(இ - ள்.) (இவ்வாறு வீமனுக்குத் துணையாக), மலரும் குடை மன்னவர் வந்தமை - பரந்துவிளங்கும் வெண்கொற்றக் குடையையுடைய பல அரசர்கள் வந்ததை, கண்டு-, பலர்உம் கரி தேர் பரி ஆளுடனே - யானைவீரரும் தேர்வீரரும்குதிரைவீரரும் காலாள் வீரரும் ஆகிய (நால்வகை) வீரர் அநேகரோடும், புவிபாலர்சிலர் உம் - சில அரசர்களும், அலரும் கொடி வாள் அரவோன் அருகுஏதிரண்டனர் - விரிந்துவிளங்கும் துவசத்திலே கொடியபாம்பின் வடிவத்தையுடையதுரியோதனனது அருகிலே (உதவியாக வந்து) கூடினார்கள்; (எ - று.) வாள் அரவு-வாள்போலஉக்கிரமான அர வென்க; இனி, ஒளியையுடைய பாம்பெனினுமாம். மூன்றாமடியை, கரிதேர்பரி ஆள் பலருடனேயும் என மொழிமாற்றுக. புவிபாலர் - பூமியைக் காப்பவர். (161) வேறு. 23.-இருபடையிலும் மன்னர் கடுமையாகப்பொருது ஆவியிழத்தல். எதிர்ந்தார் மன்ன ரிருதிறத்து மொருவர்க் கொருவ ரிடையிடைநின் றதிர்ந்தார் சிறுநாண் பேரொலியா லுடையா வல்ல வகிலாண்ட முதிர்ந்தார் போரிற் றொடுகணையான் முரட்டோ டுணிந்து முடிதுணிந்தும் உதிர்ந்தார் தத்த முடனிலத்தி லுயர்ந்தா ராவி யுயர்வானில், |
(இ - ள்,) இரு திறத்துஉம் - இரண்டுபக்கத்திலும், மன்னர் - பல அரசர்கள், ஒருவர்க்கு ஒருவர் எதிர்ந்தார் - ஒருவரோடு ஒருவர் எதிரிட்டார்கள்; இடை இடைநின்று - (அவ்யுத்தகளத்தின்) இடந்தோறும் பொருந்திநின்று, சிறு நாண் அதிர்ந்தார்- சிறியவில் நாணியை(க் கைவிரலால் தெறித்து) ஒலிசெய்தார்கள்; பேர் ஒலியால் -அந்தப் பெரிய ஓசையினால், அகில அண்டம் உடையா அல்ல - எல்லாவண்டங்களும் (மிகஅதிர்ந்து) உடைபடாதனவல்ல[யாவும் உடைபட்டன];் (இன்னும்அவர்), தொடுகணையால் போரில் முதிர்ந்தார் - பிரயோகிக்கின்ற அம்புகளால்போர்செய்தலில் மிக்கார்கள்; (பின்புபகைவர்படைக்கலங்களால்), முரண் தோள்துணிந்துஉம்-வலிமையையுடையதோள்கள் அறுபட்டும், முடி துணிந்துஉம்-தலையறுபட்டும், தம் தம் உடல் நிலத்தில் உதிர்ந்தார் - தம்தமது உடம்பு தரையிலேசிதறப்பெற்றார்கள்; ஆவி உயர் வானில் உயர்ந்தார் - (தத்தம்) உயிர் சிறந்தவீரசுவர்க்கத்தில் ஏறப்பெற்றார்கள் [இறந்தார்கள்]; (எ - று.) மன்னர் உடல் உதிர்ந்தார், ஆவி உயர்ந்தார் - திணைவழுவமைதி: 'பேரொலியாலுடையாவல்லவகிலாண்டம்' என்ற வாக்கியம், வில்நாணொலியைச் சிறப்பித்துக்கூறவந்த இடைப்பிறவரல். இதுமுதற் பத்துக் கவிகள் - கீழ்ச்சருக்கத்தின் முதற்கவி போன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள். (162) 24.-வீமன் துரியோதனனுடையவில்முதலியனதுணியஎய்து நகைத்தல். தாமத்தெரியல்வலம்புரியோன்றடந்ததாமரைக்கைத்தனுத்தறியச் சேமக்கவனப்பவனகதிப்பரிமாநான்குஞ்சிரந்துணிய |
|