மிரங்கி, மெய்நடுங்கா - (இவனுக்கு என்னாகுமோ என்று எழுந்த அச்சத்தால் தம்) உடம்பு நடுங்கி, எடுத்தார் அணைத்தார் - (அத் துரியோதனனை) எடுத்து அணைத்துக்கொண்டார்கள்; (எ - று.) கடோற்கசன் துரியோதனனை முனைவெஞ்சரத்தால் மூழ்குவித்ததைக் கீழ்ச்சருக்கத்தில் "துவசம்பிளந்து" என்ற ஏழாங்கவியிற் காண்க. சரத்தால் மூழ்குவித்தல்-மேலே அம்புமழைபொழிந்து நிறைத்து அவனுருத்தெரியாது மறைத்தல். இங்கே ' பிறைக்கணை' என்றதனால், கீழ்க்கவியில் 'நாமக்கணை' என்றது-பிறைமுக வம்புகளை யென்க. அச்சல்லியனென இயைத்தால், அகரச்சுட்டு-வஞ்சனைவழியால் துரியோதனனுக்குத் துணைவனான தன்மையைக் குறிக்கும். சல்லியன் தேர்செலுத்துதலில்வல்லவ னாதலால், தேர்ச் சல்லிய னெனப்பட்டான். (164) 26.-துரியோதனனன் தளர்ந்ததுகண்டு அவன்தம்பிமார் போரில்மூளுதல். தம்முன்றளர்ந்தநிலைகண்டுதரியாராகித்தம்பியர்க ளெம்முன்பொருதற்கிசைவார்களிசைவீரென்றென்றிகல்கூறித் தெம்முன்செவிகள்செவிடுபடச்சிறுநாணெறிந்துதேர்கடவி முன்முன்கடிதிற்கணைபொழிந்தார்முகுந்தன்றடுத்தமுகில்போல்வார். |
(இ - ள்.) தம் முன் - தங்கள் தமையனாகிய துரியோதனன், தளர்ந்த- தளர்ச்சியடைந்த, நிலை-நிலைமையை, கண்டு - பார்த்து, தம்பியர்கள்-(அவனது) தம்பிமார்கள் பலர், தரியார் ஆகி - மனம் பொறாதவர்களாய், எம்முன் பொருதற்குஇசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி - 'எங்களெதிரிற் போர்செய்வதற்குப் பொருந்துபவர்கள் பொருந்துவீர்களாக' என்று பலமுறை (தங்கள்)வல்லமையை யெடுத்துச்சொல்லி, தெவ் முன் - பகைவர்களெதிரில், செவிகள் செவிடுபட சிறு நாண் எறிந்து - (கேட்பவரின்) காதுகள் (ஒலிமிகுதியால்) செவிடாகும்படிசிறிய வில்நாணியைத் (தம் கைவிரலால்) தெறித்து (ப்பேரொலியை உண்டாக்கி), தேர்கடவி-(தம்தம்) தேரைச் செலுத்திக் கொண்டு, முன் முன் - (ஒருவர்) முன்(ஒருவராக) முந்திவந்து, கடிதின் - விரைவாக, முகுந்தன் தடுத்த முகில் போல்வார் -கண்ணபிரானால் (கோவர்த்தனமலையைக்கொண்டு) தடுக்கப்பட்ட மேகம்போல்பவர்களாய், கணை பொழிந்தார்-அம்புமழையைச் சொரிந்தார்கள்; (எ-று.) இரண்டாம்அடி-வீரவாதம். முன்முன்வருதல், போரில் அவர்களுக்கு உள்ள ஊக்கத்தை விளக்கும். முகுந்தன் தடுத்த முகில் போல்வார் என்ற உவமை, அவர்கள்வீமனை ஒன்றுஞ்செய்யமாட்டாமல் அவனால் எளிதில் வெல்லப் படுதலைக் குறிக்கும்.தம்முன் - தமக்குமுன்பு பிறந்தவன்: முன்-காலவாகுபெயர். தெவ்+முன்=தெம்முன்.இசைவார்கள் இசைவீர்-முன்னிலையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.இச்செய்யுளில் இனவெதுகை காண்க. (165) |