மாமொட்டொடிந்துகொடுஞ்சியுடன்மான்றேர்சிதையமார்புருவ நாமக்கணைகள்பலபடவில்லுகைத்தானின்றுநகைத்தானே. | (இ - ள்.) (அப்பொழுது), தாமம் - ஒளியையுடைய, வலம்புரி தெரியலோன்- நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனனது, தட தாமரை கை - பெரிய தாமரைமலர்போன்ற கையிலுள்ள, தனு - வில், தறிய - முறிபடவும்,-சேமம்- நன்மையுள்ள, கவனம் பவனம் கதி - நடையிலே வாயுவினது சஞ்சாரத்தை யொத்த [விரைந்த], பரிமா நான்குஉம்- (துரியோதனனதுதேர்க்) குதிரைகள் நாலும், சிரம் துணிய - தலை அறுபடவும்,-மா மொட்டு ஒடிந்து கொடுஞ்சியுடன் மான் தேர் சிதைய - பெரிய மொட்டு என்னுந் தேருறுப்பு ஒடிபட்டுப் கொடுஞ்சியென்னும் உறுப்போடு குதிரைகள்பூட்டிய (துரியோதனனது) தேர் அழியவும், மார்பு உருவ - (அவன்) மார்பு துளைபடவும், நாமம் கணைகள்-அச்சத்தை விளைக்கும்படியான அம்புகளை, பலபட - பலவாக, வில் உகைத்தான் - (தனது) வில்லினின்று செலுத்தி,(வீமன்), நின்று நகைத்தான் - எதிர்நின்று (அவனது தோல்வியை நோக்கிச்)சிரித்தான்; (எ - று,) இங்கே, நகைப்பு-பகைவனை இகழ்தல் காரணமாகப் பிறந்தது. இப்பாட்டுக்கு 'வீமன்' தோன்றா எழுவாயென்பதை, அடுத்தகவியில் "அவனைப் பெற்றெடுத்தோன்" என்பதனா லறிக. வலம்புரித் தெரியலோன் என்பது-கைத்தனு, பரி, தேர், மார்பு என்றநான்கோடும் இயையும். மொட்டு - தேரில்வீரன் ஏறியிருக்கும் ஆசன மென்றும்,தேரின்கூம்பு என்றும் கூறுவர். கொடிஞ்சி - தாமரை முகைவடிவாகச் செய்ததேருறுப்பு என்றனர் நச்சினார்க்கினியர். மா என்னும் விலங்கின் பொதுப்பெயர்,னகரமெய்ச்சாரியை பெற்று இங்கே சிறப்பாய்க் குதிரையை உணர்த்திற்று. (163) 25.-சகுனிமுதலியோர் துரியோதனனை எடுத்தணைத்தல். முன்னாளமரிற்கடோற்கசன்றான்முனைவெஞ்சரத்தான்மூழ்குவித்தான் பின்னாண்மீளப்பிறைக்கணையாற்பிறந்தாளவனைப்பெற்றெடுத்தோன் என்னாவிரங்காமெய்ந்நடுங்காவெடுத்தாரணைத்தார்சகுனியுமப் பொன்னார்தடந்தேர்ச்சல்லியனுமுதலாவுள்ளபூபாலர். |
(இ - ள்.) (அப்பொழுது), சகுனியும்-, பொன் ஆர் தட தேர் சல்லியன் உம்-பொன்னினா லமைந்த [அழகுநிறைந்த] பெரிய தேரையுடைய சல்லியனும், முதல் ஆஉள்ள - முதலாகவுள்ள, அ பூபாலர்-அந்த [துணை வந்த] அரசர்கள், -'முன் நாள்அமரில்-முந்தின [மூன்றாவது] நாட் போரில், கடோற்கசன்-, முனை வெம் சரத்தால்- கூர் நுனியையுடைய கொடிய அம்புகளால், மூழ்குவித்தான்-(நமது துரியோதனனை)முழுகச் செய்தான்; பின் நாள் - அடுத்த இந்நாளில், அவனை பெற்று எடுத்தோன்; -அக்கடோத்கசனைப் பெற்ற தந்தையான வீமன், பிறை கணையால் மீள பிளந்தான்-அர்த்தசந்திரபாணங்களால் மறுபடியும் (இத்துரியோதனனைப்) பிளந்திட்டான்,'என்னா - என்று சொல்லி, இரங்கா - மன |