அரும்பதவகராதி முதலியன அக்குரோணி - அகௌஹிணி யென்னுந்தொகை, வாசு - 18, கிருட்-100, படை - 8, 23 அகத்தியன் விந்தம் ஒடுக்கியது, கிருட்-198 அகந்தை-செருக்கு, சஞ்-8 அகப்படை-அந்தரங்கமான சேனை[மூலப்படை], அணி -12 அகம் - வீடு, இடம், கிருட்-107 அகிலநாயகன் - திருமால், கண்ணபிரான்,கிருட்-99 அகிலம்-எல்லாப் பொருள்கள், கிருட்-99,உலகம், கிருட்-204 அங்கர்பூபதி-கர்ணன், கிருட்-136 அங்கை கொட்டுதல், பரிகாசக் குறிப்பு, உலூக-20 அச்சுதன் - திருமால், அருட் - 132 அசரீரி - ஆகாயவாணி, கிருட்- 242 அசலம் - மலை, அணி, 25 அசித்-உணர்வில்லாதது, தேகம், வாசு-7 அசுவத்தாமனுக்குச் சுப்பிரமணியன் உவமை, கிருட்-224 அசைவு-சோர்வு, கிருட்-138, சலனம், கலக்கம், அணி-18 அடங்க-முழுவதையும், அணி-32 அடர்த்தல் - முறித்தல், அழித்தல், கிருட்-82, 120 அடர்தல் - போரிடுதல், வாசு-16 அடல் - வலிமை, கிருட்-26 அடலாண்மை-பலபராக்கிரமங்கள், கிருட்-120 அடவி-காடு, உலூக-10, சஞ்-4 அடாது செய்தவர் படாதுபடுவர், கிருட்-251 அடிசில் - உணவு, கிருட்-83, 108 அடுதல் - கொல்லுதல், கிருட்-11 அண்டம் - உலகவுருண்டை, கிருட்-98 அண்டமுகடு, கிருட் - 202 அண்டர்-தேவர்கள், கிருட்-192 அண்ணல் - ஆண்பாற் சிறப்புப் பெயர், கிருட்-105 அணங்கு-பெண், கிருட்-35, 58, 164 அத்தினாபுரியெனும் அணங்கு, கிருட்-58 அதலம் - பாதாளம், கிருட்-191 அதி - மிகுதிப்பொருளதோர் இடைச்சொல், அணி-34 அதிசயம் - வியப்பு, சஞ்-15 அதிசயயோக்தி, கிருட்-74, 81 அதிரதர், கிருட்-176, அணி - 1 அந்தணன் - அகத்திய முனிவன், கிருட் - 198, துருவாசமுனிவன், கிருட்-220 அந்தம் - கடைசி, கிருட்-31 அந்தரசரிதர் - கந்தருவர்கள், [அந்தரம்-ஆகாயம்]; உலூக-18 அந்தரதுந்துபி, கிருட் - 243 அந்தரம் - ஆகாயம், கிருட் - 243 அந்தன் - குருடன், உலூக - 6, வாசு - 8. அநந்தம் - அநேகம், வாசு-4 அநந்தன் - ஆதிசேடன், கிருட் - 186 அம் - அழகிய, கிருட் - 27 அம்பரத்தவர் - தேவர், கிருட்- 137 அம்பரம் - கடல், ஆகாயம், படை - 21 அம்பு - நீர், கிருட் - 203 அம்ம - வியப்பிடைச்சொல், கிருட்-81 அம்மா - வியப்பிடைச்சொல், உலூக - 12 அமர்கருதுதல் - போரை விரும்புதல், கிருட் - 133 அமரர்-தேவர், கிருட்-5 அமருலகமேறுதல் - இறத்தல், சஞ்-18 அமளி - சயனம், படுக்கை, கிருட் - 168 |