பக்கம் எண் :

52பாரதம்உத்தியோக பருவம்

துரியோதனன்போரிற் பாண்டவர்களை வெல்லமாட்டானென்று முன்னமே அறிந்துள்ளவனாதலால்.

     எம்மைஎன்பதை உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாக கொண்டு அதில்
சாத்தகியை அடக்குதலுமொன்று:  ஏ - பிரிநிலையாதவர் - யதுவின்
சம்பந்தமானவர்; தத்திதாந்தநாமம்; யது என்பவன், சந்திரகுலத்திற்
பிரசித்திபெற்ற ஓரரசன்.  முன் - முன்னமே பிறந்தவனுக்குக் காலவாகுபெயர்.
தாலகேது - பனைமரவடிவத்தைக் கொடியிலுடையவன்; 'பனந்துவசன் முசலி
கருந்துகிலுடையவன் பலதேவன், பலபத்திரன் பேரே" என்பது நிகண்டு.
வீடுமனுக்கும் பனைமரமே கொடியாதலால், இப்பெயர் அவனுக்கும் வழங்கும்.
தாலகேது - வேற்றுமைத்தொகையன்மொழி.  மும்மை என்பது இங்கே
மூன்றின் தன்மையைக்குறியாமல் மூன்றைக் குறித்ததனால், மை -
பகுதிப்பொருள்விகுதி, தன்மைப்பொருள் விகுதி அன்று.  மும்மை - மூன்று
காலத்துச் செய்திக்கு இருமடியாகு பெயர்.                 (38)

துரியோதனன் பலராமனைக் காணுதல்.

18.

கிருதவன்மாவக்குரோணிகிளர்படையோடுநின்பால்
வருவனென்றுரைத்துவேண்டுமதுரவாய்மைகளுங்கூறி
மருதுபோழ்ந்திட்டசெங்கண்மாயவன்விடுப்பவேகிக்
கருதலான்வினயமொன்றுங்கண்ணன்முன்னோனைக்கண்டான்.

     (இ -ள்.) மருது - இரட்டை மருதமரங்களை, போழ்ந்திட்ட -
(இடையிலே உரலொடு புகுந்து) முறித்துத் தள்ளின, செம் கண் மாயவன் -
சிவந்த திருக்கண்களையுடைய கண்ணபிரான் - (துரியோதனனை நோக்கி) -
'கிருதவன்மா - (நமது) கிருதவர்மாவென்பவன், அக்குரோணி கிளர்
படையோடு - ஒரு அகௌஹிணியென்னுந் தொகையுள்ள விளங்குகின்ற
(நமது) சேனையுடனே, நின்பால் வருவன் - உன் பக்கத்தில்
(படைத்துணையாக) வருவான்' என்று உரைத்து - என்று சொல்லி, வேண்டும்
மதுரம் வாய்மைகளும்கூறி - (இன்னும் அச்சமயத்துக்கு) ஏற்ற இனிப்பான
வார்த்தைகளையுஞ் சொல்லி, விடுப்ப - விடைகொடுத்தனுப்ப,- (துரியோதனன்),
வினயம் ஒன்றும் கருதலான் - (அவ்வுதவியைப் பெறுதற்கேற்ற) வணக்கஞ்
சிறிதையுஞ் செய்யநினையாதவனாய், ஏகி - சென்று, கண்ணன் முன்னோனை
கண்டான் - ஸ்ரீகிருஷ்ணனது தமையனான பலராமனைப்பார்த்தான்;(எ-று.)

     இங்கும்,மதுரவாய்மைகள் கூறி என்றதனால், கண்ணனுக்குத்
துரியோதனனிடம் இன்சொல்மாத்திரத்தால் அன்பேயன்றி மனப்பூர்வமான
அன்பில்லை யென்பது விளங்கும்.

     இதில்வர்மா என்பது - க்ஷத்திரிய சாதிக்கு உரிய பெயர்:
(பிராமணர்க்குச் சர்மா என்றும், வைசியர்க்குக் குப்த என்றும், சூத்திரர்க்குத்
தத்த அல்லது தாஸ என்றும் வழங்கும்.) கிருத