ளுக்குத்துரியோதனனே உரியவனாதல் பற்றி, 'பரியவன் பெருஞ்சூதினால் வென்று' என்றதாகவும் கொள்ளலாம். இனி, வெல்வித்து என்பது பிறவினை விகுதி தொக்கு நின்ற தென்றாவது, வென்று என்பது பிறவினைப் பொருளில் வந்த தன்வினையென்றாவது கொள்ளுதலும் ஒன்று. பலராமனுக்குச் சூதாட்டத்தில் மிகப் பிரியமாதலால் அவன், 'பெருஞ் சூது' என்றான்; அவனுக்குச் சூதில் மிக விருப்பமாதலைப் பாகவதம், விஷ்ணுபுராணம் முதலியவற்றில் விளங்கக் காண்க. சூதில் வென்றதையே பிரதானமான வெற்றியாக இங்கு எடுத்துக் கூறிச் சாதித்தற்கு இதுவும் ஒரு காரணம், இனி, போர் முதலிய எவ்வகை முயற்சிகளாலும் பெறுதற்கரிய இராச்சியம் முதலிய பொருள்களை எளிதிற் பெறுவித்த மகிமையைக் கருதி 'பெருஞ்சூது' என்றாருமாம். பரிய வல் எனப் பிரித்து, மிக வலிய எனப் பொருள் கொண்டு, சூதுக்கு அடை மொழி யாக்கினும் அமையும். அப்பொழுது, ஆண்டான் என்பதற்கு துரியோதனனென்றே எழுவாய் வருவித்தல் வேண்டும். துரியோதனனைப் பரியவனென்றது மிக்க வலியுடைமையாலும், பெருங்குடும்பமுடைமையாலும், பெருஞ்சேனை யுடைமையாலும், பெருஞ்செல்வமும் பேரிராச்சியமு முடைமையாலும், 'ராஜராஜன்' என அரசர்கள் பலர்க்குப் பெரியவனாதலாலும், பாண்டவர்களுள் அருச்சுனன் முதலிய மூவரினும் பிராயத்தில் மூத்தவனாதலாலு மென்க. பரியவன் - பருமையென்னும் பண்படியாப் பிறந்த பெயர். இனி, பரியவன் - குதிரைச் சேனையையுடையானென்றுமாம். பரி-குதிரை (பாரங்களைப்) பரிப்பது; பரித்தல் - சுமத்தல்; கருத்தாப்பொருள் விகுதி புணர்ந்துகெட்ட காரணப்பெயர். அடிப்பட - வசப்பட, பழக என்றுமாம். திரிய - (அவன்) மனம் மாறுபட என்பாருமுளர் அன்புடன் எனப் பிரித்து, ஆசையோடு எனவுமாம். கரியவன் கிருஷ்ணனென்னும் வடசொல்லின் பொருள் கொண்ட பெயர் காமபாலனென்னும் பெயர்க்கு - (அடியார்களது) வேண்டுகோளைப்: பாதுகாப்பவனென்று பொருள்; காமம் - விருப்பம், உம்மை - கீழ்க் கவியில் 'கரியமாமுகில் சொன்னான்' என்றதனை நோக்குதலால் இறந்தது தழுவிய எச்சம்; இங்ஙனம் எச்சவும்மை கதைத் தொடர்ச்சியை விளக்கப் பலவிடத்தும் வரும். துரியோதனன் தருமனை சூதில் இரகசியமாக வென்றானில்லை யென்பார், 'பலர்காண' என்றார். அவண் உற்றவர் பலர்-பீஷ்மர் துரோணர் கிருபர் அசுவத்தாமன் முதலிய பெரியோர்களும், கர்ணன் முதலிய ஒத்த அரசர்களும் பிறரு மென்க. புகல் கட்டுரை - இறந்தகால வினைத்தொகை உற்று அவர் எனப் பதம் பிரித்து, அப்பாண்டவர்களும் மற்றும் பலரும் அவ்விடத்திற் பொருந்தியிருந்து காணவென்றுங் கொள்ளலாம். பலர் காண ஆண்டான் என்றலுமொன்று. பலராமன் கிருஷ்ணனது தமையன்: விஷ்ணுவின் எட்டாம் அவதார வசுதேவருடைய பத்தினிகளுள் தேவகியின் வயிற்றில் ஆறு மாதமும் உரோகிணியின் வயிற்றில் ஆறுமாதமும் இருந்து பிறந்தவன்; இவனை ஆதிசேஷனது அம்சமென்றும் நூல்கள் கூறும் |