வீரம்புனை - பராக்கிரமத்தை ஆபரணமாகக்கொண்ட என்க. பூரிஸ்ரவா: என்னும் வடசொல், திரிந்தது: இவன் சோமதத்த னென்பவனதுமகன்; அதனால் சௌமதத்தியென்றும் ஒரு பெயர் பெறுவன். இவன் துரியோதனன்பக்கத்து அதிரதவீரரில் ஒருவன்-பி-ம்: அலம்வர. இதுமுதல் இச்சருக்கம்முடியுமளவும் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் மாங்கனிச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (194) 14.-அதுகண்ட சாத்தகி பூரிசிரவரவோடு பொருதல். இவனாண்மையைமதியாதெதிரெய்தானெனவெய்திற் பவனாகதிபெறுதேரி னனளினாபதியிளவல் அவனாருயிர்கவர்வேனெனவம்பொன்றுதொடுத்தான் தவனான்மறைதெரிபூரிசவாவுஞ்சரம்விட்டான். |
(இ-ள்.) (அப்பொழுது), நளினாபதி இளவல் - திருமகள் கணவனான கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகி, (வீமன்மேல் பூரிசிரவன் அம்பெய்தது கண்டு),இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான் என -'இவ்வீமனது பராக்கிரமத்தைநன்கு மதிக்காமல் (பூரிசிவரன்) இவனெதிரில் அம்பு தொடுத்தான்' என்று. வெய்தின்- கடுமையான கோபத்தோடு, பவனாகதி பெறுதேரினன் - வாயுவேகத்தைப்பெற்றதேரைச் செலுத்தியவனாய் (வந்து), அவன் ஆர் உயிர் கவர்வேன் என-'அந்தப்பூரிசிரவனது அருமையான உயிரை (நான் இப்பொழுது) வாங்குவேன்' என்று(வீரவாதஞ்) சொல்லி, அம்பு ஒன்று தொடுத்தான் - ஒருபாணத்தை (அவன்மேற்)செலுத்தினான்; தவனால் மறை தெரி பூரிசவாஉம் - தவஞ்செய்து அதனால்(அஸ்திரத்துக்குரிய) மந்திரங்களையறிந்துள்ள பூரசிரவனும், சரம் விட்டான்-(சாத்தகியின்மேல்) எதிரம்பு தொடுத்தான்; (எ-று.) பவநாகதி - வடமொழித்தொடர், எதுகைநயம் நோக்கி நீண்டது. நளிநா - தாமரைமலரில் வாழ்பவள்: அவள்கணவன் - நளிநாபதி; வடசொற்றெடர். தவன்=தவம்: இறுதிப்போலி; இனி, உயர்திணைப்பெயராகக்கொண்டு, தவஞ்செய்துள்ள முனிவனால் மந்திரங்களை யறிந்த எனினுமாம். (195) 15.-மூன்றுகவிகள்-சாத்தகியும் பூரிசிரவாவும் முதலில் விற்போர்புரிந்து பிறகு வாட்போர்புரிதலைக் கூறும் ஏணற்றுயர்வரைமார்பினரிருவோர்களுமொருவோர் காணற்றொழிலரிதாமுறைகடிதிற்கணைதொடவே நாணற்றனவெஞ்சாபமுநடுவற்றனவெனினுங் கோணற்றனபுகல்வானொருகுறையற்றதவர்க்கே. |
(இ - ள்) ஏண் அற்று - வளைவு இல்லாமல், உயர் - நீண்டு வளர்ந்துள்ள, வரை -மலைபோல (வலியதாய்)ப் பரந்த, மார்பினர் - |