பக்கம் எண் :

அணிவகுப்புச் சருக்கம் 351

கருவி -சங்கீதக்கரவிகளும், உடனே - ஒன்றாக, எழு கடல் கொதித்தது என
-  ஏழு கடல்களும் பொங்கியது போலவும், எழு புவி மறித்தது என -ஏழு
தீவுகளும் எதிர்த்தது போலவும், எழுமுகில் இடித்தது என - ஏழு
மேகங்களும்இடிமுழங்கியது போலவும், உழை உழை அதிர்த்த -
(அச்சேனையின்)இடந்தோறும் ஒலித்தன; (எ - று.)

     இதில்- தோற்கருவி, கஞ்சக்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி
என்னும்நால்வகை இசைக்கருவிகளுங் கூறப்பட்டமை காண்க.  உழை முதல்
எழுப்புவன இசை - உழை, இளி, விளரி, தாரம், குரல் துத்தம், கைக்கிளை,
என்பன.  நரப்புக்கருவி - யாழ் முதலியன.  உழைஉழை - அடுக்கு,
தொறுப்பொருளது.                                  (388)

28.- இது - துரியோதனனதுபாம்புக்கொடியின் வருணனை.

முறைமைதவறற்றகடிமுரசெழுபொற்றுவசமுதல்வனுயிர்மைத்
                                   துனமையால்,  
விறலுதவுதற்குவருகரியவன்மணித்துவசமிசைகருடனிற்குமெனவோ,
வெறிகொளுருமுத்துவசன்மதலைவிதலைச்சமரினிறுதியைவிளைக்கு
                                      மெனவோ,
வறைவளியெதிர்த்துவரவெருவொடுபுறக்கிடுவதரசனுரகத்துவசமே.

     (இ -ள்.) முறைமை தவறு அற்ற - நீதி தவறுதலில்லாத, கடி முரசு
எழுது பொன் துவசம் முதல்வன் - ஒலிக்கின்ற பேரிகைவடிவத்தை யெழுதின
அழகிய கொடியையுடைய தலைவனான யுதிஷ்டிரனது, உயிர்
மைத்துனமையால் - உயிரோடொத்த [மிக்க அன்புக்கிடமான] மைத்துன
உரிமையால், விறல் உதவுவதற்கு வரு - (அவனுக்கு) வெற்றியைத் தருதற்கு
வருகிற, கரியவன் - கருநிறமுடைய கண்ணபிரானது, மணி துவசம் மிசை -
அழகிய கொடியின்மேலே, கருடன் நிற்கும் - (எனக்கு இயற்கைப்பகையான)
கருடன் நிற்பான், எனவோ - என்று எண்ணியோ? வெறிகொள் -
யுத்தாவேசத்தைக் கொண்ட, உருமு துவசன் மதலை - (எனக்குப்பகையான)
இடியையெழுதிய கொடியையுடைய இந்திரனது குமாரனான அருச்சுனன்,
விதலை சமரின் - (காண்பவர் கேட்பவருக்கு அச்சத்தால்) நடுக்கத்தைத்
தருகிறபோரிலே, இறுதியை விளைக்கும் - (முன்காண்டவதகன காலத்தில்
சிறந்தபாம்புகளை அழித்ததுபோல எனக்கு) அழிவை யுண்டாக்குவான்,
எனவோ -என்று எண்ணியோ? வெருவொடு - அச்சத்தோடு, அரசன்
உரகம் துவசம் -துரியோதன ராசனது பாம்புக்கொடி, அறை வளி எதிர்த்து
வர-வீசுகிற காற்றுஎதிர் முகமாய் வருகையில், புறக்கு இடுவது - பின்னுக்குச்
செல்வது; (எ - று.)

    துரியோதனனது தேர் மிக விரைவாகச் செல்லுகையில் வீசும் எதிர்
காற்றால் அத்தேரின்மீதுள்ள பாம்புக்கொடி இயற்கையாக அசைந்து
பின்னிடுதலை, அக்கொடியிலுள்ள பாம்பு சிலகாரணங்களால் அஞ்சிப்
புறங்கொடுப்பதாகக் கற்பித்துக் கூறினர்; இது ஏதுத்தற்குறிப்பேற்றவணி.
கரியவன் - க்ருஷ்ணன்.  புறத்துக்கு என்