பக்கம் எண் :

110பாரதம்வீட்டும பருவம்

     (இ - ள்.) என்னை ஆண்டதாள் - என்னை அடிமையாக
ஆட்கொண்டருளிய (திருமாலினது) திருவடிகள்,-தேடிய - (எங்கு உள்ளாளென்று)
தேடத்தக்க [இன்னாளென்று அறியவெண்ணாதபடி வேற்றுருவடைந்த], அகலிகை -
அகலிகையயினது, சாபம் - சாபத்தை, தீர்த்த - (ஸ்ரீராமாவதாரகாலத்தில்)
நீக்கியருளிய, தாள் - திருவடிகளும், நீடிய உலகு எலாம் - நீண்ட
உலகங்களெல்லாவற்றையும், அளந்து - (திரிவிக்கிரமாவதார காலத்தில்)
அளவாநின்றுகொண்டு, நீண்ட - நீண்டுசென்ற, தாள் - திருவடிகளும், ஒடிய -
(தன்னைக்கொல்லும்பொருட்டு) விரைந்துவந்த, சகடு - சகடாசுரன், இற -
அழியும்படி, உதைத்து - (கிருஷ்ணாவதாரகாலத்திலே) உதைத்து, பாம்பின் மேல்
ஆடிஉம் - (காளியனென்னும்) நாகத்தின்மேல் கூத்தாடியும், சிவந்த -
செந்நிறமடைந்த, தாள் - திருவடிகளுமாம்.

     தமக்குஉரிய கடவுளினது சீர்பாதங்களின் பற்பல மகிமையை எடுத்துக்
கூறியவாறு. 'தேடியவ்வகலிகை' என்ற பாடத்துக்கு - அவ்வகலிகையுள்ள
விடத்தில்தாமாகச்சென்று என்ற பொருள் கூறுக. சகடு - ஸகடம் என்னும்
வடமொழித் திரிபு:பண்டியென்று பொருள். ஆடியும், உம் - இறந்ததுதழுவியது.
'உதைத்தும்' எனப்பாடங்கொள்ளின், இரண்டும்- எண்ணும்மை.

     அகலிகை - அஹல்யா என்னும் வடமொழித் திரிபு: இச் சொல்லுக்கு
அழகில்லாமையில்லாதவ ளென்று பொருள்: மிக்க அழகுடையவ ளென்று கருத்து;
ஹலம் என்றார் விரூபம்: ஹல்யம் - அழகின்மை. இவள்-கௌதம முனிவரது
மனைவி: சநகமகாராசாவுக்குப் புரோகிதராகிய சதாநந்தமுனிவரது தாய். பிரமதேவர்
பூர்வத்தில் ரூபத்திலுங் குரலிலும் பேதமில்லாமல் ஒருபடிப்படவே பிரஜைகளைப்
படைத்துவந்தார்; பின்பு, ஒருவர்க்கொருவர் வேற்றுமையின்றி யிருப்பது நலமன்
றெனக் கருதி, முன்படைத்த பிரஜைகளுக்கு அந்தந்த அங்கங்களிலுள்ள
சிறப்பையெல்லா மெடுத்து, அதைக்கொண்டு அழகுமிகுந்த பெண்ணொருத்தியைச்
சிருஷ்டித்து, அவளுக்கு அஹல்யையென்று பெயரிட்டார்;  அப்பொழுது இந்திரன்
இம்மேலான பெண்ணுக்குக் தக்ககொழுநன் மேலான தானேயன்றி வேறில்லை
யென்று செருக்குற்றிருந்தான்; படைத்தற்கடவுள் அவளை அவனுக்குக் கொடாமல்
கௌதமமுனிவரிடம் கொடுத்து 'இவளைப் பாதுகாத்துவாரும்' எனக்
கட்டளையிட்டார்; அவ்வாறே அவர் வெகுகாலம் பாதுகாத்துப் பின்பு
பிதாமகக்கடவுளிடங் கொணர்ந்து விட்டார்; கௌதமரது மனஞ் சபலப்படாம
லிருந்ததையும், அவரது தவநிட்டையையுங் கண்டு, நான்முகக்கடவுள் உவந்து
அம்முனிவருக்கே அவளை மனைவியாக்கினார்; இந்திரனோ பொறாமை கொண்டு
வேற்றுருவத்தால் அவளைக் கற்பழிக்கக் கருதினான்: இவ்வாறு
பலநாளாய்ப்பெருங்காதல்கொண்டிருந்த தேவேந்திரன் ஒருநாள் நடுராத்திரியில்
கௌதமராச்சிரமத்துக்கு அருகேவந்து பொழுதுவிடியுங்காலத்துக் கோழிகூவுவது
போலக் கூவ, அது கேட்ட முனிவர் சந்தியாகாலஞ் சமீபித்துவிட்ட தெனக்கருதி