பக்கம் எண் :

116பாரதம்வீட்டும பருவம்

மெய் தலை கால்கள் கரந்து - கையும் வாலும் உடம்பும் தலையும் கால்களும்
மறைந்து, அ வாரணம் - அந்தயானை, வாரணம் ஆகியது - கோழிபோலச்
சுருண்டது; (எ-று.)

     வாரணமாகியது என்பதற்கு - சங்குபோலாயிற்று என்று உரைப்பாருமுளர்.
"யானையுங் கோழியுஞ் சங்கும் வாரணம்" என்ற திவாகரத்தை இங்கு அறிக.
வாரணம் - கடலென்றுகொண்டு, எல்லா வுறுப்புக்களும் தெரிதலின்றிக்
கருநிறமொன்றே தெரிதலால், இவ்வாறு கூறியதென உரைவகுத்தாரு முளர்: அது
சிறவாதென்பது மேற்பாடலை நோக்கின் விளங்கும். வாகு - இங்கே கை;
"தோளுற்றொர்தெய்வந் துணையாய்" என்ற சிந்தாமணியில், 'தோள்'
என்பதுபோல.                                             (149)

11.கம்பித்தனகாருடல்பேருயிருங்
கும்பித்தனவாயுகுமாரனிவ
னம்பொற்கரபங்கயமள்ளுதலிற்
றும்பிக்குலமாயினதும்பிகளே.

     (இ - ள்.) கார் உடல் கம்பித்தன - கரிய உடல் நடுங்கின வாகும்படியும்,
பேர்உயிர்உம் கும்பித்தன - பெரிய உயிரும் உள்ள டங்கினவாம்படியும், வாயு
குமாரன்இவன்-வாயுவின்மகனான இவ்வீமன், அம் பொன்கரம் பங்கயம்
அள்ளுதலின் -அழகிய பொன்னிறமான தன் கைகளாகிய தாமரைமலர்களில்
எடுத்ததனால்,தும்பிகள் - யானைகள், தும்பி குலம் ஆயின-வண்டின்
கூட்டமாயின; (எ - று.)

     "தும்பியே களிறு வண்டாம்" என்ற நிகண்டையுங் காண்க, கம்பித்தன.
கும்பித்தன - வடசொல்லடியாப்பிறந்த பலவின்பால் முற்றேச்சங்கள்; கம்பம்-
நடுக்கம்:கும்பித்தல்-ஒடுங்குதல், கரிய பெரிய யானைகள், கரியசிறிய
வண்டுகள்போலஉடல்சுருங்கின என்க, யானையை வண்டென்பதற்கு ஏற்ப,
வீமன்கையைத்தாமரைமல ரென்றார்: உருவகவணி, பி-ம்: தம்பித்தனகாருடல்,

12.பொன்னாகமணிப்புயன்வெங்கதையான்
முன்னாகமலைந்துமுருக்குதலா
லெந்நாகமுநாகமெனும்படியே
மன்னாகவமெங்கும்மடிந்தனவே.

     (இ - ள்.) பொன் நாகம் மணி புயன் - பொன்மலையாகிய மகா
மேருபோன்றஅழகிய தோள்களையுடைய வீமன், வெம் கதையால் - கொடிய
(தனது)கதாயுதத்தால், முன் ஆக மலைந்து - எதிராகப் போர்செய்து,
முருக்குதலால் -அழித்ததனால், எ நாகம்உம் - எல்லா யானைகளும், நாகம்
எனும் படிஏ -மலைகளென்று உவமைசொல்லும்படி, மன் ஆகவம் எங்கும் -
பெரிய போர்க்களம்முழுவதிலும், மடிந்தன - இறந்துவிழுந்துகிடந்தன;  (எ-று.)

     "நாகம் விண் குரங்கு புன்னை நல்தூசு மலைபாம்பி யானை" என்பது
நிகண்டு. பொன் ஆகம் எனப் பிரித்தால், அழகிய