பக்கம் எண் :

98பாரதம்உத்தியோக பருவம்

தான் தூதுசென்றால் சமாதானமில்லாமல்போரையே செய்யும்படி முடிவு
செய்துவரலாமென்பதுமாம். 

     ஸு் ரர்- பாற்கடல் கடைந்தகாலத்து அதனினின்று தோன்றியதொரு
வாருணியென்னுஞ் சிறந்த சுரையைப் பானஞ்செய்தவரென்பது பற்றிய
காரணப்பெயர்; சுரை - மது.  சுருதி - எழுதாக்கிளவியாய்க் குருசிஷ்யக்
கிரமத்தில் கர்ணபரம்பரையிலே கேள்வியில் வழங்குவதென்று பொருள்படுங்
காரணப்பெயர்.  பரமாத்மாவின் ஸ்வரூபத்தை நாடிச்சொல்லிக்கொண்டே
சென்ற வேதம் அதன் முடிவு தனக்கு எட்டாமையால் மீண்டதென்பது,
அவ்வேதம் சொல்வதனாலேயே தெரிகிறது; ஆனதனால், "ஆரேயறிவா
ரனைத்துலகு முண்டுமிழந்த, பேராழியான்தன் பெருமையை" என்றபடி
எம்பெருமானது தன்மை தேவர் முனிவர்யாவர்க்கும் அறிதற்கு
அரியதாதலாலும், "சுரருடனே முனிவர்களும் சுருதிநான்கும் தேடுகின்ற பதம்"
எனப்பட்டது.

    வேண்டா - வேண்டுமென்பதன் எதிர்மறை; 'வேண்டாம்' என்பதும்
பாடம்.  பாவை - சித்திரப் பிரதிமைபோல அழகியவள்;  மனத்திற்குத் திருப்தி
யுண்டாகுமளவும் கலைத்துக் கலைத்து மிகச் சீர்திருத்தமாக எழுதக்
கூடுமாதலால், சித்திரப்பாவை மிக அழகியதாம்; இனி, கண்மணிப் பாவைபோல
அருமையானவ ளென்றுமாம்; பாவை போல்பவளைப் பாவையென்றது
உவமையாகுபெயர்.  மடப்பாவை - மடமை பாவை என்றாவது, மடம் பாவை
என்றாவது பிரிக்க; மடமை - இளமை; மகளிர்க்கு உரிய குணங்களிலொன்றான
பேதைமையுமாம்.  வரம் - விருப்பமுமாம்.  கோடுகின்ற மொழியவன் -
நீதிதவறிய சொற்களை யுடையவன், சொன்னசொல் மாறுபட்டவன்.  அவன்
சொன்னசொல் தவறியமைக்குத் தானே தூதுசெல்லுதல் தகுதி யென்பது,
நான்காமடியின் கருத்து.  என்னைத் தூதனுப்பினால் வெற்றி தவறாதென்பான்,
'என்னைத் தூதுவிடுக இனிக்கொற்ற வேந்தே' என்றான்.            (79)

20.மலைகண்டதெனவென்கைம்மறத்தண்டின்வலிகண்டு மக
                                 வான்மைந்தன்,
சிலைகண்டுமிருவர்பொருந் திறல்கண்டு மெமக்காகத்
                                  திருமானின்ற,
நிலைகண்டுமிவள்விரித்த குழல்கண்டு மிமைப்பொழுதினேரார்
                                       தம்மைக்,
கொலைகண்டுமகிழாம லவன்குடைக்கீ ழுயிர்வாழக்
                                 குறிக்கின்றாயே.

     (இ -ள்.) மலை கண்டது என - மலையைப் பார்த்தாற்போல, என் கை
மறம் தண்டின் வலி கண்டும் - எனது கையிலுள்ள கொடுமையுடைய
கதாயுதத்தினது வலிமையைப் பார்த்திருந்தும், மகவான் மைந்தன் சிலை
கண்டும் - இந்திரனது குமாரனான அருச்சுனனது காண்டீப வில்லின்
தொழிலைப் பார்த்திருந்தும், இருவர் பொரும் திறல் கண்டும் - மற்றையிரண்டு
தம்பியராகிய நகுல சகதேவர்கள் போர்செய்யும் வல்லமையைப்
பார்த்திருந்தும், எமக்கு ஆக திருமால் நின்ற நிலை கண்டும் - நமக்கு
உதவியாக ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணமூர்த்தி உடன்பட்டு நின்ற
உறுதிநிலையைப் பார்த்