பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்131

39- காந்தாரி தம்புதல்வர் ஐவர் இறந்ததற்குக் கலங்கிக்
கண்ணீர்வடித்துச் சோர்வுறல்.

பூண்பாய்மார்பிற்புத்திரர்தம்மைப்பொலிவோடுங்
காண்பாளைவர்க்கண்டிலள்பெற்றகாந்தாரி
சேண்பாலெய்தச்சென்றனரோவென்றிருகண்ணீர்
தூண்பாலாகிச்சோர்தரவுள்ளஞ்சோர்வுற்றாள்.

     (இ-ள்.) பெற்ற-(துரியோதனாதியர் நூற்றுவரைப்) பெற்ற (தாயான), காந்தாரி-,
பூண் பாய் மார்பின் புத்திரர்தம்மை - ஆபரணங்கள் பரவிய மார்பையுடைய (தன்)
பிள்ளைகளையெல்லாம், பொலிவோடுஉம்-மகிழ்ச்சியுடனே, காண்பாள் -
(தினந்தோறும்) காண்பவள், ஐவர் கண்டிலள்-(அன்றையதினம் அவர்களுள்)
ஐந்துபேரைக் காணாதவளாய்,-சேண் பால் எய்த சென்றனர்ஒ என்று-
'வீரசுவர்க்கத்தினிடத்தை அடையப் போயினார்களோ?' என்றுசொல்லி, இரு கண்
நீர் தூண் பால் ஆகி சோர்தர - (தன்) இரண்டு கண்களினின்றும் நீர் தூணின்
தன்மையை யொத்து [பெருந்தாரையாக]ப் பெருக, உள்ளம் சோர்வு உற்றாள்-
மனத்தளர்ச்சியை யடைந்தாள்; (எ-று.)

     காந்தாரி-திருதராட்டிரனது மனைவி: சகுனியின் உடன்பிறந்தவள்.
தூண்பாலாகி-(தான்) தூண்போலசைவற்று எனினுமாம். சென்றனரோ, ஓகாரம்-
இரக்கம். சேண்-ஆகாயம்; சுவர்க்கத்துக்கு இடவாகுபெயர்.            (178)

                     40.-காந்தாரி வருந்தியது

கொன்னேகுந்திமைந்தரிருக்கக்கொலையுண்டீர்
முன்னேமுன்னுமுன்னமுடிந்ததின்றென்னா
மின்னேயென்னமெய்குலையாமண்மிசைவீழ்ந்தாள்
என்னேயென்னேயென்றினையாநின்றென்செய்தாள்.

     (இ-ள்.) 'குந்தி மைந்தர்-பாண்டவர்கள் ஐவரும், கொன்னே இருக்க-
அழிவடையமாலேயிருக்க, கொலை உண்டீர்-(நீங்கள்மாத்திரம்) கொலைப்பட்டீர்கள்;
முன்னே முன்னும் முன்னம் - முன்னே (அவர்கள்) எண்ணின எண்ணம், இன்று
முடிந்தது-இன்றைக்குப் பலித்தது', என்னா-என்று சொல்லி, மெய் குலையா-உடம்பு
நடுங்கி, - மின்னே என்ன-மின்னல் விழுவதுபோல, மண்மிசை வீழ்ந்தாள்-
தரையிலே விழுந்து, என்னே என்னே என்று-இது என்னதுக்கம்! என்னதுக்கம்!!
என்று, இனையா நின்று-மனம் வருந்திநின்று,  என்செய்தாள்-என்னபாடுபட்டாள்!
(எ-று.) - மிகுந்த விசன மடைந்தாள் என்றபடி.

     திருதராஷ்டிரனது 'மனைவியாகிய தனக்குப் பாண்டுவின் மனைவியாகிய
குந்தியினிடம் உள்ள பங்காளிக்காய்ச்சலால், 'குந்திமைந்தர்' என்றாள்; (ஆதியிலும்
குந்திக்கு முதலில் பிள்ளை பிறந்தது கேட்டு இவள் மிகப்பொறாமையுற்றுத் தன்
கருக்கொண்ட வயிற்றைக் கல்லாற் குத்திக்கொண்டது காண்க.) முன்னே முன்னும்