பக்கம் எண் :

364அபிதானசூசிகையகராதி

         னாகக்கண்ணனால் அனுப்பப்பட்டவன், வாசு-18: அணி-19:

கிருபன்
- முதலில்கௌரவ பாண்டவர்க்குவில்வித்தை பயிற்றிய ஆசிரியர்,
          உலூக-15: துரியோதனனுக்காகத் துணை போக, இவர்
          சமரதத்தலைவராகப் பிரிக்கப்பட்டவர், அணி - 19.

குந்தி
- கன்னனைப்பயந்த கன்னி,கிருட் - 147: குந்திதேசத்தரசன் பெண்,
        கிருட்-161: பெண்மையினாலுயர்ந்தவன், கிருட் -218: வசுதேவர்க்கு
        உடன்பிறந்தமுறையினள், கிருட்-247:  கர்ணனால்
        சராசரங்களுக்கெல்லாம் தாய் என்னப்பட்டவள்,கிருட்-260.

குந்திபோசர்
-குந்தியின் சுவீ காரத் தந்தைமரபினர்,  படை- 4.

சகதேவன்
-புகலரியவுணர்வுடையவன்,கிருட்-30:
           தெய்வமன்னான், கிருட்-32:
          தூயவன், கிருட் - 37:
          முகூர்த்தம் வல்லோன்,முகூர்-2:
           கிளைஞரைவேறிடாதான், முகூர் - 4.
          பாண்டவசேனைக்குக்கால்போன்றவன், அணி-16.

சகுனி
சுபலன்புத்திரன், கிருட் - 178:துரியோதனனுக்கு மாமன், கிருட்-180:
      வஞ்சகச் சூதில் வல்லவன், படை-17:  சமரதத் தலைவர்,அணி - 19.

சஞ்சயன்
-கவல்கணன் குமாரன்:[காவல்கணியெனவும் படுவன]:
           திருதராட்டிரனுக்கு மிகவும் இஷ்டனான நண்பன்,
           குருகுலத்தரசர்க்குநல்குரு, சஞ்-3:பாண்டவரிடம் தூது
           போனவன், சஞ்-4.

சதானிகன்
-விராடனுடைய  உறவினன்,படை-4.

சயத்திரதன்
- சிந்துதேசத்தரசன்: ஸைந்தவன் எனப்படுவன்: இவன்
             துரியோதனனின் உடன்பிறந்தவளானதுச்சளையின் கணவன்,
             சமரதத் தலைவன், அணி-19.

சராசந்தன் -இடிபோன்றவன்: அவனுக்குஅஞ்சிக் கிருஷ்ணன் துவரையை
           அரணாகக்கொண்டுவடமதுரையைக்கைவிட்டனன், கிருட்-47.

சல்லியன்
-மத்திரதேசத்தரசன்:  படை-15:துரியோதனன்
          வஞ்சனையாக இட்டவிருந்தையுண்டு அவற்கே
          போர்த்துணைவனானான்,படை-16: சமரதத்தலைவர்,
          அணி - 19.

சாத்தகி -  பலராமகிருஷ்ணர்க்குத் தம்பி,பலராமனைப் பழித்தவன்,
         உலூக - 4: சமாதானங்கூடாது என்றவன், கிருட்-46,47.

சிகண்டி
-அலிவடிவாகத் துருபதனிடத்துப் பிறந்தவன்:  வீடுமனை
          விண்ணுலகேற்றும் ஆற்றலுடையான், படை-3.

சுவேதன் - விராடனதுமூத்த குமாரன்:தருமனால் சேனாபதி
           யாக்கப்பட்டவன், படை-12.  பாண்டவ சேனைக்கு முகம்
          போன்றவன்,அணி-16.

தருமன்
-முரசகேதனன், உலூக - 6:7:அறத்தின் மைந்தன், சஞ்:4:5:19:
         கிருட் - 219: சுகனை நிகர்ப்பவன், சஞ்-9:ராயசூயமகஞ்செயும்
         வீரமாமுனி, சஞ்-17: அறத்தின் உருவம்போல்வான், கிருட்-6:
         கோதிலான்,கிருட்-9: புகழேபூண்பான், கிருட்-18: பொறைவேந்தன்,
         கிருட்-25: பாண்டவசேனைக்குமார்புபோன்றவன், அணி-16.

திட்டகேது -திட்டத்துய்மன் மகன், படை -3.

திட்டத்துய்மன்
-துருபதன் மகன்:திரௌபதியுடன்
               ஓமத்தீயினின்றும்தோன்றியவன்:துரோணனைக்கொல்லும்
               வன்மையுடையவன், படை-3.