பக்கம் எண் :

100பாரதம்வீட்டும பருவம்

பண்புத்தொகையாக, மாட்சிமைப்பட்ட ரூபமென்று உரைப்பாருமுளர். சிறை -
காவலிடம்: பாதாளத்தில் பலிசக்கரவர்த்தியுள்ள விடத்துக்கு விஷ்ணு காவலாக
எப்பொழுதும் வாயிலி லிருக்கிறாரென வுணர்க. அதனையே 'மூன்றடி தருகிறோ
மென்றாய், கொடுத்தவிரண்டடியொழியமற்றை யோரடி நிலத்தையுந்தாராய்' என்று
திருமால் பலியைக் கடன்காரர்க்குரிய சிறையிலே யிட்டதாகக் குறித்தார்:
"ஒருகுறளாயிருநிலம் மூவடிமண் வேண்டியுலகனைத்து மீரடியா லொடுக்கி
யொன்றுந்,தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன்" என்னும்
ஆழ்வாரருளிச்செயலை இங்கே யறிக. ஏவில், இல் - ஐந்தனுருபு ஏது. இனி, ஏ
வில் எனப்பிரித்து,அம்பையும் வில்லையு முடைய என்றும் பொருள் கொள்ளலாம்.

     முதலடியிற்குறித்தகதை:- தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும்,
ஐம்பெரும் பூதங்களாலும் தனக்கு மரணமில்லாதபடி அளவற்ற வரங்களைப்பெற்றுத்
தேவர்முதலியவர்க்குங் கொடுமை யியற்றித் தன்னையே கடவுளாக வணங்கச் செய்து
வந்தவனும், இரணியாக்கனது உடன்பிறந்தவனு மான இரணியன் தன்புத்திரனான
பிரகலாதாழ்வான் தன்பெயர் சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமஞ் சொல்லி
வரவே அவனைக் கொல்லுதற்கு என்ன உபாயஞ் செய்தும் அவன் பகவானருளால்
இறந்திலனாக, இரணியன் மகனைநோக்கி 'நீ சொல்லும் நாராயணனென்பான்
எங்குஉளன்? காட்டாய்' என்ன, அப்பிள்ளை "சாணிணு முளனோர் தண்மை
யணுவினைச் சதகூறிட்ட, கோணினு முளன் மாமேருக் குன்றினுமுள னிந் நின்ற,
தூணினுமுள னீசொன்ன சொல்லினு முளன் இத்தன்மை, காணுதி விரைவின்" என்று
சொல்ல, உடனே இரணியன் நன்றென்று சினந்து தூணைப் புடைக்க, அதில்நின்றும்
பகவான் மனிதரூபமுஞ் சிங்கவடிவமுங் கலந்த நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றித்
திருக்கைந்நகங்களால் அவன்மார்பைப் பிளந்து அழித்திட்டாரென்பது.     (127)

19.வானரகிற்புகு தாமலெனக்குயர் வானுலகைத்தருவான்
நீனினைவுற்றது போனபிறப்பிலென் னீடுதவப்பயனே
யானுமினிப்பிற வாமலளித்தரு ளீசவெனப்பரவா
ஞானமனத்தொடு நாகுழறப்பல நாடியுரைத்தனனே.

     (இ - ள்.) வான் நரகில் புகுதாமல் - (மறுமையில் நான்) பெருநரகத்திற்
செல்லாதபடி, உயர் வான் உலகை எனக்கு தருவான் - சிறந்த முத்தியுலகத்தை
எனக்குக் கொடுத்தருள, நீ நினைவு உற்றது - நீ எண்ணியது, போனபிறப்பில்
என்நீடு தவம் பயன்ஏ - முற்பிறப்புக்களில் யான் செய்திருந்த மிகுந்த தவத்தின்
பலமேயாம்; (ஆதலால்), ஈச - கடவுளே! யான்உம் இனிபிறவாமல் அளித்தருள் -
(எளியவனான) நானும் இனிப் பிறப்பெடுக்காதபடி (அப்பரமபதத்தைத்) தந்தருள்
வாய்,என - என்றுசொல்லி, பரவா-துதித்து, ஞானம் மனத்தொடு -
தத்துவஞானம்பொருந்திய சுத்தசித்தத்துடனே, நா குழற - (தேகம் பக்
திமிகுதியால்பரவசப்