முற்றவெம்பிணக்குவையுமவேழமுமுடுகுவாசியுந்தேரு மொய்ம்புறத் துற்றகுன்றெனவொன்றுபட்டெழச்சொரியுமுளையாறரு வியொக்குமே. |
(இ - ள்.) கொற்றம் மன்னர் - வலிமையையுடைய (இறந்த அரசர்கள்), சென்னியின் அணிந்த - தலையில் அணிந்திருந்த, பொன் கோளம் யாவைஉம் - பொன்மகுடங்களையெல்லாம், தாளம் ஆக ஏ - தாளமாகக் (கையில் ஏந்திக்கொண்டு), அலகை-பேய்கள், அற்றை வெம் சமத்து அடல் அருச்சுனன் ஆண்மை பாடிநின்று-அன்றையதினத்துக் கொடியயுத்தத்திற் காட்டிய அருச்சுனனது பராக்கிரமத்தைப் பாடிக்கொண்டுநின்று, ஆடும் - கூத்தாடும்; வெம் பிணம் குவைஉம் - கொடிய பிணங்களின் கூட்டமும், வேழம்உம்-(இறந்த) யானைகளும், முடுகு வாசிஉம்-(முன்பு) விரைவையுடைய (இறந்த) குதிரைகளும், தேர்உம் - (அழிந்த) தேர்களும், முற்ற-(போர்க்களம்) முழுவதிலும், மொய்ம்பு உற துற்ற குன்று என - வலிமை மிக நெருங்கிய மலைகள்போல, ஒன்றுபட்டுஎழ - ஒன்றுசேர்ந்து உயர்ந்து தோன்ற, சொரியும் மூளை - (அவற்றினின்று) பெருகுகிற நிணம், ஆறு அருவி ஒக்கும் - (அம்மலையினின்று) ஆறுகளாகப்பெருகும் நீரருவிபோலும். கோளம் - வட்டவடிவமாகத் தலையிலணிவதோர் ஆபரணம். கோலம் என்று ஓதி - தலைக்கோலமென்பாரு முளர். பேய்கள் பாடியாடுதற்குக் காரணம், தமக்கு நிரம்பப் பிணங்களாகிற இரை கிடைத்த களிப்பு. இங்ஙனம் கிடைத்தற்குக் காரணம் போரில் எதிரிகள்சேனையை அழித்த அருச்சுனனது ஆற்றலே யாதலால், அதனைப் புகழ்ந்து பாடுவனவாயின. முதலிரண்டடியில் தும்பைத் திணையில் பேய்க்குரவை என்ற துறையின் கருத்தமையக்கூறினார். பின்னிரண்டடியில் தற்குறிப்பேற்றவணி காண்க. மூன்றாமடியிற் பிணமென்றது, மனிதரது உயிர்நீத்தவுடலை. யாறு என்றும் பிரிக்கலாம். (135) 27. | பமரமும்மதக்கரிவிலாவின்வேல்பட்டவாய்நிணம்பறியநிற்பன குமரன்வேலின்வாயனலமூர்தருங்கோடுடைத்தடங்குன்றமொக்குமால் அமரர்கோன்மகன்செங்கையம்பினாலற்றவீரர்தந்தலைகள்கௌவியச் சமரபூமிசேர்ஞாளிமானுடத்தலைவிலங்கினின்றன்மைசாலுமே. |
(இ-ள்.) பமரம் - வண்டுகள்மொய்க்கப்பெற்ற, மும் மதம் - மூன்று வகைமதத்தையுடைய, கரி - யானைகள், விலாவின் வேல் பட்டவாய் நிணம் பறிய நிற்பன - (தத்தம்) விலாப்புறத்தில் (எதிரியின்) வேல் பாய்ந்த இடத்திலே கொழுப்புவெளிப்பட அழிந்துநிற்பவை,-குமரன் வேலின் வாய்-முருகக் கடவுளால் எறியப்பட்ட வேலாயுதந்தைத்தவிடத்திலே, அனலம் ஊர்தரும் - நெருப்புப்பற்றப்பெற்ற, கோடு உடை தட குன்றம் ஒக்கும் - சிகரத்தையுடைய பெரியகிரௌஞ்சகிரியைப் போலும்; அமரர்கோன் மகன் செம் கை அம்பினால் அற்றவீரர்தம் தலைகள் கௌவி - தேவேந்திரகுமாரனான அருச்சுனனது: சிவந்தகைகளால்விடப்பட்ட அம்புகளால் அறுபட்ட வீரர்களது தலைகளைக் கௌவிக்கொண்டு, அ சமரபூமி சேர் - அந்தப்போர்க்களத்திற் பொருந்திய, ஞாளி - |