முன்னம்-என்மக்களைக் கொல்லவேண்டுமென்ற எண்ணம் - என்னே என்னே- சோகக்குறிப்பு. மாத்திரியினிடம் பிறந்த நகுல சகதேவரையும் சேர்த்து 'குந்திமைந்தர்' என்று இங்கே அபேதமாகக் கூறியது, அந்த மாத்திரிக்குப் புதல்வரைப் பெறும் மந்திர முபதேசித்தவள் குந்தி யாதலாலும், பாண்டுவோடு மாத்திரி சககமநஞ்செய்து இறந்துவிட அவ்விருவரையும் குந்தியே அன்போடுவளர்த்தன ளாதலாலும் என்க. பி-ம்:- முடிந்ததெனமுன்னா. முடிந்ததின்னென்னா. (179) 41- கவிக்கூற்று: காந்தாரி அன்றுதான் வருத்தமின்னதென்று அறியத் தொடங்கினாளெனல். வீறார்கற்பின்மின்னனையாளைவிறல்மைந்தர் ஏறாமன்றிலேற்றவுமாமன்றென்னாதாள் ஊறாவன்பிற்கண்ணறைமன்னனொருதேவி யாறாவெள்ளத்துன்புறவன்றேயடியிட்டாள். |
(இ-ள்.) வீறு ஆர்-பெருமைமிக்க, கற்பின்-பதிவிரதா தருமத்தையுடைய, மின்அனையாளை-மின்னற்கொடியையொத்த திரௌபதியை, விறல் மைந்தர் - வலிமையையுடைய (தன்) பிள்ளைகளான துரியோதனனும் துச்சாதனனும், ஏறா மன்றில் ஏற்றஉம்-(பெண்கள்) செல்லத்தகாத இராசசபையிலே (பலாத்காரமாகச்) செலுத்தவும், ஆம் அன்று என்னாதாள்-(இது) தக்கதன் றென்று சொல்லாதவளாகிய, ஊறா அன்பின் - சிறிதும் உண்டாகாத அன்பையுடைய, கண்ணறை மன்னன் ஒருதேவி-பிறவிக்குருடனான திருதராட்டிரனது ஒப்பற்ற மனைவியான காந்தாரி, ஆறா - தணியாத, துன்பு-(புத்திர)சோகமாகிய, வெள்ளம்-வெள்ளத்திலே, உற- சேர்வதற்கு, அன்றே அடி இட்டாள் - அன்றைத்தினமே கால்வைத்தாள் [தொடங்கினாள்]; (எ-று.) துரியோதனாதியர் நூற்றுவருள் சிலர் முந்தி இறந்த தினம் அத்தினமேயாதலால், 'அன்றே யடியிட்டாள்' என்றார். தகுதியன்றென்று சொல்லாதவளென்றதனால், தகுதியென்று உடன்பட்டவளென்பது பெறப்படும். அத்தீவினையின்பயனே புத்திரசோகத்தை யனுபவிக்கச்செய்த தென்றவாறு. கண்ணறைமன்னனொருதேவி-கண்ணில்லாதவனுக்கு ஏற்றதேவி. ஏற்றவும், உம்- இழிவுசிறப்பு. (180) 42.-சூரியோதய வருணனை. ஆளாய் மாய்ந்த வேந்தரி டந்தோ றழுமோசை கேளா வெப்போ தேகுவ மென்றக் கிளர்கங்குன் மீளா வோடிற் றத்திசை வானோன் மிளிர்சென்னிச் சூளா மணிபோல் வந்தது காலைச் சுடரம்மா. |
(இ-ள்.) ஆள் ஆய் மாய்ந்த - வீரர்களாயிருந்து இறந்த, வேந்தர்- அரசர்கள்பொருட்டாக, இடம் தோறு அழும்-பல இடங்களிலும் அழுகிற, ஒசை- ஓசையை, கேளா-(நாம்) கேட்காமல், எ போது ஏகுவம் என்று - எப்பொழுது நீங்குவோ மென்று கருதி, |