பக்கம் எண் :

8பாரதம்உத்தியோக பருவம்

     (இ -ள்.) கரியவன் - கரிய திருநிறமுடைய கண்ணபிரான், புகல்-
(இவ்வாறு) சொன்ன, கட்டு உரை - உறுதிமொழியை, கேட்டபின் -
செவியுற்றவுடனே, காமபாலனும் - பலராமனும், பரியவன் -
பெருமையையுடைய துரியோதனன், அவண் உற்றவர் பலர் காண -
அவ்விடத்தில் [சபா மண்டபத்தில்] வந்துள்ளவர் பலரும் (பிரதியக்ஷமாகப்)
பார்க்கையில், யுதிட்டிரன்தனை - தருமபுத்திரனை, பெரு சூதினால் -
பெரியசூதாட்டத்தினால், வென்று - சயித்து, உரிய அம் புவி-(அத்தருமனுக்கு)
உரியதாயிருந்த அழகிய பூமியை, பல் ஆண்டு - அநேக வருஷ காலம்,
அடிப்பட - தன்கீழ்ப்பட்டு அமைய, ஆண்டான் - அரசாண்டான்; (அங்ஙனம்
அவன் வென்று பலநாள் ஆண்ட இராச்சியத்தை), திரிய - மீளவும், வன்புடன்
- பலாத்காரமாக, வாங்குதற்கு - பறித்துக் கொள்வதற்கு, எண்ணும் -
நினைக்கிற, இ தீ மதி - இந்தக் கெட்ட அறிவு, கொடிது - கொடுமையுடையது,
என்று சொன்னான்-; (எ - று.)

    துரியோதனன் பலராமனிடங் கதாயுதப் பயிற்சியை விசேஷமாகக்கற்றுக்
கொண்டது பற்றிப் பலராமன் அவனிடம் மிகுந்த பக்ஷபாதமுடையவனாதலாலும்,
தனது தங்கையான சுபத்திரையைத் துரியோதனனுக்கும், தனது மகளான
வற்சலையைத் துரியோதனன் மகனான லக்ஷணகுமாரனுக்கும் மணஞ்
செய்விக்கக் கருதியிருந்த எண்ணம் நிறைவேறாதபடி கிருஷ்ணன் சுபத்திரையை
அருச்சுனனுக்கும் வற்சலையை அருச்சுனகுமாரனான அபிமன்யுவுக்கும்
தந்திரமாக மணஞ் செய்து வைத்ததாலும் பலராமனுக்குப் பழைய அபிமானம்
துரியோதனனிடத்தில் நீங்காதிருந்ததனாலும் இங்ஙனங் கூறினதென அறிக.
எந்த வகையிலோ ஒருகால் தருமனைவென்று துரியோதனனாற்
கொள்ளப்பட்டதாதலாலும், பதின்மூன்று வருஷமாய் விட்டதனாற் காலதோஷம்
வந்து விட்டதனாலும், மறுபடி அந்த இராச்சியத்தைப் பாண்டவர்
எவ்விதத்திலாயினும் பெற முயல்வது நீதியன்று என்பது, இதன் கருத்து.
திருதராஷ்டிரன், பாண்டு என்ற இரண்டு ஞாதிகளுள் மூத்தவனாதலால்
இராச்சியத்துக்கு உரியவனான திருதராஷ்டிரனது புத்திரனாதல் பற்றியும்,
துரியோதனனுக்கு அந்த இராச்சியத்தில் அதிக பாத்தியதை இருக்கிறதென்ற
கருத்து, 'பரியவன்' என்ற சொல்லில் தொனிக்குமாறுங் காண்க.  "அவனும்
முடிக்குரியான் தோன்றல் அவனுக்கு, இவனும் இடுகவற்றால் தோற்றான் -
அவனும் அரசிழவா வண்ணம் அறிந்துரைமி னென்றான், வரைகெழுதோள்
மன்னன் மதித்து" என்பது, பாரத வெண்பா.

     பூமிக்குஅழகு, பலவளங்களையு முடைமை, யுதிட்டிரன் - போரில் (பின்
வாங்காமல்) நிலைநிற்பவனென்று பொருள்.  இப்பெயர், இவனது பல
பராக்கிரமங்களை விளக்கும்.  அவண், அண் - இடப்பொருள் காட்டு்ம் விகுதி.
பரியவன் வென்று - வெல்லுதல் வினைக்குத் துரியோதனன் - ஏவுதற்கருத்தா;
துரியோதனனது கருத்தின்படி அவன் மாமனான சகுனி சூதாடித் தருமனை
வென்றனனாதலால், சகுனியின் பக்கத்துக்கு வேண்டிய பந்தயம் வைத்தவன்
துரியோதனனாதலால், அவ்வாட்டத்தில் வெல்லப்படும் பொரு