அப்பகைவர்களின் மார்பு தோறும் வெளிப்பட்டு ஓடும்படி. செற்றான்- அழித்தான்;(எ-று.) அளகேசன் - அளகாபட்டணத்துக்குத்தலைவன் - பாண்டவர் வனவாசஞ்செய்கையில், அங்கு வந்து விழுந்த ஒருசிறந்த பூவைப் பார்த்து ஆசைப்பட்டுத் திரௌபதி, அப்படிப்பட்ட பூவைக் கொண்டுவந்து தரும்படி வேண்ட, வீமன் குபேரனது அளகாபுரியிற் சென்று அங்குள்ள சோலையிற் பூப்பறிக்கத் தொடங்கினபொழுது, குபேரன் கட்டளையால் யஷர் முதலிய பலர் சேனையோடு வந்து எதிர்க்க, அவர்களை யெல்லாம் இவன் ஒருவனாகவே வென்றிட்டா னென்பது, கீழ்ப்புட்பயாத்திரைச்சருக்கத்து வரலாறு. தனி ஆண்மையான் - அசகாயசூரன் - பவர்கொண்ட-(பவழக்)கொடியைக்கொண்ட என்றலும் ஒன்று. பி - ம்:- மார்பு தோளும். 9. | துச்சாதனன்றம்பிமார்மைந்தர்மற்றுஞ்சகுனிசல்லியன் எச்சாபமுடிமன்னரும்பின்னருந்துன்னியெதிர்சீறினார் அச்சாபமொன்றாலுமன்றவ்வவர்க்கம்பனேகந்தொடுத் துச்சாசனஞ்சொல்லிநின்றானவ்வடன்மன்னருடனோடவே. |
(இ-ள்.) பின்னர்உம்-பின்பு, துச்சாதனன் - துச்சாசனனும், தம்பிமார்-(அவனது) தம்பியர் பலரும், மைந்தர்-(அவர்களுடைய) புத்திரர்களும், மற்றுஉம்-இன்னும், சகுனி-சகுனியும், சல்லியன்-சல்லியனும், சாபம் முடிஎ மன்னர்உம்- வில்லலையேந்திய கிரீடாதிபதிகளான அரசர்கள்பலரும், எதிர் துன்னி- வீமனெதிரில்வந்து நெருங்கி, சீறினார்-கோபித்துப் போர்செய்தார்கள்; (அப்பொழுதுவீமன்), அ சாபம் ஒன்றால்உம் - அந்தத் (தனது) ஒரு வில்லைக் கொண்டே, அன்று-அப்பொழுது, அ அவர்க்கு-(வந்து எதிர்த்த) அந்தந்த அரசர்களுக்குக்கெல்லாம், அனேகம் அம்பு தொடுத்து-(ஒவ்வொருவர்க்கும்) பல பாணங்களைச் செலுத்தி, அ அடல் மன்னர் உடன் ஓட-வலிமையையுடைய அந்த அரசர்கள் ஒருசேர விரைந்து ஓடிப்போம்படி, உச்சாசனம் சொல்லி நின்றான் - (கொல்வேன்கொல்வே னென்று வீரவாதமாகக்) கொலை கூறி நின்றான்; (எ-று.) துஸ்ஸாஸநன்-கொடிய கட்டளையுடையான். உச்சாஸனம் - கொலை: மேலான ஆக்கினையென்றுமாம்-கீழ்ப்பாட்டில் 'தவர்கொண்டு' என்றதை நோக்கி, 'அச்சாபம்' எனச்சுட்டினார். 'சீறினார்' எனக் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். (190) 10.-தம்பிமார்ஓடிவருவதுகண்டுசீறித்துரியோதனன்வீமனைநெருங்குதல். செருத்துப்புடைத்தோடிவருதம்பியர்க்கண்டுசெற்றத்துடன் கருத்துப்புகைந்துட்கலங்கிக்கடைக்கண்கள்கனல்காலவே மருத்துத்தருங்காளைநின்றானையின்றாவிமலைவேனெனா வுருத்துத்தடந்தேரின்மிசைவந்தடுத்தானுரககேதனன். |
(இ-ள்.) செருத்து-போர்செய்து, புடைத்து-(வீமனால்) அடிபட்டு, ஓடி வரு- (புறங்கொடுத்து) ஓடிவருகிற, தம்பியர்-(தன்) |