20.-துரியோதனன் கடுங்கணைவிடவே வீமன் வெகுளுதல். சிங்கக்கொடியற்றணிதேர்சிதைவுற் றங்கத்தினுழைந்தனவம்புகளுந் துங்கக்கடகத்திரடோள்புடையா வெங்கட்கனல்வீமன்வெகுண்டனனே. |
(இ - ள்.) (துரியோதனன் விட்ட அம்புகளால்), சிங்கம் கொடி அற்று- சிங்கத்தின்வடிவமெழுதிய (வீமனது) துவசம் துணிபட, அணி தேர் சிதைவுற்று- அழகிய தேரும் அழிவடைய, அங்கத்தின்உம் அம்புகள் நுழைந்தன - வீமனுடம்பிலும் துரியோதனனம்புகள் தைத்துச்சென்றன; (அப்பொழுது), வெம் கண்கனல் வீமன்- உக்கிரமானகண்களிற் கோபாக்கினியுடைய வீமசேனன், துங்கம் கடகம்திரள் தோள் புடையா- உயர்வானவையும் கடக மென்னும் ஒருவகையணியையணிந்தவையும் திரண்டுள்ளவையுமான தனது தோள்களைக் (கைகளால்) கொட்டி,வெகுண்டனன் - சினங்காட்டினான்; (எ-று.)--அற்று, உற்று- எச்சத்திரிபுகள்.இரண்டாம் அடியில் உம்மை மாறுக. தோள்புடைத்தல்- கோபாவேசம். 21.-வீமன்நொந்தானென்று தம்பிமார்முதலியோர் துணையாகவருதல். நொந்தானிவனென்றுநுதிக்கதிர்வே லந்தார்முடிமன்னரநேகருடன் வந்தார்பலதம்பியர்மைத்துனருங் கொந்தார்தொடைவீரகுமாரருமே. |
(இ - ள்.) (அப்பொழுது), இவன் நொந்தான் என்று - இவ்வீமன் (துரியோதனனம்புகளால்) வருத்தமுற்றா னென்று கருதி, நுதி கதிர் வேல் அம் தார் முடி மன்னர் அநேகருடன் - கூர் நுனியையும் ஒளியையுமுடைய வேலாயுதத்தையும் அழகிய மாலையையும் கிரீடத்தையு முடைய பல அரசர்களுடனே, பல தம்பியர் மைத்துனர்உம்-தம்பிமாரும் மைத்துனன்மாருமாகிய அநேகம்பேரும், கொந்து ஆர் தொடை வீர குமாரர்உம் - பூங்கொத்துப் பொருந்தின மாலையையுடைய வீரர்களானஇராசகுமாரர்களும், வந்தார் - (வீமனுக்கு உதவியாக) வந்தார்கள்; (எ-று.) நுதி - வடசொல். மைத்துனர் - இங்கே, மனைவியின் உடன் பிறந்தவர்; என்றது, திரௌபதிக்கு உடன்பிறந்தமுறையாகுபவரை. கொந்து -எதுகை நோக்கிய மெலித்தல். கொந்து ஆர் தொடை- திரட்சி பொருந்தின மாலை யென்றும் உரைக்கலாம். (160) 22.-துரியோதனன்பக்கத்தும் பலமன்னர் துணையாகத்திரளுதல். மலருங் குடைமன் னவர்வந் தமைகண் டலருங் கொடிவா ளரவோ னருகே பலருங் கரிதேர் பரியா ளுடனே சிலரும் புவிபா லர்திரண் டனரே. |
|