பிராணிகளைச் சிரமமில்லாமல் எளிதிற்கொண்டுபோதற்குப் போர் கருவியாகுதலால், 'காலன்மாதூதர் மனங்களிக்கப் பொருது' எனப்பட்டது. வசையுமன்று என்ற உம்மையை ஒழியிசைப்பொருளதாக்கி, புகழாகுமென்றும் கருத்துக்கொள்க. (70) 11. | முந்தூர் வெம்பணிக் கொடியோன்மூதூரி னடந்துழவர் முன்றிறோறு, நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு நாடொன்றுநல்கானாகில், ஐந்தூர்வேண்டவையிலெனி லைந்திலம்வேண்டவை மறுத்தாலடு போர் வேண்டு, சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த செங்கண்மாலே. |
(இ - ள்.) சிந்தூரம் -சிந்தூரமென்னும் ஒருவகைச் செம்பொடி யாலாகிய, திலகம் - திலகத்தை அணிந்த, நுதல் - நெற்றியையுடைய, சிந்துரத்தின் - (குவலயாபீடமென்னும்) யானையினது, மருப்பு - தந்தத்தை, ஒசித்த - ஒடித்த, செம் கண் மாலே - சிவந்த திருக்கண்களையுடைய கண்ணனே! - முந்து ஊர் - விரைவாக ஊர்ந்துசெல்கின்ற, வெம்பணி - கொடிய பாம்பின் வடிவத்தை யெழுதிய, கொடியோன் - துவசத்தையுடையவனான துரியோதனனது, முது ஊரில் - பழமையான நகரமாகிய அஸ்தினாபுரியில், நடந்து - (நீ) சென்று,- உழவர் முன்றில் தோறும் - உழுது பயிர் செய்பவர்களது வீடுகளின் முன்னிடங்களிலெல்லாம், நந்து ஊரும் - சங்குகள் தவழப்பெற்ற, புனல் - நீர்வளப்பத்தையுடைய, நாட்டின் - குருநாட்டினது திறம் - பாகத்தை, வேண்டு - (அவனை) விரும்பிக் கேள்; நாடு ஒன்றும் நல்கான் ஆகில் - (அவன்) அந்நாட்டில் நமக்குரிய ஒருபங்கு முழுவதையுங் கொடுக்கச் சம்மதியானானால், ஐந்து ஊர் வேண்டு - (எங்கள் ஐந்துபேர்க்குமாக) ஐந்து ஊரை விரும்பிக்கேள்; அவை இல் எனில் - அந்த ஐந்து ஊரையும் கொடுப்பதில்லையென்றால், ஐந்து இலம் வேண்டு - ஐந்து வீடுகளை விரும்பிக்கேள்; அவை மறுத்தால் - அவ்வைந்து வீடுகளையும் (கொடேனென்று) மறுப்பானானால், அடு போர் வேண்டு - கொல்லுதற்கு உரிய யுத்தத்தை விரும்பிவருக; (எ - று.) இராச்சியத்தைக் கொடுக்கச்சம்மதியானானால், எங்களைவருக்கும் தலைக்கு ஓர் ஊராக ஐந்து ஊரையாவது கேள்; அதுவும் இல்லையென்றால், தலைக்கு ஒரு வீடாக ஐந்து வீட்டையாவது கேள்; இங்ஙனம் எங்களுக்காக நீதானே நேரிற்சென்று தாழ்ந்து யான் கூறியபடி இடங்கேட்கவும், அவன் ஐந்துவீடுதானும் கொடுத்திடேனென்றால், அப்பொழுது, நாம் போர் செய்யக்கடவோமாக முடிவு கூறிவருவாய் என்பதாம். "ஆண்டு பதின்மூன்றுஞ் சென்றனவென்று உரிமை, வேண்டிவிடுக விறல் வேந்தீர் - வேண்டினாற், பார்காட்டித்தந்தானேல் தந்தானாம் தாரானேற், போர்காட்டிற்றன்றோ பொர" என்றபடி அவன் அரசுகொடேனென்று மறுப்பதே போர் செய்யுங்குறிப்பை விளக்குவதாயிருக்கவும், 'அவை மறுத்தால் அடுபோர் வேண்டு' என்றது, முன்பு 'வனவாச அஜ்ஞாதவாசங்களின்பின் அரசு கொடுப்பேன்' என்று வாக்குத்தத்தஞ்செய் |