பக்கம் எண் :

366அபிதானசூசிகையகராதி

     வர்த்தனன்-ஒரு கோடிகிராமம்  ஆள்பவன்], கிருட்-103.

பராசரன் - வியாசமுனிவரது தந்தை, சஞ்-9.

பாண்டவர் - தலைகளைந்துபடைத்த பன்னகம் போன்றவர், ஒருவர்
            இறக்க மற்றையோரும் இறப்பர்: கிருட்-162: தனித்தனியே
            வஞ்சினங்கூறியவர், கிருட்-216:  உண்மையினாலுயர்ந்தவர்,
            கிருட்-218: கிருஷ்ணனுக்கு மைத்துனராவர், கிருட்-264:
            யாமளத்தின்படி காளி முன்னர் பகடாதியாக பலிகளீந்தனர்,
            களப் - 8.

பாண்டு - பஞ்சபாண்டவர்களின் தந்தை, உலூக - 10.

புரூரவன்
- ஊர்வசியை  அவுணர் கவர்ந்திட இந்திரன்பொருட்டு அவருடன்
           பொருது அவளைச் சிறைமீட்டவன், கிருட் - 28.

பூதனை
- கண்ணனை  முலையூட்டிக் கொல்லவந்த அலகை, சஞ்-1.

மகுடவர்த்தனன்
- ஒருகோடி  கிராமம் ஆள்பவன்: பட்டவர்த்தனனுக்குக்
                கீழ்ப்பட்டவன், கிருட்-103.

மந்தேகர்
-  மந்தேகாருணமென்னும் துவீபத்தில் வாழும் அரக்கர்:
            இவர்கள் செருக்கிச் சூரியனை வளைத்து எதிர்த்துப்
            போகவொட்டாது தடுத்துப் போர் செய்கின்றனர்:
            அந்தணர்கள் சந்தியாகாலங்களில் மந்திரபூர்வமாகக்
            கையிலெடுத்து விடும் அர்க்கியதீர்த்தங்கள்
            வச்சிராயுதம் போலாகி அவர்கள்மேல் விழுந்து
            அவர்களை அப்பால் தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத்
            தடையில்லாதபடி செய்கின்றன:  கிருட் - 86, 87.

வராககேது
- விராடனுடைய  உறவினன், படை - 4.

விகன்னன்
- துரியோதனன்  இறுதித்தம்பி: நீதிகளைநன்குணர்ந்து
            பேசுபவன்: கிருட் - 172, 174.

விதுரன்
- பாண்டவர்பக்கல் மெய்யன்புடையவன், உலூக - 7.
         வில்லில்வல்லவன், உலூக 14.  தத்துவஞான மிக்கவன், கிருட் -
         75: ஞானகஞ்சுகம் உடையவன், கிருட் - 85:  நீதிபுனைந்தவன்,
         கிருட் - 106:  கண்ணபிரான் தன்னில்லில் இரண்டுதினம்
         வைகுதற்கு எண்ணிலாத தவமெய்தினவன், கிருட் - 131.  புரையில்
         கேள்விப்பயன் நுகர்மனத்தினன், கிருட் - 147: மா தவத்தின்
         மிக்கவன், கிருட் - 163.  பலராமனுடன் தானும் தீர்த்தயாத்திரை
         சென்றவன், அணி - 5.

விராடன்
- மச்சநாட்டார்  கோமான்: சுவேதன், உத்தரன், இருவர்க்கும்
          தந்தை, படை - 4.

விருடசேனன்
- கர்ணனது  புத்திரருள் மூத்தவன், அணி- 20.

வீடுமன்
- விந்தமன்னதோளான்,   உலூக - 9, கங்காபுத்திரன்,
          உலூக - 17: வாசு-2: கிருட் - 74:  இளையதாய் பயந்த
          இருதம்பியர்க்கு வாழ்வும் அரசும் கொடுத்தவன், கிருட்
          - 117:  அசைவிலாதவன், கிருட் - 138: பரசுராமனிடம்
          வில்வித்தை கற்று அவனையே வென்றவன், துரியோதனனால்
          சேனாபதியாக்கப்பட்டவன், படை - 24: பண்ணளி
          நெருக்கொழிய மாதரிரு கண்ணளிபடாத மீளி, அணி-31.

வீமன்
- துரியோதனனை  அந்தரசரிதர் கொண்டேகாமல் வெஞ்சிறை
        மீட்டான், உலூக-18.  மாருதி தம்பி, சஞ்-13: பவனகுமாரன்,
        கிருட்-17, 219: குருகுலத்தோர் போரேறு, கிருட் - 17:
        பாண்டவசேனைக்குத் தோள் போன்றவன், அணி-16.