களத்தில் திகைத்து) நின்று போர்செய்யமறந்ததையும், நெடிய செம் கண் மால் நேமிதொட்டதுஉம் - நீண்ட சிவந்தகண்களையுடைய திருமால் (அதனை நோக்கித் தான்போர்செய்தற்குச்) சக்கரமேந்தினதையும், பின்றை வில் எடுத்து அவன்மலைந்ததுஉம் - அதன்பின்பு வில்லையெடுத்து அவ்வருச்சுனன் போர்செய்ததையும்,பேசினான் - (பாராட்டித் தன்படைவீரரோடு) கூறினான். மெய்என்றது, மண்டலத்தை, அந்திமாலைப்பொழுதில் சூரிய மண்டலத்தில் மிகுதியாக இயல்பில்தோன்றுஞ் செந்நிறத்தைச் செந்நீர் தெளித்ததனாலாகிய தெனக்குறித்தனர்; முன்னிரண்டடியில் ஏதுத்தற்குறிப் பேற்றவணி, தொடர்புயர்வுநவிற்சியணியை அங்கமாகக் கொண்டு வந்தது. சரத்தொடு என்பதில்,'ஓடு' உருபு - கருவிப் பொருளது. ஆள் அரசர் எனப் பிரித்து, ஆளுதற்றொழிலையுடைய மன்ன ரென உரைத்தல் மோனைத்தொடைக்கு மிகப்பொருந்தும், வருணன் மேற்குத்திக்குப்பாலக னாதலால், மேற்றிசை 'வாருணத்திசை' எனப்பட்டது, பிதாமகன் - வீடுமன், மகீபதி - துரியோதனராசனோடு, பேசினான் என்று அநுவயித்துப் பொருள்கூறுதலு மொன்று.பி-ம்: அமர்மலைந்ததும். (137) 29.-இருசேனையும் அற்றையிரவுபோக்கினவகை. தருமன்மாபெருஞ்சேனைதன்னுளார்தங்களாதரத்தொடுதனஞ்சயன் பொருவிலாண்மையும்வீமன்மாமகன்பொருதவீரமும்புகழ்ந்துபாடினார் அரவகேதனன்சேனைதன்னுளாரழிந்தமன்னருக்கழுதரற்றினார் இருவர்சேனையுங்கண்படாமலன்றிரவுபட்டதென்னென்றியம்புவாம். |
(இ - ள்.) தருமன் மா பெரு சேனை தன்னுளார் - தருமபுத்திரனது சிறந்த பெரிய சேனையிலுள்ள வீரர்கள், தங்கள் ஆதரத்தொடு - தமக்குரிய அன்புடனே, தனஞ்சயன் பொரு வில் ஆண்மைஉம் - அருச்சுனன் போர் செய்த வில்லின் திறத்தையும், வீமன் மா மகன் பொருத வீரம்உம்-வீமனது சிறந்தகுமாரனான கடோற்கசன் போர்செய்த வீரத்தன்மையையும், புகழ்ந்து, பாடினார் - புகழ்ந்து துதித்தார்கள்; அரவகேதனன் சேனை தன்னுள்ளார்- பாம்புக்கொடியனான துரியோதனனது சேனையிலுள்ளவர்கள், அழிந்த மன்னருக்கு அமுது அரற்றினார்- (தம்பக்கத்தில் இறந்த அரசர்க்காகப்புலம்பிக் கதறினார்கள்; (இவ்வாறு), இழுங்கா சேனைஉம் - இருதிறத்தாரது சேனைகளும், கண் படாமல் - தூங்காமல், அன்று இரவு - அன்றையிராத்திரி முழுவதும் பட்டம் அடைந்தநிலைமையை, என் என்று இயம்புவாம் - (யாம்) என்ன வென்றுசொல்வோம்? (எ - று.)-சொல்வது அரிது என்றபடி. ஆதரத்தொடு புகழ்ந்துபாடினார் என இயையும். தநஞ்சயன் என்னும் வடமொழிப்பெயர்க்கு - செல்வத்தைச் சயித்தவனென்று பொருள்; தருமபுத்திரன் ராஜசூயபாகஞ் செய்யவேண்டியபொழுது, அவன் கட்டளையால் அருச்சுனன் வடதிசையிற் சென்று பல அரசர்களை வென்று அவர்கள் செல்வத்தைத் திறை |