அள்ளல், ரௌரவம், கும்பிபாகம்,கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி எனப்படும்: தமப்பிரபை, இமப்பிரபை, தூமப்பிரபை, வாலுகப்பிரபை, சாகரப்பிரபை, இரத்தப்பிரபை, அழற்பிரபை என்றும், அவையாவன - இருள், குளிர், புகை, மணல், துயிலாமை, இரத்தம், தீ என்றுங் கூறுவாருமுளர். செம்மையல்லது - உம்மைத்தொகை -ஒண்குறு முறுவல் - பண்புத்தொகை பன்மொழித்தொடர். ஏழ் என இது மெய்யீற்றுப் பெயரென்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கொள்கை; ஏழு என முற்றியலுகரவீ்ற்றுப் பெயரென்பது - நன்னூலார் மதம். (52) 12. | நின்னறத்தினினீர்மைதன்னைவிளங்குமாறுநிகழ்த்தினும் மன்னறத்தினைவிட்டுநல்லறமன்னரானவர்முயல்வரோ என்னறத்தினினின்றுதெவ்வரையிருவிசும்பினிலேற்றினாற் பின்னறத்தினினினைவுகூருமெனக்கனன்றிவைபேசினான். |
(இ - ள்.) நின் - உனக்கு உரிய,அறத்தின் - துறவறத்தினது, இன் நீர்மைதன்னை - இனிமையான தன்மையை, விளங்கும் ஆறு - நன்றாகத் தெரியும்படி, நிகழ்த்தினும் - (நீ) கூறினாலும், மன்னரானவர் - அரசர்கள், மன் அறத்தினை விட்டு - ராஜதர்மத்தை நீங்கி, நல் அறம் முயல்வரோ - சிறந்த துறவற வழியையே அடையப் பிரயத்தனப்படுவார்களோ? (படாரன்றோ!), என் அறத்தினில் நின்று - எனக்குரிய ராஜதருமத்திலே தவறாமல் நிலைத்து நின்று, தெவ்வரை - பகைவர்களை, இரு விசும்பினில் ஏற்றினால் - பெரிய வீர சுவர்க்கத்திலே சேரச்செய்தால் [கொன்றால் என்றபடி], பின் - அதன் பின்புதான், அறத்தினில் நினைவு கூரும் - துறவறத்தில் எண்ணம் மிகும், என - என்று, இவை - இவ்வார்த்தைகளை, கனன்று - கோபங்கொண்டு, பேசினான் - (சஞ்சயனோடு) சொன்னான், (யுதிட்டிரன்); (எ - று.) போரிற் பின்வாங்காமற் பகைவராலிறந்தவர் வீரசுவர்க்கமடைவரென்பது நூற்றுணிபு. துறவறம் முத்திபெறுதற்குரிய சிறந்த உபாயமாதலால், நல்லறமெனப்பட்டது. இராசதருமத்தினின்று பகை யொழித்தபின்பே மனத்திற்குநிச்சலத்தன்மை தோன்றித் துறவறத்திற்குச் செல்லுமாதலால், சஞ்சயமுனிவனே!உன்னுபதேசத்துக்கு என்மனம் இப்போது இடங்கொடாது என்று மறுத்தவாறு. தெவ் - பகைமை யுணர்த்தும் உரிச்சொல்; "தெவ்வுப்பகைமை" என்பதுதொல்காப்பியம்; அதனையுடையவர் தெவ்வர். விசும்பு - ஆகாயம். (53) அதுகேட்டு வீமன் கூறத்தொடங்குதல். 13. | முனியுமப்பெருமுரசுயர்த்தவனும்புகன்றனமுன்னிநா மினியுரைப்பதுகடனெனத்துணைவிழிசிவப்பெழவெழிலியின் தனிதமுற்றனவுருமின்வெஞ்சினமூளமற்றிவைசாற்றுவான் கனியெனத்தினகரனைவவ்வியகடவுண்மாருதிதுணைவனே. |
(இ - ள்.) தினகரனை - சூரியபகவானை(நோக்கி), கனி என - ஒரு பழமென்று கருதி, வவ்விய - (கையாற்) கவர்தற்குத் தொடங்கின, |