பக்கம் எண் :

368அரும்பதவகராதி முதலியன

அமையாமல் - போதாமல், கிருட் - 22
அமையும் - போதும், கிருட்-134
அயம் - குதிரை, அணி - 10
அயர்தல் - சோர்வடைதல், கிருட்-122
அயில் - வேல், கிருட் - 196, 205
அர்த்தரதர், அணி - 3
அரசியல் - அரசாட்சியின் இயல்பு, கிருட் - 117
அரம்பை - ரம்பா: ஊர்வசி யென்னுந் தேவமகள்: கிருட் - 28
அரவம் - பாம்பு, உலூக-8, ஆரவாரம், கிருட்-8
அரவமின்-உலூபி என்னும் நாக கன்னிகை, படை-12
அரவமின்மகன் - இராவான், படை-12
அரவினம் - பாம்பின் கூட்டம் [அஷ்டமகா நாகங்கள்], சஞ்-14
அரன் - சிவபிரான், கிருட் - 132, உருத்திரரூபி, கிருட் - 209
அராநிருபன் - ஆதிசேடன், கிருட் - 119
அராவணை - ஆதிசேடசயனம், வாசு-1, கிருட்-91
அரி - சூரியன், கிருட் - 232
அரியேறு - ஆண்சிங்கம், கிருட் - 76
அருக்கன் - சூரியன், கிருட்-184, அணி-33
அருடி - சொல்லியருள்வாய், கிருட் - 149 [அருள் + தி]
அருத்தி - விருப்பம், கிருட் - 241
அருவி - சிந்தூர அருவி, கிருட்  - 184
அருள்வெள்ளம் - கருணைப்பெருக்கு, கிருட்-4
அல் இராத்திரி, கிருட் - 181
அலகை - பேய்மகள், சஞ்-1
அலங்கல் - மாலை, கிருட், 156, 175
அலமரல் - தளரல், கிருட் - 238
அலைத்தல் - உதறல், கிருட் - 251
அவசம் - வசமிழத்தல், கிருட் - 234
அவனி - பூமி, கிருட் - 8
அவனிபன், அரசன், சஞ்-19, கிருட் - 54
அவாவுதல் - விரும்புதல், கிருட் - 112
அவிர்தல் - விளங்குதல், கிருட் - 207
அவை - சபை, சஞ்-19, கிருட் - 18
அழலுதல் - கோபித்தல், கிருட் - 106, 109
அளகை - அளகாபுரி, [குபேரனது] கிருட் - 62
அளி - வண்டு, கிருட் - 10,
அணி - 31: கருணை, கிருட் - 79: அன்பு, கிருட் - 263
அளைந்த - பரவி நிறைந்த, கிருட் - 98
அறன் - யமதருமராசன், சஞ்-19
அறன்தருகாளை - யுதிட்டிரன், சஞ் - 19
அறிவன் - கண்ணபிரான், கிருட் - 181
அறுதி - வரையறை, உலூக - 16
அறுதியிடல் - துணிதல், சஞ்-14
அறுவகைப்படைகள், அணி-12
அறை வளி - வீசுகிறகாற்று, அணி - 28
அன்பு-பக்தி, கிருட் - 39
அன்னநடையரம்பை, கிருட் - 28
அன்னமும் மயில்களும்உடன்விளையாடும் வளநாடு, உலூக - 11
அனந்தரம் - பின்பு, கிருட் - 217
அனிகம் - சேனை, வசு-9
அனிலம் - காற்று, வாயு, கிருட் - 51, அணி-25
அனீகினி-சேனை, படை-22, அணி-18
அனுசர் - தம்பிமார், சஞ்-5
ஆகண்டலன் - இந்திரன், கிருட் - 231
ஆகமம் - மரம், கிருட் - 185
ஆகரன் - இருப்பிடமாகவுள்ளவன், கிருட் - 209
ஆசு-குற்றம், கிருட் - 66
ஆசுகம்-அஸ்திரம், கிருட் - 158
ஆடல் - வெற்றி, கிருட் - 136
ஆண்டு - அப்பொழுது, கிருட்-  257
ஆதபத்திரம் - குடை, கிருட் - 88
ஆதபன் - சூரியன், கிருட்-154
ஆதரம் - ஆசை, கிருட்-252
ஆதவன் - சூரியசொரூபி, கிருட் - 210