"அற்றதுபற்றெனி லுற்றதுவீடு""பற்றற்றகண்ணே பிறப்பறுக்கும்" என்றபடி எல்லாப் பற்றுக்களையும் ஒழித்தே முத்திநெறி சேர வேண்டுதலால் 'விட்டு நன்னெறிசேர வுன்னுதி' என்கிறான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்றாசைகளையும் முறையே கூறுவார், இடையில் மண் பொன்களைப் பெறுதற்குக் காரணமான போரிலாசையையுங் கூறினார். தம் பக்கல் எல்லா நற்குணங்களும் அமைந்தவரே பிறர்க்கு உபதேசித்தற்குத் தக்கவராதலால், அவ்வமைதி தோன்ற, 'தூரிலாசையறத் துறந்தருள் சுருதி மாமுனி' என்றார். இராசபதம் - அரசனாயிருக்கும் நிலை; அரசாட்சிச் செல்வம். நேயம் - இது போலியாய் நேச மென்றும் வழங்கும். தூரில் - தூர்தலில்லாத: தூர் - முதனிலைத் தொழிற் பெயர்; இனி ஆசை தூரிலற என இயைத்து ஆசை வேரோடு ஒழிய என்றும் உரைக்கலாம்; "ஆர்வ வேரரிந்து" என்றார் சிந்தாமணியாரும். "அருளிலார்க் கவ்வுலகமில்லை" "அறனுமருளுடையான் கண்ணதேயாகும்" எனத் துறவறத்திற்குச் சிறந்த அருளை உடையதாயிருத்தலை விளக்க 'துறந்தருள்' என்றார். (51) இதுவும், அடுத்த கவியும் - தருமன் கூறும் உத்தரம். 11. | செம்மையல்லதுவிரகிலாதுதெரிந்தமேதகுசிந்தையான்[செய் மும்மையும்தெரிமுனியுரைத்தசொன்முன்னியொண்குறுமுறுவல் திம்மையேவசைநிற்கவீடுறவெண்ணிநீபுகல்வென்னினும் வெம்மையேழ்நரகுந்தனித்தனிவீழ்வதேநலமிகவுமே. |
(இ - ள்.) செம்மை -(பொருள்களின்) நன்மையையும், அல்லது - நன்மையல்லாத தீமையையும், விரகு இலாது - மாறுபாடில்லாமல், தெரிந்த - (உள்ளபடி பகுத்து) அறிந்த, மேதகு சிந்தையால் - மேன்மை பொருந்தின மனத்தினால், மும்மையும் தெரி - மூன்று காலத்து வரலாறுகளையும் அறிந்த, முனி - சஞ்சய முனிவன், உரைத்த - சொன்ன, சொல் - வார்த்தையை, (தருமபுத்திரன்),- முன்னி - (கேட்டு) மனத்திற் கொண்டு, ஒள் குறு முறுவல் செய்து - ஒள்ளிய புன்சிரிப்பைச் செய்து, 'நீ புகல்வு - நீ (இங்ஙனஞ்) சொல்லுதல், இம்மையே வசை நிற்க - இப்பிறப்பில் இவ்வுலகத்திலே பழி நிலைநிற்க, வீடு உற எண்ணி - முத்தி பெறுதலைக் கருதியே, என்னினும் - ஆயினும், (இங்குப் பழி நிற்க வீட்டுலகத்தையடைதலினும்), வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே மிகவும் நலம் - கொடுமையையுடைய ஏழ்வகை நரகங்களிலுந் தனித்தனியே விழுந்து வருந்துவதே மிகவும் நன்மையாம்; (எ - று.) - 'முறுவல் செய்து' என்பது. அடுத்த கவியில் 'பேசினான்' என்பதோடு குளகமாக முடியும். "வசையொழிய வாழ்வாரே வாழ்வாரிசையொழிய, வாழ்வாரே வாழாதவர்" என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும். செம்மையென வந்ததனால், அல்லது - தீமையாயிற்று. விரகு - வஞ்சனை. புன்சிரிப்புச் செய்யுங்காலத்து வெள்ளியபற்களினொளி சிறிது வெளித்தோன்றுதலால், 'ஒண்குறு முறுவல்செய்து' என்றது. ஏழ்நரகம் - |