மார்பையுடையவர்களாகிய, இருவோர்கள்உம் - (சாத்தகி பூரிசிரவா என்னும்) இருவரும், ஒருவோர் தொழில் காணல் அரிது ஆம் முறை - ஒருவரும் (தமது) தொழில் வகையைக்காண முடியாததாகும்படி, கடிதின் - விரைவாக, கணை தொட - அம்புகளை யெய்ய,-(அதனால்), நாண் அற்றன - (இருவரது) வில்நாணிகளும் அறுந்தன; வெம் சாபம்உம் நடு அற்றன - கொடியவிற்களும் நடுவிலே துணிபட்டன; எனின்உம்-என்றாலும்[ஆயினும்], அவர்க்கு - அவ்விரண்டு வீரர்கள்விஷயமாக, கோண் அற்றன புகல்வான் - குற்றமில்லாத புகழ்மொழிகளைச்சொல்லுதற்கு, ஒரு குறை அரற்றது - சிறிதுகுறையும் இல்லை; (எ-று.) சிறிதும்பழியில்லாத புகழ் பெறும்படி இருவரும் பின்வாங்காமல் தம்மாலியன்றவளவுபோர்விளைத்தனரென்பதாம். வில்லையேந்துதல் வளைத்தல் நாணேற்றல்அம்பெடுத்தல் அதனைவில்லில் தொடுத்தல் பகைவர்மேல் விடுத்தல் முதலியதொழில்கள், செய்யுங் கைவிரைவால்எவர்க்கும்வகுத்துக் காணவொண்ணாதபடியிருந்தன என்பது இரண்டாம் அடியின்கருத்து. ஏண் அற்றுஉயர் மர்ர்பு என எடுத்து, குற்றமில்லாமற் சிறந்த மார்பு எனினுமாம். (196) 16. | ஒருகேடகவுரைதேறினருளமேயெனவமரிற் பொருகேடகநடவுங்கனபொற்றேர்மிசையிழியா முருகேடவிழ்தார்மார்பினர்முனைவாளமிரண்டோ டிருகேடகமிருகையினுமிருவோரு மெடுத்தார். |
(இ-ள்.) முருகு-வாசனையையுடைய, ஏடு அவிழ் தார்-பூவிதழ்கள் விரிந்த மாலையைத்தரித்த, மார்பினர் - மார்பை யுடையவர்களாகிய இருவோர்உம்-இந்த இரண்டுபேரும்,-ஒரு கேள் தக-ஒற்றுமையான சினேகம் பொருந்த, உரை தேறினர்- (ஒருவர்)பேச்சை(ஒருவர்) நம்புபவரான சினேகிதரது, உளம்ஏ என - மனம்போல, செய்தொழிலில் ஒற்றுமைப்பட்டு),-அமரில் போர்க்களத்திலே, நடவும்- செலுத்தப்படுகிற, கேடகம்பொரு-விமானத்தை யொத்த, கனம் பொன் தேர்மிசை- பெரியபொன்னாலாகிய தேர்களின்மேலிடத்தினின்றும், இழியா-இறங்கி,-முனை வாளம் இரண்டோடு-கூர்நுனியையுடைய இரண்டுவாளாயுதத்துடனே, இருகேடகம் - இரண்டு கேடகங்களையும், இரு கையின்உம் எடுத்தார் - இரண்டுட கையிலும் எடுத்துக்கொண்டார்கள்; (எ-று.) சமகாலத்தில் ஒருவரால் ஒருவர் வில் அறுபட்ட இவ்விருவரும் தேரினின்றுஇறங்குதல், வலக்கையில்வாளையும் இடக்கையிலே கேடகத்தையும் ஏந்துதல்என்னுந் தொழில்களை மாறுபடாது ஒருங்கேசெய்ததுபற்றி ஒருவருக்கொருவர்பகைவரான இவருக்கு, ஒருவரோடொருவர் ஒத்தமனமுள்ள உயிர்நண்பரை உவமைகூறினார். இரண்டாமடியில், கேடகம்-வடசொல்: வானத்திற் சஞ்சரிப்பதென்றகாரணம்பற்றி விமானத்தைக்காட்டும். இனி, கேடுஅகம்நடவும் என்பதற்கு-கேட்டைஅவ்விடத்திற் செலுத்தும் என்றும், கேட்டைத் தன்னிடத்தினின்று ஓட்டுகின்றஎன்றும் பொருளுரைத்தாருமுளர். கனபொன் - நிலைமொழி வட |