பக்கம் எண் :

38பாரதம்உத்தியோக பருவம்

மிக்கு வாசஸ்தாநமானதாமரை மலரிற்போல, (ஜசுவரியம் மிகுந்த தனது
அரண்மனையில்) தனிப்பட்ட மந்திரிகளோடு ஆலோசித்தானென
உரைத்தலுமாம்.  'தொன்மதியமைச்சர்' என்றது, பலகாலமாகப் பலகாரியங்களில்
மிகப்பழகி அனுபவமுடைய இயற்கையறிவோடுங் கூடின மந்திரிகளென்றபடி.

     துரோணகுடும்பத்திலிருந்துதோன்றினதனால், துரோணனென்று
காரணப்பெயர்.  ஸரோருகம் - குளத்தில் முளைப்பது; தாமரைக்குக்
காரணவிடுகுறிப் பெயர்.  புஜங்ககேது - வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த
அன்மொழித்தொகை; பாம்பைக்கொடியிலுடையவனென விரிக்க.  புஜங்கம்
என்பதற்கு - (கால்களில்லாமையால்) மார்பினாற் செல்வதென்றும்,
வக்கிரகதியாய்ச் செல்வதென்றும் பொருள்; புஜமென்னும் தோளின்பெயர் -
மார்புக்கு இலக்கணையாம்; புஜம் - வக்ரம்.  விரோசனன் - மிகுதியாகப்
பிரகாசிப்பவனென்பது பற்றிச் சூரியனுக்குக் காரணக்குறி.  அமைச்சர் -
அருகிலிருப்பவரென்று பொருள்; அமா - அண்மை: இடைச்சொல்.
மந்திரிக்குத் தமிழில் 'உழையிருந்தான்', 'உழையன்' எனப் பெயர் வழங்கும்.
தூது - தூதனுக்குப் பண்பாகுபெயர்.                              (23)

பலதேயத்து அரசர்களை ஒருங்கேசேர்க்குமாறு
தூதனுப்பிவிட்டுத் துரியோதனன் கிருஷ்ணனையழைக்கத்
தானேசெல்லுதல்.

3.

தேயமெங்கெங்குஞ்செங்கோல்செலுத்துமத்திகிரிவேந்த
ராயவர்தம்மைக்கூட்டவடைவினிற்றூதுபோக்கிக்
காயமுமுயிருமாகிப்பொருடொறுங்கலந்துநின்ற
மாயவன்றன்னைக்கூட்டவளர்மதிற்றுவரைசேர்ந்தான்.

     (இ -ள்.) (அங்ஙனம் ஆலோசித்தபின்பு துரியோதனன்), - தேயம்எங்கு
எங்கும் - பூமியில் பலபல நாடுகளில், - செம்கோல் - நீதிதவறாத
அரசாட்சியை, செலுத்தும் - நடத்துகின்ற, அ திகிரி வேந்தர் ஆயவர்தம்மை -
பிரசித்தமான ஆஜ்ஞாசக்கரத்தையுடைய அரசர்களை, கூட்ட -
(தனக்குப்படைத்துணையாகச்) சேர்ப்பதற்கு, அடைவினில் தூதுபோக்கி - முறையே தூதர்களை அனுப்பிவிட்டு, - காயமும் உயிரும்
ஆகிபொருள்தொறும் கலந்துநின்ற மாயவன் தன்னை -
எல்லாப்பிராணிகளினிடத்தும் வியாபித்துநின்ற மாயையுடைய ஸ்ரீ
கிருஷ்ணபகவானை, கூட்ட - (தனக்குப்படைத்துணையாகச்)
சேர்த்துக்கொள்வதற்கு, வளர்மதில் துவரை - ஓங்கின மதில்களையுடைய
(அவனது) துவாரகாபுரியை, சேர்ந்தான் - அடைந்தான்; (எ - று.)

     மற்றையரசர்களைப்படைத்துணையாகச் சேர்த்துக்கொள்வதற்குத்
தூதர்களை அனுப்பிவிட்டு, ஸ்ரீகிருஷ்ணபகவானைத் தனக்குப்
படைத்துணையாக அழைப்பதற்குத் துரியோதனன் தானே துவாரகைக்குச்
சென்றனனென்பதாம்.  இக் கவியில் 'போக்கி', 'சேர்ந்தான்' என்ற
வினைகளுக்கும், கீழ்க்கவியிலுள்ள 'புயங்ககேது' என்பதே எழுவாய்.
'காயமுமுயிருமாகிப் பொருள்