அல்லது ஜயலக்ஷ்மிதங்குகிற மார்பென்னலாம். நாகம் - யானையைக் குறிக்கும்பொழுது, மலையில் வாழ்வதென்றும் [நகம்-மலை]; மலையைக் குறிக்கும்பொழுது, சலியாததென்றும் காரணங் காண்க. பி-ம்: மின்னாக மணிப்புயன். (151)
13. | கோடுங்கரமும்பறியக்குதிகொண் டோடுங்குருதிப்புனலூடுடல மூடும்படியாவருமூழ்குதலா லாடுங்கயமாயினவக்கயமே. |
(இ - ள்.) கோடுஉம் கரம்உம் பறிய - தந்தங்களுந் துதிக்கையும் பிளந்தொழிய, குதிகொண்டு ஓடும் - (அப்பொழுது அந்தக் கொம்புங் கோடும் பறியுண்ட இடத்தினின்று) பாய்ந்தோடுகின்ற, குருதி புனலூடு - இரத்த வெள்ளத்தில்,உடலம் மூடும் படி யாவர்உம் மூழ்குதலால் - (தம்தம்) உடம்பு மறையும்படி பலரும்மூழ்கவிருந்ததனால், அ கயம்- அவ்யானைகள், ஆடும் கயம் ஆயின-நீராடுதற்குரியகுளங்களாயின; (எ - று.) தந்தங்களுந் துதிக்கையும் பறியப் பாயும் இரத்தப்பெருக்குக்கு, கரைகளும் மதகும் உடையப் பாயும் புதுநீர்வெள்ளம் உவமையாம், "குளமுமாழமு நீருங் குறையுங், களிறும் பெருமையு மென்மையுங் கயமெனல்" என்பது பிங்கலந்தை, கயம்- யானையைக் குறிக்கும்பொழுது, கஜமென்னும் வடமொழித் திரிபாம், புனலூடு. ஊடு- ஏழனுருபு, உடலம். அம்-சாரியை, (152) 14. | வீசுந்தமகைம்முதன்மெய்ம்முழுதுங் கூசும்படிசிற்சில்குழம்புகளாய் மூசுங்களபக்குலமொய்ம்பனுடற் பூசுங்களபக்களிபோன்றனவே. |
(இ - ள்.) மூசும் சில் சில் களபம் குலம்-நெருங்கிவருகிற சிலசில யானைகளின்கூட்டம்,-கூசும்படி - (பார்ப்பவர்) அஞ்சும் படி, வீசும் தம கை முதல் மெய்முழுதுஉம் குழம்புகள் ஆய் - முன்னேவீசுகிற தம்முடைய துதிக்கை முதலாகஉடம்புமுழுவதுங் குழைசேறாகி, மொய்ம்பன் உடல் பூசும் களபம் களி போன்றன -வலிமையையுடைய வீமசேனனது உடம்பில் பூசுதற்கு எதிர்வைத்த கலவைச்சந்தனக்குழம்பை யொத்தன; "கலவையும் யானைக் கன்றுங் களபம்" என்றார் பிங்கலத்தையிலும். களபம்- யானையைக்குறிக்கும்பொழுது, வடசொல்; பத்துப் பிராயத்து யானைக்கன்றுக்குப் போதகமென்றும்,-முப்பதுபிராயத்து யானைக் கன்றுக்குக் களபமென்றும் பெயர்கூறுதல், வடமொழிமரபு. கலவை- குங்குமப்பூ முதலிய பலவகைவாசனைப்பண்டங்கள் கலக்கப்பெற்ற செந்நிறச்சாந்து. கலவை, வெற்றிமகளை மணந்திடுதற் கென்க. (153) 15. | கிரியேயெனவந்தெதிர்கிட்டினபுன் பொரியேயெனவானிடைபுக்கனபோ |
|