொடு எழுப்பி விடு துகள்கொடு - (தமது) நடைவேகத்தால் மேலே
கிளப்பி விடப்பட்ட புழுதிகளால், புறம் புணரியை - இவ்வண்டத்துக்கு
வெளியிலுள்ள பெரும்புறக்கடலையும், துகிர்ப்ப - தூர்க்குந் தன்மையன; விரை
கதிகளின் விதத்தைமொழியின் - வேகமான நடைகளின் தன்மையைச்
சொல்லப்புக்கால், பவனம் கதியை தொடர்வ - காற்றின் சஞ்சாரத்தைப்
பின்தொடருந் தன்மையன; பரிமளம் உயிர்ப்பு உடைய - நல்மணத்தையுடைய
சுவாசத்தையுடையன; பலவகை நிறத்த - அநேகவித வர்ண முடையன;
(எ -று.) 'பலமலர் நிறத்த' என்றும் பாடம்.