பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்129

படிந்து கடல்நீரை வறட்டு மென, யானைச்சேனையால் மேலெழுப்பட்ட தூளிகளின்
மிகுதியைக் கூறியவாறு. தார்முரசு - மாலையையணிந்தமுரச மென்று உரைப்பாரு
முளர். தானும் வேழமுமாகி எதிர்சென்றான் - உயர்திணையும் அஃறிணையும்
விரவிச் சிறப்பினால் உயர்திணைஒருமை முடிபேற்ற திணைவழுவமை தி. பி-ம்:-
சங்கமெழத் தாரைகள் முரசார்ப்ப முழவிம்ம.                         (173)

         35.-கடோற்கசனுடைய வேழப்படைத்தொழிலும்
             பகதத்தனுடைய வேழப்படைத்தொழிலும்.

மைபோலார்த்து மும்முறைதானமழைசிந்திக்
கைபோய்முட் டிக்கையொடுதத்தங்கால்வீசி
மெய்போல்வெம்போர்செய்தனவீரன்விறல்வேழம்
பொய்போனின்றவருபகதத்தன்போர்வேழம்.

     (இ-ள்.) வீரன் - வீரத்தன்மையுள்ள கடோற்கசனது, விறல் - (மாயை)
வலிமையினாலாகிய, வேழம்-யானைகள்,-மைபோல் ஆர்த்து - மேகங்கள்போல
முழங்கியும், மு முறை தானம் மழை சிந்தி-மூன்றிடங்களின்றும் மதநீர்மழையைச்
சொரிந்தும், கை போய் கையொடு முட்டி - முன் சென்று (தம்) துதிக்கையால்
(பகையானைகளின்) துதிக்கையோடு மோதியும். தம் தம் கால் வீசி - தம் தமது
கால்களை வீசியும், மெய் போல் வெம் போர் செய்தன - உண்மையான
யானைகள்போலக் கொடியபோரைச் செய்தன; வரு - (எதிர்த்து) வந்த,பகதத்தன் -
பகதத்தனது, போர் வேழம் - போருக்குரிய உண்மையான யானைகள், பொய்
போல் நின்ற - (கீழக்கூறிய முழக்கம் முதலியன ஒழிந்து) பொய் யானைகள்போ
லாயின;(எ-று.)

     தொழிலால் பொய் மெய்யும், தொழிலொழிதலால் மெய் பொய்யும் ஆயின
வென வியப்புத்தோன்றக் கூறினார். தாநம் - வடசொல்.

36.- கடோற்கசனுடைய மாயாவீரர்வெல்லுதல். 

நின்றார்நின்றபடிகடிதாகநெடிதோடிச்
சென்றார்கண்டசிந்துரம்யாவுந்தீயம்பிற்
கொன்றார்மற்றக்கொற்றவர்யாருங்கொலையுண்டார்
வென்றாரன்றோவீமன்மகன்சேனையில்வீரர்.

     (இ-ள்.) வீமன்  , மகன் சேனையில் - கடோற்கசனது யானைச்
சேனையிலுள்ள, வீரர் - (மாயையினாலாகிய) வீரர்கள், நின்றார்-எதிர்த்து
நின்றார்கள்;நின்ற படி - (அவ்வாறு) நின்ற முறைமையாகவே, கடிது
ஆக-வேகமாக, நெடிதுஓடி சென்றார் - மிகுதியாக ஓடி (நெருங்கி)ப்
போனவர்களாய், கண்ட சிந்துரம்யாஉம் - (எதிரிற்)காணப்பட்ட(பகதத்தனது)
யானைகளை யெல்லாம், தீ அம்பின்கொன்றார் - கொடிய (மாயையாலாகிய)
அம்பினால் கொன்றுவிட்டார்கள்; மற்று -பின்பு, அ கொற்றவர் யார்உம்-
அவ்யானைகளின்மேலுள்ள (பகதத்தனைச்சார்ந்த)வீரர்களெல்