யாகக் கொணர்ந்ததனால், இவனுக்கு இப்பெயர் வந்தது; இனி, இதற்கு- வெற்றியையே செல்வமாகக் கொள்பவ னென்றும் பொருள் கொள்ளலாம். பட்டது - முறையே அடைந்த இன்பமும் துன்பமும் பி-ம்: தருமன்மாமகன்சேனை. (138) 30.-மறுநாள் சூரியோதய வருணனை. தென்னலங்கையிற் கொண்ட தென்னையே நேமி யாகவந் நீலமேனியான் இன்ன மும்பொரத் தேடு மாகவத் தின்று மென்று கொண்டெண்ணியேகொலோ தன்னெ டுந்தனிச் சயில மும்பொலத் தபனி யத்தடஞ் சயில மாகவே மின்னெ டுஞ்செழுங் கதிர்பரப்பினான் வெய்ய வேழ்பரித் தேர்வி பாகரன். |
(இ-ள்.) 'அ நீலம் மேனியான் - நீலநிறமுள்ள திருமேனியையுடைய அக்கண்ணபிரான், நென்னல் - நேற்று, நேமி ஆக - சக்கரமாக, அம் கையில் கொண்டது - அழகிய (தனது) திருக்கையில் எடுத்துப் பிடித்தது, என்னையே-; (ஆதலால்), இன்னமும்-, இன்றுஉம் - இன்றைக்கும், ஆகவத்து - போர்க்களத்தில், பொர - போர்செய்யும்பொருட்டு, தேடும் - (என்னைத்) தேடுவான்,' என்று கொண்டுஎண்ணிஏ கொல்ஓ - என்று நினைத்துத்தானோ, வெய்ய ஏழ் பரி தேர் விபாகரன் -வெவ்வியஏழு குதிரை பூண்ட தேரையுடைய சூரியன், தன் நெடு தனி சயிலம் உம்பொலம் தபனியம் தட சயிலம் ஆக - தனது உணர்ந்தஒப்பற்ற உதயகிரியும் அழகியபொன்மயமான பெரிய மகாமேருகிரியாகும்படி [செந்நிறமடையுமாறு], மின் நெடுசெழு கதிர் பரப்பினான். விளங்குகிற நீண்ட மிக (தனது) சிவந்தகிரணங்களைப்பரவச் செய்தான் [உதித்தான் என்றபடி]; (எ-று.) ஏதுத்தற்குறிப்பேற்றவணி. சூரியன் திருமாலினது சக்கராயுதத்தின் அமிசமாதலால், இங்ஙனங் கூறினது. என்றுஎண்ணிக்கொண்டு கொலோ எனமொழிமாற்றி யுரைப்பினும் அமையும். சைலம், தபநீயம், விபாகரன் - வடசொற்கள், சைலம்-சிலாமயமானது: சிலை - கல். தபநீயம்-(நெருப்பில்) தபிக்கப்பட்டு விளங்குவது; தபித்தல் - எரித்தல். விபாகரன் என்பது - விசேஷமாகஒளியைச் செய்பவ னென்றும், விசேஷகாந்திக்கு இருப்பிடமானவ னென்றும்பொருள்படும்; முறையே வி பா கரன் என்றும், வி பா ஆகரனென்றும் பிரியும்: வி -விசேஷம், பா - பிரகாசம். (139) மூன்றாம்போர்ச்சருக்கம் முற்றிற்று. ---- நான்காம்போர்ச்சருக்கம். 1.-கடவுள்வணக்கம். தேடிய வகலிகை சாபந் தீர்த்ததாள் நீடிய வுலகெலா மளந்து நீண்டதாள் ஓடிய சகடிற வுதைத்துப் பாம்பின்மே லாடியுஞ் சிவந்ததா ளென்னை யாண்டதாள். |
|