அவனால் தோற்றமிலனாய் நின்ற (தூயநல்லறிவனென்கிற) புருஷனும், தோன்றும் - வெளிப்பட்டுவிளங்குவான்; (எ - று.)- 'கண்டாய்' என்பதற்குக் கீழ்உரைத்தவாறு உரைக்க. பஞ்சேந்திரியங்களுக்கு வசப்பட்டு அவற்றின் புலன்களிலே முக்குணங்களோடும் மற்றும்பல தீச்சிந்தைகளோடும் மனத்தை அதுபோகிறவழிப்படி யதேச்சையாக விட்டிடாமல் அடக்கிவைத்தால் தத்துவஞானம் உண்டா மென்பது கருத்து. அரிஷட்வர்க்க மென்றும் உட்பகை யென்றுங் கூறப்படுகிற காமம் முதலிய ஆறினையும் யானை தேர் குதிரை வில் வாள் வேல் என்னும் அறுவபை்படைகளாக உருவகப்படுத்தினார்; மனமென்னும் பகைவன் விவேகமாகிய அரசனைப் போர்செய்து அடக்குதற்கு இவை துணை நிற்றாலென்க. அரசாளுதல் - கருதியபடியெல்லாஞ்செல்லுதல். அந்த மனம் - மாயையினிடத்துத் தோன்றி அறிவைத் தோற்றமின்றாக்கிவைத்த மன மென்றவாறு. தோன்றல் - விளங்குந்தன்மையனான புருஷன்; இதில் அல் - கருத்தாப்பொருள்விகுதி. இது - ஆண்பாற்சிறப்புப்பெயர். முக்குணங்களை மந்திரிகளாகக்கொள்க. மனத்தின் தூண்டுதலாலே ஐம்பொறிகள் ஐம்புலன்களின்வழியே செல்லுதலால், 'பொறிவாய்நின்று பொருளாயின்று' என்றார்; "உண்டற்குரிய வல்லாப்பொருளை, உண்டன போலக் கூறலு மரபே" என்ற வழுவமைதியால், 'அயின்று' எனப்பட்டது. போது - மரூஉ. (3) 4. | அந்தநல்லறிவன்றன்னையறிந்தவரறிஞராவார் தந்தையால்வகுக்கப்பட்டசராசரப்பொருள்கடோறும். வந்தவான்றீம்பானெய்போலுயிர்க்குயிராகிவாழும் பந்தமதுணர்ந்துநேரேபார்க்குங்காற்பகையார்நண்பார். |
(இ-ள்.) அந்த நல் அறிவன்தன்னை - அந்தச் சுத்தஞான மென்கிற புருஷனை அறிந்தவர் - (உள்ளபடி) உணர்ந்தவரே, அறிஞர் ஆவார் - புத்திமான்களாவார்கள்; தந்தையால் வகுக்கப்பட்ட - (எல்லாப் பிரபஞ்சத்துக்கும்) பரமபிதாவான கடவுளால் அமைக்கப்பட்ட, சர அசரம் பொருள்கள்தோறுஉம் - சஞ்சரிப்பனவும் சஞ்சரியாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும், ஆன் வந்த தீம்பால் நெய்போல் - பசுவினிடமாக வந்த இனிய பாலினிடத்து நெய்போல, உயிர்க்கு உயிர் ஆகி வாழும் - (சகல) சிவாத்துமாக்களினுள்ளும் அந்தராத்துமாவாய் (மறைந்து அப்பரமான்மா) வாழ்கின்ற, பந்தம்அது - சம்பந்தத்தை, நேரே உணர்ந்து - வழுவற அறிந்து, பார்க்கும் கால் - ஆலோசிக்குங்காலத்து, பகை யார் நண்பு ஆர் - (ஒருவனுக்குப்) பகைவர் எவர்? நண்பர் எவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ - று.) எல்லாச்சீவான்மாக்களிடத்தும் பரமான்மா ஒருதன்மையாகவே பொருந்தியிருக்கையில் அவற்றில் சிலவற்றைப் பகையாகவும் சிலவற்றை நண்பாகவும் கருதுவது மாயாகாரியமேயன்றி வேறன்று என்பதாம். பால் நெய் - விட்டுப் பிரியாது உள்ளுறைதற்கு உவமம். சராசரம் - உம்மைத்தொகை தீர்க்கசந்தி: எழு |