| ரரியேறனையான்வலிமைக்கவர்தங் கரியேகரியல்லதுகண்டவர்யார். |
(இ - ள்.) கிரிஏ என வந்து எதிர் கிட்டின - மலைகளேயென்று உவமை கூறும்படி எதிரில் வந்து நெருங்கின யானைகளெல்லாம், புல் பொரிஏ என வானிடைபுக்கன - அற்பமானநெற்பொரிகளே யென்று உவமை கூறும்படி (அப்பொழுதுவீமனால் எளிதில் எறியப்பட்டு) ஆகாயத்திற் பறந்தன; போர் அரி ஏறுஅனையான் வலிமைக்கு - போரில் ஆண்சிங்கத்தை யொத்தவனான வீமனதுபலத்துக்கு, அவர்தம் கரிஏ கரி அல்லது - அவர்களது [பகைவர்களது] யானைகளே சாட்சியில்லாமல், கண்டவர் யார் - (வேறே உள்ளபடி) கண்டவர் எவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ - று.) எவருங் கண்கொண்டு காணவொண்ணாதபடி உக்கிரமாக வீமன் யானைகளைத் தனதுபேராற்றலால் அழித்திட்டன னென்பதாம். "கரி யென்பதிருந்தைசான்று கறையடி சேகு நாற்பேர்" என்பது நிகண்டு. பலபலவகையாக வீமனால்அழிக்கப்பட்ட யானைகளைக்கொண்டே அவனதுவல்லமையை நன்கு அறியலாம்என்பது, பின்னிரண்டடியின் கருத்து, பற்பல யானைக்கூட்டத்தை ஒருங்கேஅலட்சியமாக அழித்தல்பற்றி, இங்கே வீமசேனனுக்குச் சிங்கவேற்றைஉவமைகூறினார். (154) 16.-வீமன் இங்ஙன் கடுமையாகப் பொருவதனால் எதிர்மன்னர் தம்வாகனங்களோடு வென்னிடுதல். இவ்வாறுவெகுண்டிவனெற்றுதலுங் கைவாரணவேலைகலக்கமுறத் தெவ்வாகியமன்னவர்தேர்களொடும் வெவ்வாசிகடம்மொடும்வென்னிடவே, |
இதுவும், மேற்கவியும் குளகம், (இ-ள்.) இ ஆறு - இப்படி, வெகுண்டு - கோபங்கொண்டு, இவன்-இவ்வீமன், எற்றுதலும்-தாக்கினவளவிலே, கை வாரணம் வேலை- துதிக்கையையுடைய யானைச்சேனையாகிய கடல், கலக்கம் உற-மிகக்கலங்க,-தெவ் ஆகிய மன்னவர் - பகைவராகிய அரசர்கள், தேர்களொடுஉம்-இரதங்களோடும், வெம் வாசிகள் தம்மொடுஉம்- உக்கிரமான குதிரைகளோடும், வென் இட - புறங்கொடுத்தோட,(எ- று.) -'உடைக்கின்றமை கண்டு உரகத்துவசன்... அவன்மேற்போனான்' என அடுத்த கவியிலே முடியும். வாரணமென்பது-யானை கோழி சங்குதடை முதலியபலபொருள் குறிக்கும் ஒருபெயர்த்திரிசொ லாதலால், அது இங்கே இன்ன பொருளதென வெளிப்படையாக்குதற்கு, 'கைவாரணம்' என்றார். 17.-அதுகண்டு துரியோதனன் வீமன்மீது சேறல். உடைகின்றமைகண்டுரகத்துவசன் குடையுங்கொடியுங்குளிர்மாமுரசும் படையுஞ்சிலதம்பியரும்பலரும் புடைகொண்டுவரப்போனானவன்மேல். |
|