குறிஞ்சி நிலத்துக்கும், மருதநிலத்துக்கும்பொதுவான இடம் (காடும் காடு சேர்ந்த இடமுமான) முல்லை நிலமாதலால், அங்குள்ள இடையர்க்குப் பொதுவர் என்று பெயர்; பொது - நடுவிடம் மத்தியஸ்தானம்; இடையரென்ற பெயர்க்குங் காரணம் இதுவே. மக - இளமை யுணர்த்தும் உரிச்சொல். உ- சாரியை; மகவுஎன்ற இது - இளமையையுடைய குழந்தைக்குப் பண்பாகுபெயர். பூதனைக்குஅழிவுகாலம் அருகில் வந்ததற்கு ஏற்பக் கண்ணனைக் கொல்லவேண்டுமென்னுந் துர்ப்புத்தி உண்டாயிற்று என்பார், 'தனதிறுதியால்' என்றார். மிகுந்த அன்போடு அருமையாக எடுப்பதுபோல அக்குழந்தையைக் கையிலேந்தியதனால், 'அரிது பற்றிய' என்றது; அன்றியும், இப்படிப்பட்ட பரிசுத்தமான தெய்வக்குழந்தையை ஏந்தப்பெறுதல் பேய்மகளுக்கு என்றும் அரிதாமிறே; இத்தகைய கொடுஞ்செயலைப் பிறரெவருஞ்செய்ய உடன் படாராகிய அருமைபற்றியும், 'அரிதுபற்றிய' என்னலாம். அவள் அப்பொழுது கண்டவர் காதல்கொண்டு நம்புதற்கு ஏற்ற கட்டழகுடைய வடிவத்தைத் தனது மாயையினால் எடுத்துவந்தன ளாதலாலும், கண்ணன் பால் அமுதுசெய்யும் பேறுபெறுதலாலும், அணி முலை யென்றது. அணிமுலை - (ஆரம் முதலிய ஆபரணங்களை) அணிந்தகொங்கையென வினைத்தொகையுமாம். தன்னைக்கொல்லப் பிறந்தவன் ஒளித்துவளர்கிறானென்று உணர்ந்த கம்சனால் விசேஷமான பலம் சாமர்த்தியம் அழகு முதலிய சிறப்புக்களையுடைய குழந்தைகளைக்கொல்லும்படி ஏவியனுப்பப்பட்ட பூதனை யென்னும் ராட்சசி, நல்லபெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை யெடுத்து நஞ்சுதீற்றிய தனது முலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் முலைகளைக் கைகளால் இறுகப்பிடித்து அவளுயிரோடு உறிஞ்சிப் பேரிரைச்சலிட்டுக் கதறி விழுந்து இறக்கும்படி செய்ததென்பது கதை. வித் - (எல்லாப்பொருளையும்) அறியுந்தன்மையை, அகன் - தன்னிடத்தில் உடையவன் எனக் காண்க; இனி, வித்தகன் - ஒரு சொல்லாய், சதுரப்பாடு உடையவனுமாம். முதலடியினால் - பரத்துவமும் சௌலப்பியமும்; மூன்றாமடியினால் - துஷ்டநிக்கிரகமும், நான்காமடியினால் - நிர்ஹேதுககருணையும் விளங்கும். இதுமுதல்இச்சருக்கம்முடிகிறவரையில் பத்தொன்பதுகவிகள் - பெரும்பாலும் முதல்மூன்று ஐந்தாஞ் சீர்கள் - மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எழுசீராசிரியவிருத்தங்கள். (42) திருதராட்டிரன் பாண்டவரிடத்துத் தூதனுப்புமாறுசஞ்சய முனிவனை வருவித்துக் கூறத்தொடங்குதல். 2. | நஞ்சநாகமுயர்த்தமீளிதனகர்புகுந்துழிநண்பறக் கஞ்சமாமனைவென்றவன் செயல்கண்ணிலானொடுரைத்தபின் வஞ்சமைந்தரொடுயவிமீளவுமண்கொடாதகுறிப்பினன் சஞ்சயன்றனைவருகவென்றிருதாள்பணிந்திவைசாற்றுவான். |
|