இதுவும், மேற்கவியும் - குளகம். (இ - ள்) அரன் நின்றனன் போல - சிவபிரான் (போருக்கு வந்து) நின்றாற்போல, அவன் நின்ற தேர் ஒத்த அணி தேர்மிசை பொர நின்ற - அச்சிவபிரான் (திரிபுர சங்காரகாலத்தில்) ஏறி நின்ற (பூமியாகிய) தேரைப்போன்ற அழகியதொருதேரின்மேலேறிப் போர்செய்யவந்துநின்ற, நதிமைந்தனொடு - கங்காநதியின் புத்திரனான வீடுமனுடனே, சென்று முனை நின்று பொர எண்ணி - போய் எதிரில்நின்று போர்செய்யக் கருதி,-சரம்நின்ற குனி சாபம் விசயன் தனை கொண்டு - அம்புகள் (அழியாது) நிலை பெற்ற வளைவான (காண்டீவ) வில்லையுடைய அருச்சுனனைக் கூடஅழைத்துக்கொண்டு, சங்கம் குறித்து - (தனது பாஞ்சசன்னியமென்னுஞ்) சங்கை முழக்கிக்கொண்டு, உரம் நின்ற அவன்நெஞ்சு உடை பாகன் - தைரியம் நிலைபெற்ற அவ்வருச்சுனனது மனத்திற்கு ஏற்ற தேர்ப்பாகனான கண்ணபிரான்,-மான் தேர் உகைத்து ஊர - குதிரைகள் பூட்டிய தேரை நடத்திக்கொண்டு செல்ல,-(எ-று.)-'ஊர்கின்ற' (6) என்பதனோடு இயையும். அரனுவமை, அழித்தற்கு. உரம் - ஞானபலமென்பாருமுளர். பி-ம்; உரநின்ற வன்னெஞ்சுடைப் பாகன்- (186) 6.-தேர்வந்தவளவில் கலிங்கேசர்முதலோர் குறுக்கிட்டு அடிபட்டுப் புண்படுதல் ஊர்கின்றதேரோடியுயர்கங்கைமகனின்றவொருதேருடன் சேர்கின்றவெல்லைக்கலிங்கேசர்முதலானதெம்மன்னர்போய் நேர்கின்றவிசயன்றனுடன்மோதியவனேவுநெடுவாளிபட் டீர்கின்றபுண்வாயில்வார்கின்றசெந்நீரினிடைமூழ்கினார். |
(இ-ள்.) ஊர்கின்ற - (இவ்வாறு கண்ணன்) செலுத்துகிற, தேர் - (அருச்சுனனது) இரதம், ஓடி - வேகமாகச் சென்று, உயர் கங்கை மகன் நின்ற ஒருதேருடன் - சிறந்த கங்காபுத்திரனான வீடுமன் நின்ற ஒப்பற்ற தேருடனே, சேர்கின்ற எல்லை(எதிர்த்து)ச் சேர்கிற சமயத்தில்,-கலிங்க ஈசர் முதல் ஆனதெவ்மன்னர் - கலிங்கதேசத்தலைவர்கள் முதலாகிய பகையரசர்கள், போய் - (எதிர்த்துப்) போய், நேர்கின்ற விசயன் தனுடன் மோதி - எதிர்ப்பட்ட அருச்சுனனுடனே போர்செய்து, அவன் ஏவு நெடு வாளி பட்டு-அவ்வருச்சுனன் பிரயோகித்த நீண்ட பாணங்கள் (தம்மேல்) தைத்து, ஈர்கின்ற - (தம்உடலைப்) பிளக்கிற, புண் வாயில் - புண்களின் வழியே, வார்கின்ற - பெருகுகிற, செம் நீரினிடை - இரத்தத்திலே, மூழ்கினார்-அழுந்தினார்கள்; (எ-று.) (187) 7.-கலிங்கேசர் அலைப்புண்டதுகண்டு வீடுமன் அருச்சுனனை எதிர்த்து வில் முதலியன அறுபடுதல். செல்லுங்கலிங்கேசரலையுண்டநிலைகண்டுசிவனென்றுபார் சொல்லும்பெருஞ்செம்மல்பல்லங்களவன் மேற்றொடுத்தேவினான் |
|