பக்கம் எண் :

361

அபிதான சூசிகை யகராதி.


அகத்தியன்
- விந்தமலையொடுக்கினவன்,
             கிருட் -198.

அசுவசேனன்
- காண்டவவனம்
             எரிந்தபோது தப்பி அகன்று
              போனபாம்பு; இதனைக்
              கர்ணன் ஆசுகமாகக்கொண்டான், கிருட்
              - 158.

அசுவத்தாமா 
 -துரோணன் மகன்;ஐந்தூர்
               வேண்டமறுத்ததற்குச்
               சாட்சியாவன், கிருட் - 224;
               ஞானாதிபன், ஆண்மையில்
               நிகரற்றவன், கிருட் - 225;
               கண்ணபிரானால் மோதிரம்
               வீழ்த்திப் பேதிக்கப்பட்டவன்,
                கிருட் -226 - 229; ஒரு
               நாழிகையினில் சேனைகளை
                யடங்கவும்மலையவல்லவன்,
                அணி -32.

அசுவிநீதேவர்கள்
-ஆயுர்வேதமறிந்த
               தேவவைத்தியர்கள்; இவர்கள்
                நகுலனையும்சகதேவனையும்
               அளித்தவர், கிருட் 219. 

அசோதை
      -கண்ணபிரானை
                வளர்த்ததாய், வாசு - 1.

அபிமன்னு
     -கண்ணனுடன்
               பிறந்தவளான
               சுபத்திரையினிடம்
               அருச்சுனனுக்குப் பிறந்த
               புத்திரன்; இளமையிலேயே
               வில்வித்தையில் ஒப்புயர்வின்றி
                மிகச்சிறந்தவன், கிருட் - 50.

அருச்சுனன்
   -விசயன், உலூக
               - 12;தனஞ்சயன், உலூக - 15;
               நரன்,உலூக - 18, வாளி
               வெருநர்மேல் விடான், உலூக
               - 19. ஐயிருநாமத்தோன், வாசு
               - 20;சிந்தையிற்கடிய
               தேரோன்,வாசு - 10; இந்திரன்
               மதலை,கிருட் - 22, 160;
               குரங்குத்துவசமுடையவன்,
               கிருட் - 234.  பாண்டவசேனைக்குத் தோள் போன்றவன்,
               அணி - 16; ஒருகணப்பொழுதினுள் புவியும் வானும்
              புரந்தரனுலகும் வெருவர முனைந்துமலையவல்லவன்;
               அணி - 32.

இந்திரன் -மகவான், கிருட் - 20; முகிலையூர்தியாகவுடையவன்,
          கிருட் - 22; வச்சிரப்படையால் மலைகளின் சிறகீர்ந்தவன்,
          கிருட் -195, 232; விசயனை நல்கியவன், கிருட் - 219;
          ஆகண்டலன், கிருட் - 231; வாசவன், கிருட்- 213,
          புத்தேளரசன், கிருட் - 237; கொண்டல் வாகனன், கிருட் - 243;
          உருமுத்துவசன், அணி- 28.

இராயசூயம் -
 அரசர்களனைவரையும் வென்று அவர்தரும்
              திறைப்பொருள்கொண்டு
             செய்யப்படுவதொரு பெரு
             வேள்வி, சஞ்-17.

இராவான்  -   உலூபியென்னும்
             நாககன்னிகைக்கு
             அருச்சுனனிடம் பிறந்தவன்;
             துரியோதனன்
             படைகளையெல்லாம் ஒரு
             பகற்பொழுதில் கொல்ல உறுதி
             கூறி நின்றவன், படை - 12,
             முகூர்-3: கண்ணனோடு ஒத்த
             உத்தமவிலக்கண முடையவன்,
             களப்-5; தன்னைப்
             பலிதந்தாலும் சிலநாள்
             வரையில் உயிரோடிருக்கும்படி
             கண்ணனிடம்வரம்வேண்டினன், களப்-6.
             தருமனால்களப்பலியூட்டப்பட்டவன்; கள
             - 7, 8; உறுப்புக்களையறுத்துப்பலிகொடுத்தும் மலர்ந்த
             தீபமென முகங்கவினநின்றவன், களப் - 8.